அஸ்ஸையித் கலாநிதி ஷெய்க் அப்துல்லாஹ் பத்அக்
மக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல்லாஹ் பத்அக் இளம் ஸுபி அறிஞராவார்கள். கலாநிதி பத்அக் அவர்களின் பாட்டனார் உஸ்மானிய மற்றும் ஹாஷியக் கிலாபத்தின் போது அங்கீகரிக்கப் பட்ட இஸ்லாமிய அறிஞராகவும் மக்கா அல் முகர்ரமாவின் இமாமாகவும் இருந்துள்ளார்கள். ஆட்சி மாற்றத்தினால் வஹாபிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நிலை மாற்றம் கண்டது.
கலாநிதி அப்துல்லாஹ் பத்அக் அவர்கள் ஜித்தாவில் உள்ள தனது வீட்டில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பல புத்தகங்களை எழுதியுள்ளதோடு அரபுத் தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் அடிக்கடி பங்கேற்கிறார்கள்.
அஹ்லுஸ் ஸுன்னா மற்றும் ஸுபிஸத்தை சவுதி அரேபிய இளைஞர்களுக்கு வழங்க பல சிரமங்களுக்கு மத்தியிலும் உழைத்து வருவதோடு இவ்வற்றைப் பாதுகாக்கவும் அரும் பணியாற்றகிறார்கள்.
கலாநிதி பத்அக் பேராசிரியர் இமாம் அலவி அல் மாலிகி அவர்களின் நெருங்கிய மாணவர் என்பதோடு அவர்களின் வீட்டில் 3 வருடங்கள் தங்கிக் கற்றுள்ளார்கள்.
சவுதி அரேபிய அஹ்லுல் பைத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் இவர்கள் கடமையாற்றுகிறார்கள். கலாநிதி அப்துல்லாஹ் பத்அக் சவுதியின் ஸலபி அறிஞர்களாலும் ஸவுத் குடும்பத்தாலும் மதித்து கௌரவிக்கப்படுபவர்கள் என்பதும் குறிப்பித்தக்க அம்சமாகும்.
ஷெய்க் அப்துல்லாஹ் பதாக் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்