கலாநிதி ஷெய்க் முஸ்தபா செரிக்
கலாநிதி முஸ்தபா செர்ரிச் 1952ம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி யூகோஸ்லாவியாவில் பிறந்தார்கள். எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர்கள் பொஸ்னியாவின் முன்னாள் தலைமை முப்தியாவார்கள்.
அரபு, பொஸ்னியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ளதோடு. துருக்கி, ஜேர்மன், பிரான்ஸ் மொழிகளிலும் பரீட்சயம் உண்டு. அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைத்துறையில் கலாநிதி பட்டத்தைப் பூர்த்தி செய்து உள்ளார்கள். பொஸ்னியாவின் தலைமை முப்தியாக 1999ம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்கள்.
கலாநிதி முக்கிய பல அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கிறார்கள். ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய பேரவை, இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக நம்பிக்கையாளர் சபை, இஸ்லாமிய கற்கைகளுக்கான அஹ்லுல் பைத் மன்றம் சமாதான ஆய்வுக்கான சர்வதேச ஆணைக்குழு, யுனெஸ்கோ போன்றவை அவற்றில் சிலவாகும்.
சமாதானம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் முஸ்லிம் அறிஞர்களிடம் இருந்து கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட A Common Word Between Us and You கடிதத்திலும் கலாநிதி செர்ரிச் கையொப்பமிட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு இரண்டு மகள்மாரும் ஒரு மகனும் உள்ளார்கள்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 46 ஆம் நபராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்