ஷெய்க் அப்துல்லாஹ் நூர்தீன் துர்கீ
ஷெய்க் நூருதீன் துர்கீ அவர்கள் 1938 ம் ஆண்டு அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்கள்.
1967 -1970 களில் இவர்கள் நியூ மெக்ஸிகோவில் லாமா அறக்கட்டளையை உருவாக்கினார்கள். தன்னை அறிதல் மற்றும் மாற்று மதக்கல்வி ஆகியவைகள் தொடர்ப்பாக அமெரிக்காவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த காலப்பகுதியில் மற்ற மதத்தை சேர்ந்த ஆன்மீக ஆசிரியர்களோடு இவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதன் வேலை நிமித்தம் பல நாடுகளுக்கு சென்ற இவர்கள், 1972 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி வாசலில் வைத்து இஸ்லாத்தை தழுவினர்.
இந்த காலப்பகுதியில் இவர்கள் பல அறிஞர்களிடம் தஸவ்வுப் (சூபிசம்) பற்றி கற்றார்கள். களில் இவர்கள் தீவிர ஆய்வுகள் மையம் (INTENSIVE STUDIES CENTRE - ISC) இனை நியூ மெக்ஸிகோவிலுள்ள மலைப்பகுதியில் அமைத்தார்கள். இந்த கட்டிடம் வட மெக்ஸிகோவின் முதல் பள்ளிவாசலை உள்ளடக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த அமைப்பின் உதவியால் பல மக்களுக்கு இஸ்லாத்தை பற்றி அறிய கிடைத்தது. இதனால் பல இளம் அமெரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவினர். இந்த மையத்தில் இருந்து இஸ்லாத்தை கற்று நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்தனர்.
காலப்பகுதியில் இவர்கள் புனித மக்கா நகரில் வாழ்ந்து கல்வி கற்று கொண்டு இருந்தபோது இவர்களுக்கு அமெரிக்காவில் முஸ்லிம் பாடசாலை மற்றும் முஸ்லிம் சமூக அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஒரு யோசனை பிறக்கவே அது சம்பந்தமாக நிதி திரட்ட தொடங்கினர்.
பின்னர் 1980 ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் அறக்கட்டளையை உருவாக்கி 1988 வரை இவர்களே அவ்வைப்பின் தலைவராக பணியாற்றினர். இக்காலபகுதியில் இவ்வமைப்பு மிக சிறப்பாக வளர்ந்து இவர்கள் 1988 இல் ஒய்வு பெறும்போது இவ்வமைப்பின் கீழ் ஒரு பள்ளிவாசல், ஒரு பாடசாலை, சில வீடுகள், சில வியாபார தலைகள் என சுமார் ஏழு மில்லியன் அமெரிக்கா டாலர்கள் பெறுமதியான சொத்துகள் இந்த அமைப்புக்கு சொந்தமாக இருந்தது. அத்தோடு பலர் இஸ்லாத்தை பற்றி அறியவும், அமெரிக்க முஸ்லிம்கள் இஸ்லாம் பற்றி கற்று பலன்பெறவும் இது பெரிதும் துணை புரிந்தது.
1988 இல் எகிப்தில் குடும்பத்தோடு குடியேறிய இவர்கள் அங்கே இவர்கள் தமது ஆன்மீக ஆசியர் மற்றும் மாணவ குழாமோடு சாதுலி தரீக்கா சம்பந்தமான நூல்களை எழுதினர். பின்னர் தமது தஜ்வீத் குர்ஆன் வேலையையும் தொடங்கினர்.
இந்த காலப்குதியில் இவர்கள் ஷாதுலி தரீக்கா சம்பந்தமாக அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பல வருடங்கள் பணி புரிந்த இப்ராஹீம் முஹம்மத் அல் பதாவி இடம் கற்றார்கள். 1986 இல் இப்ராஹீம் முஹம்மத் அல் பதாவி அவர்களால் அவர்களின் மேற்கின் கலீபாவாக நியமிக்கப்பட்டார்கள். மேலும் இவர்கள் முராகபா ஞானத்தை நக்ஷபந்திய ஸெய்க் செய்யத் அலி அஷ்ரப் அவர்களிடம் கற்று அவர்களிடம் கற்பிப்பதற்கான அனுமதியை (இஜாஸத்) பெற்றார்கள். 1983 ஆம் ஆண்டு இஸ்லாமிய தஃவாவை மேற்கொள்வதற்கான அனுமதியை (இஜாஸத்) பஅலவி ஸெய்கான ஸெய்க் உமர் அப்துல்லாஹ் அவர்களிடம் பெற்றார்கள். 1999 ஆம் ஆண்டு பாலஸ்தீன சூபி உயர் சபையின் முஹம்மத் அல் ஜமாலினால் கற்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டார்கள். 2004 ஆம் ஆண்டு நிசாமிய்யா சிஸ்தியா தரீகாவின் ஹஸ்ரத் குதுபுத்தீன் அவர்களால் கலிபாவாக நியமனம் செய்யப்பட்டார்கள்.
பின்னர் அமெரிக்கா திரும்பிய இவர்கள் Green Mountain School என்று ஒரு பாடசாலையை உருவாக்கி அதில் குர்ஆனை கற்பித்தும் ஏனைய நூல்கள், சொற்பொழிவுகளை வழங்கியும் வருகிறார்கள். மேலும் நூர் அறக்கட்டளை என்னும் இலாப நோக்கமற்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் குர்ஆன் தஜ்வீத் மற்றும் பாரம்பரிய இஸ்லாமிய கோட்பாடுகளை கற்பித்து வருகின்றனர்.
இவர்கள் தலைசிறந்த அறிஞரும், சிந்தனையாளரும், எழுத்தாளரும், மொழிப்பெயர்பாளரும் ஆவார்கள். இவர்கள் மொழிபெயர்த்த The Transliterated Tajwidi Qur'an சிறப்பான ஒரு நூலாகும். இது அரபி தெரியாதவர்கள் அல் குர்ஆனை சரியான உச்சரிப்போடு ஓதவும் சில வசனங்களின் அர்த்தங்களை தெரியவும் உதவுகிறது. அதேபோல் இவர்கள் அரபியில் இருந்து மொழிபெயர்த்த Orisons of the Shadhuliyyah மற்றொரு சிறப்பு நூலாகும். இது சாதுலியா தரீகாவை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.
இஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் நூர்தீன் துர்கீ அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.
English - தமிழ்