அஸ்ஸையித் ஷெய்க் அஹ்மத் ஸாத்
ஸையித் அஹமத் ஸாத் அல் அஸ்ஹரி அல் ஹஸனி அவர்கள் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் பரம்பரையில் எகிப்தில் பிறந்தார்கள். இவர்களின் குடும்பம் பல இஸ்லாமிய அறிஞர்களை கொண்டது.
தங்களது தந்தையின் வழிநடத்தலில் இவர்கள் தம் 10ம் வயதில் அல்குர்ஆனை மனனம் செய்தார்கள். பின்னர் அரபி மற்றும் இஸ்லாமிய கல்விகளை கற்றார்கள். 17 வருடங்கள் கற்று இஸ்லாமிய கற்கையில் சிறப்பு பட்டதாரி ஆனார்கள். இஸ்லாமிய கற்கையில் கலைமாணிப்பட்டத்தையும் அல் அஸ்ஹரில் முதுமாணிக் கற்கையையும் பூர்த்தி செய்துள்ளார்கள்.
இவற்றுக்கு மேலதிகமாக, இவர்கள் பாரம்பரிய இஸ்லாமிய கல்விகளை பிரசித்தி பெற்ற பல இஸ்லாமிய அறிஞர்களிடம் கற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர், எகிப்தின் தலைமை முப்தி ஷெய்க் அலி ஜூமா, இந்தியாவை சேர்ந்த ஷெய்க் அஹ்மத் அலி அஸ்ஸுர்த்தி, எகிப்து அல் அஸ்ஹரின் ஷெய்க் உஸாமா அஸ்சையித், எகிப்தின் ஷெய்க் அப்துல் பைத் அல் கித்தானி, ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி, ஷெய்க் முஹம்மத் ஸாதிக் அல் அலவி, ஷெய்க் யூஸுப் அல் ரிபாய் இன்னும் பலர் உள்ளடங்குவர்.
ஸையித் அஹமத் ஸாத் அல் அஸ்ஹரி அவர்கள் தமது 13 ஆம் வயதில் இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அல் அல்பிய்யாவையும் 15 ஆம் வயதில் இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ரியாளுஸ் சாலிஹீனையும் மனனம் செய்தார்கள்.
இவர்கள் ஹதீஸ், ஷாபிஈ மத்ஹப் பிக்ஃ, தப்ஸீர், தசவ்வுப், வாழ்க்கை வரலாறு என பல துறைகளில் பல அறிஞர்களிடம் இருந்து அனுமதி (இஜாஸத்) பெற்றுள்ளனர்.
இவர்கள் 15ம் வயதில் தமது முதலாவது குத்பாப் பிரசங்கத்தை ஆரம்பித்தார்கள். தஃவாப் பணிகள் மீது உள்ள ஈடுபாட்டினால் பல நாடுகளிலும் பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, மலேசியா, ஸ்வீடன், என பல நாடுகளில் தஃவா பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தற்போது செய்க் அஹமத் ஸாத் அவர்கள் வட லண்டன் மத்திய பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றிவருகிறார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்