ஷெய்க் அஹ்மத் உமர் ஹாஷிம்
எகிப்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான பேராசிரியர் அஹமட் உமர் ஹாஸிம் 1941ஆம் ஆண்டு பிறந்தார்கள். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டு பட்டம் பெற்ற அவர்கள் 1983ஆம் ஆண்டு அல்-அஸ்ஹர் பல்கலைக்கழத்தின் இறையியல் துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்கள்.
1987ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை அவர் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழத்தின் வேந்தராகவும் கடமையாற்றினார்கள். முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாராக்கின் தீர்மானத்திற்கமைய அவர் எகிப்துப் பாராளுமன்றத்திற்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்கள்.
இவரது இஸ்லாமிய உரைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இஸ்லாமும் இளைஞர்களும் இஸ்லாமும் நல்ல பண்புகளைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட ஐந்துக்கும் அதிகமான புத்தகங்களை பேராசிரியர் அஹமத் உமர் ஹாஸிம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்