கலாநிதி ஷெய்க் ஜிப்ரீல் புஆத் ஹத்தாத்
கலாநிதி ஜிப்ரீல் புஆத் அல் ஹத்தாத் 1960ம் ஆண்டு லெபனானின் பைரூத் நகரில் பிறந்தார்கள். நியூ யோர்கிலுள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பிரான்ஸிய இலக்கியத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். 1997-2006 வரையிலான காலப்பகுதியில் இஸ்லாமிய கற்கைகளை மேற்கொண்டார்கள். தற்சமயம் புருணையில் வசித்துவரும் கலாநிதி ஜிப்ரீல் ஹத்தாத் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
Sunnipath இணையத்தளத்தின் ஊடாகவும் இவர்கள் நீண்டகாலம் கல்விப் போதனைகளை மேற்கொண்டு வந்தார்கள்.
ஜிப்ரீல் ஹத்தாத் மௌலானா செய்க் நாஸிம் அல் ஹக்கானி அவர்களின் முரீத் என்பதுடன் Eshaykh.com இணையதளத்திற்கு பாரியளவிலான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார்கள். செய்க் பராஸ் ரப்பானி அவர்களின் இணையதளத்தின் பத்வா பகுதிக்கும் இவர்கள் கணிசமாக ஒத்துழைப்புக்களை நல்கி வருகிறார்கள்.
இவர்கள் பல நூல்களை எழுதியும் பல நூல்களை மொழிப்பெயர்த்தும் உள்ளார்கள். ஸலபி அமைப்பை விமர்சித்து கலாநிதி ஜிப்ரீல் அல் ஹத்தாத் எழுதிய நூல் "அல்பானியும் அவரது தோழர்களும்" என்ற பெயரில் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2009 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் ஒருவராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஜிப்ரீல் ஹத்தாத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்