MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸலவாத்தின் சிறப்பு


இஸ்லாமிய பெரியார்களில் ஒருவரான செய்யதுனா இமாம் சுலைமானுல் ஜசூலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) (இவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்த குத்பு மற்றும் இவர்கள் ஷாசுலி தரிக்காவை சேர்ந்தவர்கள்)


அவர்கள் ஒரு இடத்துக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்பொழுது அவர்கள் வுழு செய்ய தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று சுற்றும் முற்றும் தேடி பார்த்தார்கள். தூரத்தில் ஒரு கிணறு தென்பட்டது. உடனே அக்கிணற்றின் பக்கத்தில் சென்று பார்த்த போது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வாளியோ, கயிறோ அங்கு இருக்கவில்ல. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றார்கள்.


அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுமி "பெரியாரே! தாங்கள் யார்?" என்று கேட்டாள். அதற்கு இவர்கள் தன பெயரை கூறி வந்த விபரத்தையும் கூறினார்கள். அதுகேட்ட அந்த சிறுமி "இவ்வளவு பெரிய மகானாக நீங்கள் இருந்தும் உங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வழித் தெரியவில்லையா?" என்று கேட்டு அந்த சிறுமி கிணற்றுக்குள் தன் எச்சிலை துப்பினாள். அவ்வளவுதான் உடனே அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் மள மள என்று பொங்கி வழிந்தது. உடனே இமாம் அவர்கள் சந்தோஷத்துடன் அதில் வுழு செய்து தொழுதும் முடித்தார்கள். பின்பு அந்த சிறுமியிடம் ஆச்சரியத்தோடு, "மகளே! உன்னால் எப்படி இவ்வளவு பெரிய கராமத்தை செய்ய முடிந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுமி, " நான் என் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அன்னவர்கள் மீது தினந்தோறும் இந்த ஸலவாத்தை ஓதி வருகிறேன். அந்த பரக்கத்தினால்தான் இந்த பாக்கியத்தை பெற்றுக்கொண்டேன்." என்று கூறினாள்.


அந்த நிமிடமே ஸலவாத்தின் மகத்துவத்தை பற்றி விளங்கிக்கொண்ட இமாம் ஜசூலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் " தலாயிலுல் கைராத்" என்ற ஸலவாத்து கிதாபை எழுதினார்கள். இந்த கிதாபை எழுதியதன் காரணமாக அவர்களின் கப்ரிலிருந்து கஸ்தூரி மணம் வீசிக்கொண்டு இருப்பதாக ஷைக் சரூக் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஸலவாத்து கிதாபை வழக்கமாக ஓதியவர்கள் சிறந்த அவ்லியாக்கள் ஆனார்கள்.


இப்படிபட்ட சிறப்பை பெற்ற இந்த கிதாபு உருவாக காரணமாய் இருந்த அந்த சங்கையான ஸலவாத் இதுதான் :


அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா வமவ்லானா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மதின் ஸலாதன் தாஹிமதன் மக்பூலதன் துஅத்தி பிஹா அன்னஹுல் ஹக்குல் அலீம்.


நாமும் இந்த சங்கையான ஸலவாத்துக்களை ஓதி சிறப்படைவோமாக..