கலாநிதி ஷெய்க் தீன் முஹம்மத்
கலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்றில் 1956ஆம் ஆண்டில் பிறந்தார்கள். 1972ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கு அரபுக் கல்லூரியில் ஆலிம் கற்கையை பூர்த்தி செய்தார்கள். பின்னர் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். அல்-அஸ்ஹர் பலக்லைக்கழத்தில் இறை காதல் என்ற தலைப்பில் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வை சமர்ப்பித்தார்கள்.
கலாநிதி தீன் முஹம்மத் 1988ஆம் ஆண்டு முதல் அல்அஸ்ஹர் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் அரபு அல்லாத முஸ்லிம் ஒருவர் விரிவுரையாளராக பணியாற்றிய முதலாவது நபர் என்ற பெருமை கலாநிதி தீன் முஹம்மத் அவர்களைச் சாரும்.
பின்னர் இஸ்லாமாபாத் பல்கலைக்கழத்தில் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்கள். உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹாவட் பல்கலைக்கழகத்திலும் இவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார்கள். கலாநிதி தீன் முஹம்மத் கட்டார் சர்வதேச பல்கலைக்கழத்தில் ஷரீஆ பீடத்தில் துணை பீடாதிபதியாக தற்சமயம் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் எழுதிய இஸ்லாமிய சிந்தனை நூல் துருக்கி மொழியில் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டமை குறிப்பித்தக்கது.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் தீன் முஹம்மத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்