கலாநிதி ஷெய்க் முஹம்மத் அபீப் அல் அக்தி
கலாநிதி முஹம்மத் அபீப் அல் அக்தி புகழ்பெற்ற இளம் இஸ்லாமிய அறிஞராவார்கள். மலேசியாவில் பிறந்த அக்தி கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள மத்ரஸாவில் ஷாபி சட்டத்துறை தொடர்பான கல்வியைப் பூர்த்தி செய்தார்கள்.
நன்கு அறியப்பட்ட சட்டத்துறை மற்றும் ஸுபி அறிஞர்களான இமாம் அல் பதானி இப்னு மஹ்பூஸ் ஹஜினி ஹபீப் ஐத்ரூஸ் அல் ஹப்சி போன்றவர்கள் கலாநிதி முஹம்மத் அபீபின் முக்கிய ஆசிரியர்களாவார்கள். மத்திய கிழக்கு வட ஆபிரிக்கா குறிப்பாக மொரோக்கோ போன்ற பகுதிகளைச் சோந்த அறிஞர்களிடம் கற்று “இஜாஸா” எனப்படும் கற்பிப்பதற்கான அங்கீகார அனுமதியையும் பெற்றுள்ளார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு யின் பணிகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ள இவர்கள் இமாம் அவர்களின் ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதோடு இஸ்லாமியக் கற்கைகளுக்கான ஒக்ஸ்போர்ட் நிலையத்தின் ஆய்வாராகவும் உள்ளார்கள். கலாநிதி முஹம்மத் அபீப் அல் அக்தி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்