MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
சூபி இசை (SUFI MUSIC) என்றால் என்ன?
எழுதியது - மெயில் ஒப் இஸ்லாம் ஆசிரியர் குழு
சூபி இசை என்பது இஸ்லாமிய ஆன்மீகத்துடன் தொடர்புடைய இசை வடிவமாகும். இன்னும் தெளிவாக சொன்னப்போனால், எந்த இசை ஒருவனுக்கு உலக சிந்தனைகளை உள்ளத்தில் இருந்து நீக்கி இறைவனை பற்றிய சிந்தனையை தூண்டுகிறதோ, எந்த இசை ஒருவன் இறைவனை அடைய வழிவகுக்கிறதோ அதுவே சூபி இசை என்று அழைக்கப்படுகிறது.
சூபியாக்கள் என்று சொல்லப்படும் இறைநேச செல்வர்கள், இறைவன் மீது கொண்ட அளவிலா காதலினால் இறைவனை புகழ்ந்தும், அவனை வர்ணித்தும், அழகிய வரிகளுடன் கூடிய கவிதைகள் பல எழுதி அவற்றை இசைத்து மெய்மறந்து ரசிக்கின்றனர்.
இறைவன் பற்றிய அழகிய வர்ணனைகள், அவன் மீதான காதல், அவனின் பிரிவினால் கொண்டுள்ள சோகம் போன்றன இந்த சூபி இசையின் மூலம் பாடப்பட்டு அதன் பேரின்பத்தில் அவர்கள் தம்மை மறந்து இறைநினைவில் மிதக்கின்றனர்.
இறைவன் மீதான அளவில்லா அன்பும், அவனது பிரிவினால் அவர்கள் கொண்டுள்ள சோகமும் அப்பாடல்களின் மூலம் பிரதிபலித்து அவை கண்ணீர்த்துளிகளாக அவர்களின் கண்களில் இருந்து வெளியாகின்றன. இந்த சூபி இசையானது ஒரு மனிதனின் உள்ளத்தை (ஆத்மாவை) பெரிதும் கவரும் தன்மை வாய்ந்தது.
மேலும், இந்த சூபி இசையானது நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களையும், இறைநேசர்களையும் நினைவு கூர்ந்து, அவர்களின் சிறப்புகளை புகழ்ந்து பாடப்பட்டும் வருகிறது.
இந்த சூபி இசையானது இசைக்கருவிகளுடனோ, அல்லது இசைக்கருவிகள் இல்லாமலோ ஏதேனும் ஒரு சந்தத்தில் இசைக்கப்படலாம்.
சூபி இசை வடிவங்கள்
இந்த சூபி இசையானது பல்வேறு இசை வடிவங்களில் இசைக்கப்பட்டு வருகிறது. கவ்வாலி (QAWWALI), ஞாவா (GNAWA), மெவ்லவி அயின் (Mehlvi Ayin) என்பன அவற்றில் சிலவாகும்.
சூபி இசையானது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கவ்வாலி (QAWWALI) என்னும் இசை வடிவத்தில் பிரபலமாக இசைக்கப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் ஞாவா (GNAWA) என்னும் வகையான சூபி இசை பிரபலம் பெற்றுள்ளது. அதேபோல, துருக்கிய சூபி இசை வடிவமான மெஹ்லவி அயின் (Mehlvi Ayin) மற்றுமொரு உலக புகழ்பெற்ற இசை வடிவமாகும். அந்த இசையுடன் சேர்ந்து இறைகாதலில் இறை நினைவில் தம்மை மறந்தவர்களாக பக்தர்கள் சுழன்றாடுவர்.
சூபி கவிஞர்கள் எழுதிய பாடல்களைக் கொண்டு சூபி பாடல்கள் பெரும்பாலும் கசல் மற்றும் கஃபி வடிவில் பாடப்படுகின்றன.
புகழ் பெற்ற சில சூபி இசை கலைஞர்கள்
நுஸ்ரத் பத்தே அலி கான், சப்ரி சகோதரர்கள், A.R ரகுமான், உவைஸ் காதிரி, ஸமி யூஸுப்.
1. இஹ்யாவு உலூமூத்தீன்
2. பத்ஹுர் ரப்பானி
3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்
4. கல்வத்தின் இரகசியங்கள்
சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உலகின் பெரும் இரு மத வேதங்களில் காணக்கிடைக்க கூடிய பொதுவான சில கருத்துகளும் அவற்றில் இருந்து பெறக்கூடிய முடிவுகளும்
இஸ்லாத்தில் இசை கூடுமா? கூடாதா? அவற்றில், எந்த இசை தடுக்கப்பட்டது, எந்த இசை அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய இதனை வாசியுங்கள்..