ஷெய்க் கலாநிதி பத்ருதீன் ஹஸ்ஸுன்
கலாநிதி அஹமத் பத்ருத்தீன் ஹஸ்ஸுன் சிரியாவின் தலைமை முப்தியாவார்கள். ஷாபி சட்டத்துறையில் கலாநிதிப் பட்டதைதைப் பூர்த்தி செய்த கலாநிதி ஹஸ்ஸுன் 2005ம் ஆண்டில் சிரியாவின் தலைமை முப்தியாக நியமிக்கப்பட்டார்கள்.
முஸ்லிம்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட பல நிகழ்வுகளிலும் மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார்கள்.
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் முப்தி ஹஸ்ஸுன் உரை நிகழ்த்தினார்கள். “கொலைகளை நியாயப்படுத்த மதங்களைப் பயன்படுத்துவது தவறாகும்” என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கலாநிதி முப்தி அஹமத் பத்ருத்தீன் ஹஸ்ஸுன் 1949ம் ஆண்டு பிறந்தார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்