ஷெய்க் இல்யாஸ் அத்தார் காதிரி
மௌலானா இல்யாஸ் அத்தார் காதிரி 1950 ஆண்டு ரமழான் மாதம் 26ம் திகதி பாகிஸ்தான் நாட்டில் பிறந்தார்கள். இவர்கள் மௌலானா ஸியாஹுத்தீன் அஹ்மத் மதனி காதிரி அவர்களின் முரீத் ஆவார்கள். இவர்கள் மௌலானா பஸ்லுர் ரஹ்மான் அவர்களினால் காதிரியா, ரஸவியா, அத்தாரியா போன்ற தரீகாக்களின் கலிபாவாக நியமிக்கப்பட்டார்கள். மேலும் இஜாஸாவும் வழங்கப்பட்டது. இவர்கள் ஏராளமான கிதாபுகளை எழுதி உள்ளார்கள்.
இவர்களின் மூலம் ஏராளமானவர்கள் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள். தஃவதே இஸ்லாமி என்ற உலக இஸ்லாமிய தஃவா அமைப்பை உருவாக்கியவர்கள். தஃவதே இஸ்லாமி நடத்தும் வருடாந்த இஜ்திமாவில் 15 இலட்சம் மக்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்களின் வழி காட்டுதலின் மூலம் உருவாக்கப்பட்ட மதனி தொலைகாட்சி உலகெங்கும் தஃவா பணியை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறது. தஃவதே இஸ்லாமியின் இஸ்லாமிய பிரச்சாரங்கள் 150 நாடுகளில் நடைப்பெற்று வருகிறது.
English - தமிழ்