அஸ்ஸையித் ஷெய்க் அத்னான் கப்பானி
ஷெய்க் முஹம்மது அத்னான் கப்பானி அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள். லெபனான் தலைமை முப்தி மற்றும் முன்னால் லெபனான் முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆகியவர்கள் இவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களே.
இவர்கள் உலக நக்ஷபந்தி ஹக்கானி தரீக்காவின் தலைவர் மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களின் கலீபா ஆவார்கள். இஸ்லாமிய மார்க்க கல்வியில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள இவர்களுக்கு மௌலானா ஷெய்க் அப்துல்லாஹ் தகிஸ்தானி அன்னவர்களால் இஸ்லாமிய ஆத்மீக கற்கைகளை மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களிடம் இருந்து பிறருக்கு கற்பிப்பதற்கான அனுமதி (இஜாஸா) வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரியான இவர்கள் உலக கல்வி, ஆன்மீக கல்வி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் பல நூல்களையும் எழுதி உள்ளனர். அதில் "ஹகீகத்துல் ஹக்கானி", "புத்துஹாத்துல் ஹக்கானிய்யா" என்பன உள்ளடங்கும்.
தற்போது லெபனான் நாட்டில் வசித்து வரும் இவர்கள் இஸ்லாமிய தஃவா பணியை பல நாடுகளுக்கு சென்று மிக சிறப்பாக செய்து வருகிறார்கள். குறிப்பாக கீழைத்தேய நாடுகளுக்கு சென்று இஸ்லாமிய பாரம்பரிய கொள்கைகளான சமாதானம், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் அயராது செயற்பட்டு வருகிறார்கள். அத்தோடு மௌலானா ஷெய்க் நாஸிம் அவர்களின் அறிவுரைகளையும் உபதேசங்களையும் முரீதுகளுக்கு கற்று கொடுத்து வருகின்றனர்.
அல்லாஹ் அன்னாருக்கு நீண்ட ஆயுளை வழங்கி மென்மேலும் இஸ்லாத்திற்காக அயராது உழைக்க அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: இன்திகாப் ஸபர்
English - தமிழ்