ஷெய்க் அப்துல் ஹப்பார் ஷரீப்
இஸ்லாமிய நிதித்துறை உலகில் நன்கு அறியப்பட்ட அறிஞர்களுக்கு மத்தியில் பேராசிரியர் அப்துல் ஹப்பார் அல் ஷரீப் முக்கிய இடம்பெறுகிறார். 1953ஆம் ஆண்டு குவைத் நாட்டில் பிறந்த அவர்கள் 1975ஆம் ஆண்டு பொருளியல் துறையில் கலைமானிப் பட்டம் பெற்றார்கள். 1986ஆம் ஆண்டு ஒப்பீட்டு நீதித்துறையில் பேராசிரியர் ஷரீப் கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தார்கள்.
குவைட் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைள் மற்றும் ஷரீயா பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்கள். குவைட் பல்கலைக்கத்தில் தற்சமயம் ஓய்வுநிலை பேராசிரியராக கடமையாற்றி வருகிறார்கள்.
சர்வதேச இஸ்லாமிய நிதியியல் துறை தொடர்பான மாநாடுகளிலும் அவர்கள் அடிக்கடி பங்கேற்று வருகிறார்கள். இஸ்லாமிய வங்கி முறைமையை அமைப்பதில் அவர்கள் மகத்தான பங்களிப்புக்களை ஆற்றியுள்ளார்கள். உலகில் புகழ்பெற்ற நிதித்துறை நிறுவனங்கள், இஸ்லாமிய வங்கிகள் என்பனவற்றின் ஆலோசகராகவும் பேராசிரியர் அப்துல் ஹப்பார் அல் ஷரீப் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் ஷாதுலியா தரீக்காவின் தற்காலத்தில் உள்ள பிரபலமான அறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியின் மார்டின் நகரில் இடம்பெற்ற பத்வா மாநாட்டிலும் பேராசிரியர் அப்துல் ஹப்பார் அல் ஷரீப் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தமை குறிப்பித்தக்கது.
ஜஸாகல்லாஹு கைர் : பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்