அஸ்ஸையித் ஷெய்க் அலவி மௌலானா
அஸ்ஸையித் அலவி மௌலானா அவர்கள் 1971 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை நாட்டில் வெலிகமை என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.
ஆரம்ப மார்க்க கல்வியை வெலிகமையில் உள்ள முர்ஸியா அரபிக் கல்லுரியில் கற்ற பின் மேலதிக மார்க்க கல்வியை பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் கற்றார்கள். இவர்கள் ஷரீஆ மற்றும் தஸவ்வுப் போன்ற கல்விகளை மக்கா, மதீனா, ஜித்தா போன்ற நாடுகளில் உள்ள தலைசிறந்த அறிஞர் பெருமக்களான அஸ்ஸையித் ஷெய்க் அலவி மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி கலாநிதி ஷெய்க் அப்துல் யமானி ஷெய்க் கலீல் இப்ராஹிம் ஷெய்க் ஆதில் அஸாம் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியவர்களிடம் கற்றார்கள்.
இவர்கள் பல நாடுகளுக்கு சென்று தஃவா பணி செய்து வருகிறார்கள். அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்குவானாக!
English - தமிழ்