கலாநிதி ஷெய்க் அப்துல் ஹாகிம் முராத்
கலாநிதி அப்துல் ஹாகிம் முராத் பிரித்தானியாவின் புகழ்பெற்ற சிந்தனையாளராவார்கள். இஸ்லாத்திற்கும் சடவாதத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். பிரித்தானியாவின் கல்வித்துறையில் முக்கியமான பல பதவிகளையும் வகித்துள்ளார்கள்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். பின்னர் எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் 3 வருடங்கள் கல்வியைத் தொடர்ந்தார்கள். சவுதி அரபியாவின் ஜித்தா நகருக்கு சென்றமை கலாநிதி முராதின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். ஹபீப் மஷ்ஹுர் அல் ஹத்தாத் உட்பட ஹழரமவுத்தின் முக்கிய பல அறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
1989ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ஹாகிம் லண்டன் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் துருக்கிய, பாரசீக மொழிகளைக் கற்றார்கள். 1992ல் கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இணைந்துக்கொண்டார்கள்.
கலாநிதி முராத் லண்டன் முஸ்லிம் கல்வி நிதியத்தின் செயலாளராகக் கடமையாற்றி வருவதோடு கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மத்தியக்கிழக்கு கற்கைதொடர்பான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹுவின் இஹ்யா உலுமுத்தீன் கிரந்தத்தின் இரண்டு பாகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள்.
2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 50 ஆம் நபராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் இவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்