கலாநிதி ஷெய்க் அப்துல் லத்தீப் புதா
பேராசிரியர் அப்துல் லத்தீப் புதா 1967ம் ஆண்டு ஜோர்தான் நகரில் பிறந்தார்கள். 11 வயதில் ஷாfபி சட்டக்கலையை கற்க ஆரம்பித்த இவர்கள் ஷெய்க் ஹுசைனிடம் அல்குரான், சட்டம் ஆகிய கலைகளை கற்றார்கள். கலாநிதி அப்துல் லத்தீப் புதா ஹனபி சட்டக்கலையையும் நன்கு அறிந்தவராவார்கள். ஷாfபி சட்டக்கலையையும் அஸ்அரி அகீதாவிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார்கள்.
ஜோர்தான் நாட்டின் முன்னாள் தலைமை முப்தி பேராசிரியர் கலாநிதி நூஹ் அல் குல்லாத் அவர்களது தொடர்பும் இவருக்கு கிடைத்தது. பிற்காலத்தில் கலாநிதி அப்துல் லத்தீப் முப்தி வாழ்வில் முப்தி நூஹ் அவர்களின் செல்வாக்கை வெகுவாகக் காணமுடிந்தது. அப்துல் லத்தீப் புல அவர்கள் இலத்திரனியல் பொறியியல் பட்டதாரி என்பதும் சிறப்பம்சமாகும். சட்டத்துறை பட்டதாரியும் ஆவார்கள்.
எகிப்தின் அல் அஸ்ஹார் பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்கள். பேராசிரியர் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இமாம் ராஸி இணையத்தளம் மிக செல்வாக்குள்ள ஆராய்ச்சி தளமாக விளக்குகிறது. இஸ்லாமிய இறையியல் துறையில் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்ய விரும்புவோருக்கு இது சிறந்த உசாத்துணையாக அமைந்திருக்கிறது.
பேராசிரியர் அப்துல்லா லத்தீப் வஹாபிஸ ஸலபித்துக்கு எதிராக தர்க்கரீதியான சவால்களை முன் வைத்துள்ளதோடு அது தொடர்பான விவாதங்களிலும் பங்கேற்றுள்ளார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்