MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​சுவனத்து ஆத்மாவின் சுவனத்து ஜோடி

ஆத்மீக ஜோடிகளின் ஆத்மீக ரகசியங்கள்


மெயில்  ஒப்  இஸ்லாம் 


விண்ணில் இருந்து பூமிக்கு வரும் சுவனத்து ஜோடிகள் அனைத்தும் மண்ணுலகில் இணைந்துதான் (கணவன் மனைவி) வாழும் என்று கூறமுடியாது. சில ஆத்மாக்கள் அதே ஜோடியுடன் மண்ணுலகில் வாழும். சில ஆத்மாக்கள் பிரிந்து வேறு துணையுடன் வாழும்.


இந்த உண்மைகளை வரலாற்று ஏடுகளில் மட்டுமல்ல உலக வாழ்கையிலும் நீங்கள் கண்டிருக்கலாம். எத்தனையோ ஆத்மாக்கள் உயிருக்கு உயிராக சில ஆத்மாக்களை ஆன்மீகத்துக்காக ஒன்றை ஒன்று நேசித்து இருக்கும், ஆனால் இவ்வுலக வாழ்க்கைக்கு இறைவன் எழுதிய விதிப்படி அந்த ஆத்மாக்களுக்கு இவ்வுலகில் அது நேசித்த ஆத்மா கிடைக்காமல் போகும். ஆனால் அவைகள் ஆன்மீக உலகில் இணைந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கும்.


அந்த சுவனத்து ஜோடி ஆத்மாக்கள் இவ்வுலகில் பிரிந்து வேறு ஜோடிகளுடன் வாழ்ந்தாலும் சில ஆத்மாக்களுக்கு தான் நேசித்த ஆத்மாவின் அன்பு உள்ளத்தில் இருந்து நீங்காது.


ஏனெனில் இது ஆத்மீக தொடர்பு. அவைகள் சுவனத்தில் ஜோடியாக வாழ்ந்து கொண்டு இருப்பதனால் அந்த ஈர்ப்பு பூமியிலும் இருக்கும்.


ஒரு சில ஸாலிஹீன்களுக்கு இவ்வுலகிலேயே அந்த உண்மையை அல்லாஹ் உணர்த்தி அவர்களின் சுவனத்து ஜோடியை காட்டி விடுவான்.


சில ஆத்மாக்களுக்கு அதன் ஆத்மீக ஜோடிகளை இவ்வுலகில் அல்லாஹ் மறைத்து வைத்து விடுவான். இவ்வுலகில் அதன் சுவனத்து ஜோடியை அறியவும் மாட்டாது, நேசம், ஈர்ப்பு போன்றவைகளும் அவைகளுக்கு இருப்பதில்லை.


மாயை என்னும் உலகில் இருந்து விழித்த பிறகு (மரணத்திற்கு பிறகு) உலகில் பிரிந்து வாழ்ந்த சுவனத்து ஜோடிகள், விண்ணுலகில் தான் இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொள்ளும். அதுவரையில் எமக்கு ஆத்மீக உலக வாழ்க்கை திரையிடப்பட்டு இருக்கும்.


இந்த உண்மைகளை விளங்க ஷரீஅத் என்ற கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு தரீக்கத் என்ற கண்ணாடியை அணிந்து பார்த்தால் தான் ஹகீகத் விளங்கும்.


உடலிற்காக (அழகிற்காக) நேசிப்பது காமம்

உயிரிற்காக (ஆத்மாவிற்காக) நேசிப்பது காதல்


அல்லாஹ்வும், ரஸுலும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சகலதையும் அறிந்தவர்கள்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்

4. கல்வத்தின் இரகசியங்கள்

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா? 


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​