MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸுபிகளை பற்றி உனக்கு தெரியுமா?


ஸுபிகளை பற்றி ஒரு இளைஞர் எந்நேரமும் குறைகூறிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் ஹழ்ரத் துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை காண வந்தார். அப்பொழுது அவர்கள் அவரிடம் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கொடுத்து அதை ஒரு மளிகை கடைக்காரனிடம் கொடுத்து ஒரு தீனாருக்கு அடமானம் வைத்து தேவையான மளிகை பொருள்களை வாங்கிவருமாறு பணித்தார்கள்.


இளைஞரும் அதனை எடுத்துக்கொண்டு சென்று மளிகை கடைக்காரனிடம் அடமானம் வைக்க முற்பட்ட பொழுது, "இதற்கு ஒரு தீனார் தர இயலாது ஒரு திர்ஹம்தான் தர இயலும்" என்று கூறிவிட்டான் கடைக்காரன். அவர் உடனே துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் திரும்பி வந்து நடந்ததை கூறினார்.


உடனே அவர்கள் அதனை நகை வியாபாரியிடம் சென்று விலை பேசி வருமாறு கூறினார்கள். அவரும் அதனை எடுத்துக்கொண்டு நகை வியாபாரியிடம் சென்ற பொழுது, "அம்மோதிரம் ஆயிரம் தீனார் விலை மதிப்புள்ளது" என்று கூறினார். இளைஞர் அதனை துன்னூன் மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து கூறினார். உடனே அவர்கள் அவரை நோக்கி, "இந்த மோதிரத்தை பற்றி மளிகை கடைக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவே உமக்கும் சூபிகளை பற்றி தெரியும்" என்று கூறினார்கள். அது கேட்டு அந்த இளைஞர் வெட்கி தலை குனிந்தார். அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.


பாம்பின் கால் பாம்பறியும் என்று முதுமொழி. சான்றோரை சான்றோரே அறிவர். கீழ்தர மக்களுக்கு மேன்மக்களை பற்றி என்ன தெரியும்.


இதுவே இன்றைய வஹாபிகளின் நிலையாகும். எந்த அறிவும் அற்ற இந்த வஹாபிகள் மேன்மை மிக்க சூபியாக்களை குறை கூறுவது இதனாலேதான்.