கலாநிதி முஹம்மத் அபூபக்ர் பாதீப்
ஷெய்க் முஹம்மத் அபூபக்ர் பாதீப் அவர்கள் யெமன் நாட்டின் ஹழரமௌத்தில் 1972ம் ஆண்டு பிறந்தார்கள். இவர்கள் ஸையிதினா அபூபக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரண்டாம் நிலைக் கல்வியை ஜித்தாவில் அமைந்துள்ள அல்பலாஹ் கல்லூரியில் பூர்த்தி செய்த இவர்கள் யெமன் அல்-காப் பல்கலைக் கழகத்தின் ஷரீஆ மற்றும் சட்டக் கல்லூரியில் கலைமாணிப் பட்டதைதை பூர்த்தி செய்தார்கள்.
லெபனான் நாட்டில் பெய்ரூத் பல்கலைக்கழகத்தில் ஷரீஆ பீடத்தில் முதுமாணி பட்டதாரியாக பட்டம் பெற்றார்கள். மேலும் இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகம் இவர்களுக்கு கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்தது. ஷெய்க் அபூபக்கர் பாதீப் அவர்கள் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞர்களான இமாம் முஹம்மது அஹமத் ஹத்தா,த் இமாம் முஹம்மத் அலவி அல் மாலிகி, ஷெய்க் அப்துல் பத்தாஹ், ஷெய்க் அபுல் ஹஸன் அலி நத்வி போன்றவர்களிடம் இஜாஸா எனப்படும் கற்பித்தலுக்கான அனுமதியையும் பெற்றுள்ளார்கள். ஷெய்க் அபூபக்ர் கல்வித்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
யெமன் அஹ்காப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர்கள் தற்போது மக்கா, மதீனா கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராகவும் அதன் எழுத்தாளராகவும் பணியாற்றுகிறார்கள். இது லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் அல் புர்கான் இஸ்லாமிய மரபுரிமை மன்றத்துடன் இணைந்ததாகும். இஸ்லாமிய பாரம்பரியம், மரபுரிமை ஆகியவற்றுக்கு யெமன் ஹழரமௌத் அறிஞர்;கள் வழங்கிய பங்களிப்புத் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்
English - தமிழ்