அஸ்ஸையித் ஷெய்க் காஸி பின் முஹம்மத்
இளவரசர் காஸி பின் முஹம்மத் 1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி ஜோர்தானில் பிறந்தார்கள். அஹ்லுல் பைத் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இளவரசர் காஸி மெய்யியல் துறை பேராசிரியராவார்கள் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் கலாநிதிப் பட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார்கள்.
ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ்வின் சிரேஷ்ட ஆலோகராக 2011ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்கள். இஸ்லாமிய கற்கைகளுக்கான ரோயல் அஹ்லுல் பைத் நிறுவகத்தின் நம்பிக்கையாளர் குழுவின் தலைராகவும் பதவி வகிக்கிறார்கள். அம்மான் பல்கலைக் கழகத்தின் முழுநேர பேராசிரியராகப் பணியாற்றுவதோடு அஹ்லுல் பைத் பல்கலைக் கழகம் ஜோர்தான் பல்கலைக்கழகம் என்பவற்றிலும் பேராசிரியராகவும் பணியாற்றினார்கள்.
கிறிஸ்தவ முஸ்லிம் உலகங்களுக்கு இடையிலான நல்லுறவை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட A Common Word Between Us and You என்ற நிகழ்ச்சித் திட்டம் மகத்தான வெற்றியளித்துள்ளது. இதில் நூற்றுகணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்பமிட்டுள்ளார்கள். இளவரசர் காஸி எட்டுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.
உலகின் பல்வேறு இடங்களிலும் சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளார்கள். அரபு, ஆங்கிலம், பிரென்ஞ் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ளார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்