ஷெய்க் அஹ்மத் பபிகிர்
ஷெய்க் அஹ்மத் பபிகிர் அவர்கள் அபூபக்ர் அல் சூடானி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். சூடானில் பிறந்த இவர்கள் சூடான் நாட்டின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான ஷெய்க் பாதிஹ் கரிபுல்லாஹ் அவர்களின் மாணவராவார்கள். மாலிகி சட்டம், ஹதீஸ், அகீதா, தஃவா, தஜ்வீத், தசவ்வுப் போன்ற துறைகளில் கற்பிப்பதற்கான அனுமதி (இஜாஸத்) பெற்றுள்ளார்கள்.
1977 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்ற இவர்கள் தமது முதல் நிகழ்ச்சியை லண்டன் மத்திய பள்ளிவாசலில் நடாத்தினார்கள்.
தற்போது ஷெய்க் அஹமத் பபிகிர் அவர்கள் லண்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் யூசுப் இஸ்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய பாடசாலையின் இமாமாக பணியாற்றுகிறார்கள்.
ஷெயக் பபிகிர் அவர்கள் லண்டன் மாநகரில் அமைந்துள்ள பள்ளிவாசலில் சனிக்கிழமை இரவுகளில் பிரசங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக சேவைத் துறையில் இவர்கள் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். சொந்த நாடான சூடானில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்குடன் 2004ஆம் ஆண்டு உல்பா என்ற நிதியத்தை ஆரம்பித்தார்கள். உல்பா எயிட் தன்னார்வ நிறுவனத்தின் தலைவராக பணியாற்றுகின்ற ஷெய்க் பபிகிர் அவர்கள் அதன் சேவைகளை உலகம் பூராகவும் விஸ்தரித்துள்ளார்கள்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அஹ்மத் பபிகிர் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்