கலாநிதி ஷெய்க் அப்துல்லாஹ் பின் பையாஹ்
பேராசிரியர் அப்துல்லாஹ் பின் மஹ்பூல் பின் பையாஹ் 21ம் நூற்றாண்டின் சிறந்த நீதித்துறை அறிஞரராவார்கள். வட மேற்கு ஆபிரிக்க நாடான முரித்தானியாவில் 1935 ஆம் ஆண்டு பிறந்தார்கள். நான்கு மத்ஹப்களிலும் நிபுணத்துவ அறிவைப் பெற்றுள்ளார்கள். அதிலும் மாலிகி மத்ஹபின் சட்டதிட்டங்களில் மாபெரும் அறிஞராவார்கள்.
மிக இளம் வயதில் தியுனிஸியாவின் நீதிமன்றக் கட்டமைப்பில் பேராசிரியராக பணியாற்றினார்கள். பின்னர் முரித்தானியா திரும்பிய இவர்கள் அங்கே முரித்தானியாவின் கல்வி அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்கள். பின் முரித்தானியாவின் உப ஜனாதிபதியாக நியமனம் பெற்றார்கள்.
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்கள். இதே வேளை சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய சட்டப் பேரவையின் முக்கிய அங்கத்தவராகப் பணியாற்றுவதோடு ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய பேரவையிலும் பேராசிரியரின் வகிபாகம் பிரதானமானது.
சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்கள். குறிப்பாக சவுதி அரேபியாவில் நடைமுறையில் இருக்கும் ஸலபிஸ கோட்பாடுகளுடன் பின் பையாஹ் அவர்கள் உடன்படா விட்டாலும் அந்நாட்டு அரசாங்கமும் ஸலபி அறிஞர்களும் பேராசிரியரின் கருத்துக்களுடனும் உடன்படுகின்றமை விஷேட அம்சமாகும்.
இவர்கள் பல அறிஞர்களை உருவாக்கி உள்ளார்கள். புகழ் பெற்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் ஸெய்க் ஹம்ஸா யூசுப் கலாநிதி பின் பையாஹ்வின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 29 ஆம் நபராக ஷெய்க் பின் பய்யாஹ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்