ஷெய்க் அபூபக்ர் அஹமத்
ஷெய்க் அபூபக்கர் முஸலியார் அவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் காந்தபுரம் என்ற ஊரில் 1939ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி பிறந்தார்கள். இவர்கள் இஸ்லாமிய பட்டப்படிப்பை வேலூர் பாக்கியதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பூர்த்தி செய்தார்கள். சிறந்த அறிஞர்களிடம் இவர்கள் கல்வி கற்றார்கள். 1964ம் ஆண்டு மங்கத் ஜும்ஆ மஸ்ஜிதில் முதர்ரிஸ் ஆக கடமையை ஆரம்பித்தார்கள்.
இவர்கள் அகில இந்திய ஜம்மியத்துல் உலமா சபையின் கௌரவ செயலாளராகவும், கேரளா ஜம்மியத்துல் உலமா சபையின் கௌரவ செயலாளராகவும், மர்கஸுஸ் ஸகாஃபதி அரபுக் கலாசாலையின் அதிபராகவும் கடமையாற்றுகிறார்கள் இவர்கள் ஏராளமான ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இஸ்லாமிய புத்தகங்களும் எழுதி உள்ளார்கள். பல சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்குபற்றி உள்ளார்கள்.
இவர்களுக்கு 2000ம் ஆண்டில் சமூக கலாசார கல்வி சேவையாளர் என்ற விருதை இந்திய இஸ்லாமிய மையம் வழங்கி கௌரவித்தது. தற்போது இவர்களின் தலைமையில் இந்தியாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் கட்டும் கட்டிட பணி நடைபெற்று வருகிறது.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்