MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸலவாத் என்பது எங்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது நாம் சொல்லும் வாழ்த்தும் துஆவும் ஆகும்.
ஸலவாத் ஒரு பொக்கிஷம். அதன் சிறப்புகளையும் நன்மைகளையும் எழுத்தில் எழுதி முடிக்க முடியாது. அந்தளவு நன்மைகளும் பரக்கத்துகளும் ஸலவாத் ஒதுபவருக்கு கிடைக்கிறது.
ஸலவாத்தின் சிறப்புகள்
♣ அல்லாஹுதஆலா தான் எந்த ஒரு அமலையும் செய்வதாக அல் குர்ஆனில் கூறவில்லை. எல்லா அமல்களும் மனிதர்களாகிய எங்களுக்கே. ஆனால், அல்லாஹ் தான் செய்வதாக சொல்லும் ஒரே ஒரு அமல் - ஸலவாத் மட்டுமே. அதில் இருந்து விளங்கி கொள்ளலாம் ஸலவாத் எவ்வளவு சிறப்பு மிக்க அமல் என்று.
அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்:
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوۡنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَيۡهِ وَسَلِّمُوۡا تَسۡلِيۡمًا
"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் இந்த நபியின் மீது ஸலவாத் சொல்லுகின்றனர். ஈமான் கொண்ட மூஃமீன்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் அழகிய முறையில் ஸலாமும் சொல்லுங்கள்." (அல்குர்ஆன் - 33:56)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"யாரேனும் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொன்னால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்வான்"
(நூல்: முஸ்லிம்)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்வாரேயாயின், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான். அவர் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவர் மீது அல்லாஹ் நூறுமுறை ஸலவாத்துச் சொல்கிறான். அவர் என் மீது நூறு முறை ஸலவாத்துச் சொன்னால், அவர் மீது அல்லாஹ் ஆயிரம் தடவை ஸலவாத்துச் சொல்கிறான். அதன்றி அவரது இரு புருவங்களுக்கு மத்தியிலும் இவர் 'நிஃபாக்' என்னும் கபட விசுவாசத்தை விட்டும் விடுதலை பெற்றவரென்றும் அல்லாஹ் பதிவு செய்து விடுகிறான்"
(நூல்: தப்ரானி)
♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அதிகாலையில் மலர்ந்த முகத்துடனும், குளிர்ந்த இதயத்துடனும் வந்தார்கள். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: "யா ரசூலுல்லாஹ்! அதிகாலையிலேயே தங்களை சிரித்த முகத்துடனும் மலர்ந்த இதயத்துடனும் காண்கிறோமே! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பதிலளித்தார்கள்:
ஆம்! எனது ரப்பிடமிருந்து எனக்கு (சுபச்) செய்தி வந்தது. உங்கள் உம்மத்துக்களில் ஒருவர் உங்கள் மீது ஒரு ஸலவாத் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன. பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. அவர் மீது அதே ஸலவாத்தும் அருளப்படுகிறது (என்பதாக)
(நூல் - அஹ்மத், நஸயீ, தர்கீப் லில் முன்திரி)
♣ உபை இப்னு கஃப் (ரலியல்லாஹூ அன்ஹூ) என்னும் நபித்தோழர் ஒருவர் ஒரு முறை அண்ணலாரிடம் வந்து, அல்லாஹ்வின் ரஹூலே! நான் உங்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்து ஓதி வருகிறேன். நான் எவ்வளவு ஓத வேண்டும்? ஒரு நாளில் கால் பகுதியில் ஸலவாத்து ஓதட்டுமா? என்று கேட்க, நல்லது அது போன்றே செய்வீராக. எனினும் அதைவிட அதிகப்படுத்திக்கொள்ளல் உமக்கு சிறந்ததென்று அண்ணலார் சொல்ல, அதற்கவர்: அவ்வாறாயின் ஒரு நாளில் பாதி அளவு உங்கள் மீது ஸலவாத்து ஓதவா? என்று திரும்பக்கேட்க அண்ணலார்: நல்லது அவ்வாறே செய்யும், நீர் விரும்பினால் இன்னும் அதிகமாக்கினால் உமக்கு சிறந்ததென்று சொல்ல, மீண்டும் அவர்: அல்லாஹ்வின் ரஸூலே! ஒரு நாளில் மூன்று பகுதி நேரம் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லட்டுமா? என்று திரும்பவும் கேட்க, நல்லது அவ்வாறே செய்யும் எனினும் இன்னும் அதிகப்படுத்துதல் உமக்கு சிறந்ததென்று அண்ணலார் திரும்பக்கூறவும் அதற்கவர் மீண்டும், இனிய அல்லாஹ்வின் ரஸூலே! நாள் முழுவதும் உங்கள் மீது ஸலவாத்துச்சொல்வதிலேயே கழிக்கவா? என்று கேட்க, அருமை நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், உடனே உமது கவலைகள் அகன்று, பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.
(நூல்: திர்மிதி, தாரகுத்னீ)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"மறுமையில் எனக்கு மிகவும் நெருங்கியவர், என் மீது அதிகம் ஸலவாத்துச் சொன்னவரே"
(நூல்: திர்மிதி)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"நாட்களில் மிகச்சிறந்தது ஜூம்ஆவுடைய நாளாகும். அன்று அதிகமாக என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். உங்களின் ஸலவாத்து எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது"
(நூல்: அபூதாவூத்)
பல்வேறு ஸலவாத்களும் அதன் பலன்களும்
♦ ஸலவாத்து இப்ராஹிமிய்யா
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ،
وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
மறுமையில் பெருமானாரின் பரிவுரை பெற:
இந்த ஸலவாத்தை ஒருவன் ஒதிவரின் மறுமையில் அவனுக்குத் தாம் பிணை ஏற்று இறைவனிடம் அவனுக்காகப் பரிந்துரைப்பதாகப் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
இதனை ஒருவன் ஆயிரம் தடவை ஓதிவரின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
♦ ஸலவாத்துல் முன்ஜியா
الَّلهـُمَّ صَلِّ عَلىَ سَيِّدِـناَ مُحَمَّـدٍ صَلَتً تُنْـجِـنَا بِهَا مِنْ جَـمِيـْعِ اَلْاَ هـوَالِ وَاَلْاَ فاَتِ
وَتـَقْضِى لَنَا بِـهـَا جَـمِيْعَ الْحَا جَاتِ ، وَتُـطَـهِـرُنَا بِهاَ مِنْ جَمِيعِ السَّـيِئاَ تِ،
وَتَرْ فَعُناَ بِهاَ اَعْلىَ الدَّ رَجاَتِ ، وَتُبَـلِّـغُـنَا بِهاَ اَقْصَ الْغاَ ياَتِ، مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ
فِى الْحَياَتِ وَبَعْدَ الْمَماَتِ اِنَّكَ عَلىَ كُلِّ شَيئٍ قَـدِ يْرٌ.
எண்ணங்கள் நிறைவேற:
இதனை ஆயிரம் தடவை ஓதின் இறையருளால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
துன்பம் நீங்க:
இதனைத் துன்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பவன். ஆயிரம் தடவை ஓதின் அவன் இறையருளால் துன்பம் நீங்கப் பெறுவான்.
இரணம் அதிகரிக்க:
இதனை ஒருவன் வழக்கமாக ஆயிரம் தடவை ஓதிவரின் அவனின் இரணம் அதிகரித்து அவன் செல்வனாவான்.
நாடிய நாட்டங்கள் நிறைவேற:
இதனை ஒருவன் நள்ளிரவு ஆயிரம் தடவை ஓதி இறைவனிடம் இறைஞ்சின் அவன் நாடிய நாட்டங்கள் நிறைவேறும், மின்னலின் வேகத்தில் அவனுடைய இறைஞ்சுதல் இறை சந்நிதானத்தை எய்தும் எண்டும் கூறப்படுகிறது. ‘இது அர்ஷின் புதையல்களில் ஒன்று’ என ஷைகுல் அக்பர் இப்னு அரபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியுள்ளார்கள்
♦ ஸலவாத்துல் ஃபாத்திஹி
اللَّهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا مُحَمَّدٍ الفاتِحِ لِمَا أُغْلِقَ و الخاتِمِ لِمَا سَبَقَ نَاصِرِ الحَقِّ بَالحَقَّ و الهَادِي إلى صِرَاطِكَ المُسْتَقِيمِ و عَلَى آلِهِ حَقَّ قَدْرِهِ و مِقْدَارِهِ العَظِيمِ
இறைஞான இரகசியங்களை அறிய:
இதனை வழக்கமாக நூறு தடவை ஓதிவரின் மறைவான இறைஞான இரகசியங்களை அறியலாம்.
விருப்பங்கள் நிறைவேற:
இதனை ஓருவன் தன் ஆயுளில் ஒரு தடவை ஓதினும் அவன் நரகம் புகுத மாட்டான்.
பெருமானாரை நேரில் காண:
ஒருவன் வெள்ளி அல்லது வியாழன் அல்லது திங்கள் இரவுகளில் முதல் ரகஅத்தில் ஸூரா ஃபாத்திஹாவுக்குப் பின் இன்னா அன்ஸல்னாஹு ஸூராவையும் இரண்டாம் ரகஆத்தில் இதா ஸுல்ஸில்லத்துல் அர்ளு ஸூராவையும் மூன்றாம் ரகஅத்தில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் ஸூராவையும் நான்காம் ரகஅத்தில் குல் அவூது பிறப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஸூராக்களையும் ஓதி நான்கு ரகஅத் நஃபில் தொழுது பின்னர் நறுமணம் நிறைந்த சூலில் இந்த ஸலவாத்தை ஆயிரம் தடவை ஓதின் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
♦ ஸலவாத்துல் திப்பில் குலூப்
اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوَائِهَا . وَعَافِيَةِ اْلأَبْدَانِ وَشِفَائِهَا . وَنُوْرِ اْلأَبْصَارِ وَضِيَائِهَا وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ
நோய், ஆபத்து அணுகாதிருக்க:
இதனை வழக்கமாக ஒதிவரின் நோய், ஆபத்து முதலியவை அணுகா.
உடல் வேதனை நீங்க:
உடலில் வேதனை, வலி ஏற்படின் இதனைத் தொடர்ந்து ஓதி ஊதினால் இறையருளால் நிவாரணம் கிடைக்கும்.
கண்ணொளி பெற:
பார்வை குறைந்தவர்கள் அல்லது பார்வையை இழந்தவர்கள் இதனைக் காலையில் நூறு தடவையும் மாலையில் நூறு தடவையும் வழக்கமாக ஓதிவரின் அவர்கள் கண்ணொளி எய்தப் பெறுவர்.
நோய் நீங்க:
“நோயாளன் ஒருவன் தூய்மையாக அமர்ந்து நல்லெண்ணத்துடன் இதனை ஓதின் இதன் பொருட்டால் நோய் நீங்கப் பெறுவான்” என இமாம் ஷாபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினர். இதனை நோயுற்றவர்மீது ஓதி ஊதவும் தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கவும் கொடுப்பின் அவர்கள் விரைவில் நலம் பெருவர்.
♦ ஸலவாத்துல் தஃப்ரீஹிய்யா ஸலவாத்துந் நாரிய்யா
اَللّٰهُمَّ صَلِّ صَلَاةً كَامِلَةً وَسَلِّمْ سَلَامًا تَامًّا عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ الَّذِى تَنْحَلُّ بِهِ الْعُقَدُ، وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ، وَتُقْضٰى بِهِ الْحَوَآئِجُ، وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ، وَحُسْنُ الْخَوَاتِمِ، وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ، وَعَلٰى اٰلِهِ وَ صَحْبِهِ فِي كُلِّ لَمْحَةٍ
وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَّكَ
இதனை முஃப்தாஹுல் கன்ஸுல் முஹீத்தி என்றும் கூறுவார். இது அல்லாஹ்வின் புதையல்களில் ஒன்றாகும். இதனை வழக்கமாக ஓதி வருவது அதனைத் திறப்பதற்கான திறவுகோலாகும்.
பெறும் துன்பங்கள் நீங்கப் பெற:
இதனைப் பலரும் ஒருங்கு சேர்ந்து அமர்ந்து 4444தடவை ஓதின் இறைவனருளால் அப்பெரும் துன்பம் பொங்கிச் சாம்பலாகி நிவாரணம் ஏற்படும். எனவே தான் இதற்கு ஸலவாத்துன் நாரியா எதற பெயரும் ஏற்பட்டது. இதனை ஒருவர் மட்டும் தனித்து ஓதின் நாளொன்றுக்கு 440 ஸலவாத்து வீதம் பத்து நாட்களுக்கு ஓதிப் பதினொன்றாம் நாள் 44 ஸலவாத்துகளை ஓதி முடித்து இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
செல்வந்தனாக:
“இந்த ஸலவாத்தை ஒவ்வொரு பர்லான தொழுகைக்குப் பின்பும் பதினொரு தடவை வழக்கமாக ஓதிவரின் அவனுக்குரிய இரணம் அதிகப்பட்டு அவன் விரைவில் செல்வனாவான்” என்று இமாம் தைனூரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.
சுகப்பிரசவம் ஏற்பட:
இதனைத் தட்டைப் பீங்கானில் எழுதிப் பிரசவவேதனைக்காளானவளுக்குக் கரைத்து ஊட்டின் விரைவில் வேதனை நீங்கிச் சுகப் பிரசவம் ஏற்படும்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
இதனை ஒருவன் வழக்கமாக ஒதிவரின் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
♦ தாஜுஸ் ஸலவாத்
இது அதன் பெயருக்கேற்ப ஸலவாத்துகளின் மணிமகுடம் போன்றுள்ளது. இதனுடைய மாண்பு அளப்பரியதாகும்.
இதனை ஓத இந்த லிங்கை அழுத்துங்கள்
குழந்தை பெற:
இருபத்தியொரு பேரீத்தம் பழங்களை ஒன்றாக வைத்து அவற்றின் மீது ஏழு தடவை இதனை ஓதி நாளொன்றுக்கு ஒன்று வீதம் இருபத்தியொரு நாட்கள் அந்தப் பேரீத்தம் பழங்களை ஒரு பெண் உண்டு அதன்பின் தன் கணவனுடன் மருவின் இறைவனருளால் கருவுறுவாள். அதன்பின் கருவில் ஏதேனும் கோளாறு ஏற்படின் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு இதனைத் தண்ணீரில் ஓதி ஊதிக்குடித்துவரின் கரு காக்கப் பெற்று குழந்தை பிறக்கும்.
குறிக்கோள் எய்தப் பெற:
நள்ளிரவில் விழித்தெழுந்து ‘உளு’ வுடன் நாற்பத்து ஒரு தடவை வீதம் நாற்பது தடவை இதனை ஓதின் எண்ணிய குறிக்கோளை இறையருளால் எய்தப் பெறலாம்.
வறுமை நீங்க:
இதனை ஒருவன் இஷா தொழுதபின் நாற்பத்து ஒரு தடவை வீதம் நாற்பது நாட்கள் ஓதிவரின் அவனைப் பிடித்த வறுமை தோலையும்.
இரணம் அதிகரிக்க:
இதனை ஒருவன் வைகறைத் தொழுகைக்குப் பின் வழக்கமாக ஒரு தடவை ஓதிவரின் அவனுடைய இரணம் அதிகப்படும்.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
ஒருவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணவிரும்பின் வளர்ப்பிறையில் வரும் ஒரு வெள்ளி இரவில் தூய்மையான உடையணிந்து நறுமணம் பூசி இஷாத் தொழுகை முடித்து உளுவுடன் நூற்று எழுபது தடவை இந்த ஸலவாத்தை ஓதி விட்டு உறங்கவும். இவாறு தொடர்ந்து மொத்தம் பதினொரு இரவுகள் செய்துவரின் இவ்விரவுகளில் எதிலாவது அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
ஸலவாத் என்பது எங்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது நாம் சொல்லும் வாழ்த்தும் துஆவும் ஆகும்.
ஸலவாத் ஒரு பொக்கிஷம். அதன் சிறப்புகளையும் நன்மைகளையும் எழுத்தில் எழுதி முடிக்க முடியாது. அந்தளவு நன்மைகளும் பரக்கத்துகளும் ஸலவாத் ஒதுபவருக்கு கிடைக்கிறது.
♦ அல்லாஹுதஆலா தான் எந்த ஒரு அமலையும் செய்வதாக அல் குர்ஆனில் கூறவில்லை. எல்லா அமல்களும் மனிதர்களாகிய எங்களுக்கே. ஆனால், அல்லாஹுதஆலா தான் செய்வதாக சொல்லும் ஒரே ஒரு அமல் - ஸலவாத் மட்டுமே. அதில் இருந்து விளங்கி கொள்ளலாம் ஸலவாத் எவ்வளவு சிறப்பு மிக்க அமல் என்று.
அல்லாஹுதஆலா அல் குர்ஆனில் கூறுகிறான்:
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوۡنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَيۡهِ وَسَلِّمُوۡا تَسۡلِيۡمًا
"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் இந்த நபியின் மீது ஸலவாத் சொல்லுகின்றனர். ஈமான் கொண்ட மூஃமீன்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் அழகிய முறையில் ஸலாமும் சொல்லுங்கள்."
(அல்குர்ஆன் - 33:56)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"யாரேனும் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொன்னால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்வான்"
(நூல்: முஸ்லிம்)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்வாரேயாயின், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான். அவர் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவர் மீது அல்லாஹ் நூறுமுறை ஸலவாத்துச் சொல்கிறான். அவர் என் மீது நூறு முறை ஸலவாத்துச் சொன்னால், அவர் மீது அல்லாஹ் ஆயிரம் தடவை ஸலவாத்துச் சொல்கிறான். அதன்றி அவரது இரு புருவங்களுக்கு மத்தியிலும் இவர் 'நிஃபாக்' என்னும் கபட விசுவாசத்தை விட்டும் விடுதலை பெற்றவரென்றும் அல்லாஹ் பதிவு செய்து விடுகிறான்" (நூல்: தப்ரானி)
♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அதிகாலையில் மலர்ந்த முகத்துடனும், குளிர்ந்த இதயத்துடனும் வந்தார்கள். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: "யா ரசூலுல்லாஹ்! அதிகாலையிலேயே தங்களை சிரித்த முகத்துடனும் மலர்ந்த இதயத்துடனும் காண்கிறோமே! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பதிலளித்தார்கள்
ஆம்! எனது ரப்பிடமிருந்து எனக்கு (சுபச்) செய்தி வந்தது. உங்கள் உம்மத்துக்களில் ஒருவர் உங்கள் மீது ஒரு ஸலவாத் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன. பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. அவர் மீது அதே ஸலவாத்தும் அருளப்படுகிறது (என்பதாக).
(நூல் - அஹ்மத், நஸயீ, தர்கீப் லில் முன்திரி)
♦ உபை இப்னு கஃப் (ரலியல்லாஹூ அன்ஹூ) என்னும் நபித்தோழர் ஒருவர் ஒரு முறை அண்ணலாரிடம் வந்து, அல்லாஹ்வின் ரஹூலே! நான் உங்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்து ஓதி வருகிறேன். நான் எவ்வளவு ஓத வேண்டும்? ஒரு நாளில் கால் பகுதியில் ஸலவாத்து ஓதட்டுமா? என்று கேட்க, நல்லது அது போன்றே செய்வீராக. எனினும் அதைவிட அதிகப்படுத்திக்கொள்ளல் உமக்கு சிறந்ததென்று அண்ணலார் சொல்ல, அதற்கவர்: அவ்வாறாயின் ஒரு நாளில் பாதி அளவு உங்கள் மீது ஸலவாத்து ஓதவா? என்று திரும்பக்கேட்க அண்ணலார்: நல்லது அவ்வாறே செய்யும், நீர் விரும்பினால் இன்னும் அதிகமாக்கினால் உமக்கு சிறந்ததென்று சொல்ல, மீண்டும் அவர்: அல்லாஹ்வின் ரஸூலே! ஒரு நாளில் மூன்று பகுதி நேரம் உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லட்டுமா? என்று திரும்பவும் கேட்க, நல்லது அவ்வாறே செய்யும் எனினும் இன்னும் அதிகப்படுத்துதல் உமக்கு சிறந்ததென்று அண்ணலார் திரும்பக்கூறவும் அதற்கவர் மீண்டும், இனிய அல்லாஹ்வின் ரஸூலே! நாள் முழுவதும் உங்கள் மீது ஸலவாத்துச்சொல்வதிலேயே கழிக்கவா? என்று கேட்க, அருமை நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், உடனே உமது கவலைகள் அகன்று, பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.
(நூல்: திர்மிதி, தாரகுத்னீ)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"நாட்களில் மிகச்சிறந்தது ஜூம்ஆவுடைய நாளாகும். அன்று அதிகமாக என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். உங்களின் ஸலவாத்து எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது"
(நூல்: அபூதாவூத்)
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்:
"மறுமையில் எனக்கு மிகவும் நெருங்கியவர், என் மீது அதிகம் ஸலவாத்துச் சொன்னவரே"
(நூல்: திர்மிதி)
♦ அல்லாஹ்வின் அன்பும் திருப்பொருத்தமும் கிடைக்கும்
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் அன்பும் திருப்பொருத்தமும் கிடைக்கும்
♦ ஸலவாத் சொல்பவரின் மீது அல்லாஹ் திரும்ப ஸலவாத் சொல்கிறான்
♦ ஸலவாத் சொல்பவரின் மீது நபிகள் நாயகம் ﷺ திரும்ப ஸலவாத் சொல்கிறார்கள்
♦ ஸலவாத் சொல்பவரின் மீது மலக்குகளும் திரும்ப ஸலவாத் சொல்கின்றனர்
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களோடு சுவர்க்கத்திலே ஒன்றாக நெருங்கி இருக்க உதவும்
♦ அதிகமான பாவங்கள் மன்னிக்கப்படும்
♦ அதிகமான நன்மைகள் எழுதப்படும்
♦ அதிகமான அந்தஸ்துகள் (தரஜா) உயர்த்தப்படும்
♦ சுவர்க்கம் செல்ல துணை புரியும்
♦ நரகத்தை விட்டு பாதுகாக்கும்
♦ ஸலவாத் சொல்பவரின் அமல்கள் பரிசுத்தமாக்கப்டும்
♦ துஆக்கள் (பிரார்த்தனைகள்) அங்கீகரிக்கப்பட உதவி செய்கிறது
♦ வாழ்க்கையில் சந்தோசம், நிம்மதி ஏற்படுகிறது
♦ வாழ்க்கையில் பறக்கத் (அபிவிருத்தி) ஏற்படுகிறது
♦ உள்ளத்தில் அல்லாஹ்வின் ஒளி (நூர்) ஏற்படுகிறது
♦ மனிதனின் கஷ்டங்கள், கவலைகள், பிரச்சினைகள் அனைத்தும் நீங்குகின்றன
♦ ஆபத்துகள், நோய்கள், சூனியம், கண் திருஷ்டி ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு தரும்
♦ நாளை மறுமையில் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் ஷபாஅத் (சிபாரிசு) கிடைக்க துணைப்புரிகிறது
♦ மறுமையில் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் ஸலவாத் சொல்பவருக்கு சாட்சியாக ஆவார்கள்
♦ உள்ளத்திலே உள்ள முனாபிக் (நயவஞ்சக) தனத்தை நீக்குகிறது
♦ ஸதகா (தர்மம்) செய்ய வசதியற்ற்வருக்கு ஸலவாத் தர்மத்தின் ஸ்தானத்தில் இருப்பது
♦ இருபது தடவைகள் ஜிஹாது செய்வதைவிட அதிகமான நன்மைகள் கிடைப்பது
♦ அடிமைகளை விடுதளைசெய்வதை விட அதிக நன்மைகளை பெற்றுத்தருவது
♦ மற்றவருக்கு ஈஸால் ஸவாப் செய்வதற்கு ஓதும்போது, ஒதுபவருக்கும் ஓதப்படுவருக்கும் நன்மை கிடைப்பது
♦ ஹாபாக்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லாம் முழு உலகிலும் பரவுவதற்கும் செய்த தொண்டு சொல்லி முடிக்க முடியாது.
ஸலவாத் என்பது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது வாழ்த்து சொல்லுதலையும் துஆ பிரார்த்தனை புரிதலையும் குறிக்கும்.
ஸலவாத் பல்வேறு முறைகளில் சொல்லலாம். உதாரணமாக,
♦ அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யதினா முஹம்மத்
(அல்லாஹ்வே! எங்கள் தலைவர் முஹம்மத் ﷺ மீது பிரார்த்தனை புரிவாயாக)
♦ அல்லாஹும்ம ஸல்லி வசல்லிம் அலா சைய்யதினா முஹம்மத்
(அல்லாஹ்வே! எங்கள் தலைவர் முஹம்மத் ﷺ மீது பிரார்த்தனை புரிந்து அமைதியை பொழிவாயாக)
♦ அல்லாஹும்ம ஸல்லி வசல்லிம் வபாரிக் அலா சைய்யதினா முஹம்மத்
(அல்லாஹ்வே! எங்கள் தலைவர் முஹம்மத் ﷺ மீது பிரார்த்தனை புரிந்து அமைதியை பொழிந்து அருள் புரிவாயாக)
♦ அல்லாஹும்ம ஸல்லி வசல்லிம் அலா சைய்யதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி
(அல்லாஹ்வே! எங்கள் தலைவர் முஹம்மத் ﷺ மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் தோழர்கள் மீதும் நீ பிரார்த்தனை புரிந்து அமைதியை பொழிவாயாக)
♦ ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
(முஹம்மத் ﷺ மீது அல்லாஹ்வின் பிரார்த்தனை பொழியட்டும்)
♦ ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்
(முஹம்மத் ﷺ மீது அல்லாஹ்வின் பிரார்த்தனை மற்றும் அமைதி பொழியட்டும்)
இவை யாவும் ஸலவாத் ஓதும் ஒரு சில முறைகளாகும். இதே போன்று பல்வேறு முறைகளில் இவற்றை விட வார்த்தைகளை கூட்டியோ குறைத்தோ வேறு முறைகளிலும் ஸலவாத் சொல்லலாம். அனைத்தும் சிறந்ததே. அனைத்துக்கும் நிறைய நற்கூலிகள் கிடைக்கப்பெறும்.
நாம் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதும் ஸலவாத் இப்ராஹிமிய்யா நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களால் தொழுகையில் ஓத சொல்லி கொடுக்கப்பட்ட ஸலவாத் ஆகும்
இவற்றை தவிர பல்வேறு சிறப்பு வாய்ந்த ஸலவாத்துகள் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களால் இயற்றப்பட்டு உலகளவில் ஓதப்பட்டு வருகின்றன. அந்த ஸலவாத்துகளில் பல நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களால் அந்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்களுக்கு கனவின் மூலமோ வேறு வகையிலோ கற்பிக்கப்பட்டு அவை எழுதப்பட்டவையாகும். அதற்குரிய நன்மைகளும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களால் அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு சில ஸலவாத்துகளையும் அதன் சிறப்புகளையும் இங்கு பார்ப்போம்.
وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
தமிழில்:
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா முஹம்மதின் வஆலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா செய்யதினா இப்ராஹிம வஆலா ஆலி செய்யதினா இப்ராஹிம இன்னக ஹமீதின் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா செய்யதினா முஹம்மதின் வ ஆலா ஆலி செய்யதினா முஹம்மதின் கமா பாரக்த அலா செய்யதினா இப்ராஹிம வஆலா ஆலி செய்யதினா இப்ராஹிம இன்னக ஹமீதின் மஜீத்
ஓதுவதால் கிடைக்கும் பலன்கள்:
► மறுமையில் பெருமானாரின் பரிவுரை பெற:
இந்த ஸலவாத்தை ஒருவன் ஒதிவந்தால் மறுமையில் அவனுக்குத் தாம் பிணை ஏற்று இறைவனிடம் அவனுக்காகப் பரிந்துரைப்பதாகப் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
► பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காண:
இந்த ஸலவாத்தை ஒருவன் ஆயிரம் (1000) தடவை ஒதிவந்தால் அவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களைக் கனவில் காணும் பேறு பெறுவான்.
► நோய்கள் நீங்கப்பெற:
இந்த ஸலவாத்தை ஒருவன் ஒதிவந்தால் எல்லா நோய்களும் நீங்கப்பெறும்.
الَّلهـُمَّ صَلِّ عَلىَ سَيِّدِـناَ مُحَمَّـدٍ صَلَتً تُنْـجِـنَا بِهَا مِنْ جَـمِيـْعِ اَلْاَ هـوَالِ وَاَلْاَ فاَتِ
وَتـَقْضِى لَنَا بِـهـَا جَـمِيْعَ الْحَا جَاتِ ، وَتُـطَـهِـرُنَا بِهاَ مِنْ جَمِيعِ السَّـيِئاَ تِ،
وَتَرْ فَعُناَ بِهاَ اَعْلىَ الدَّ رَجاَتِ ، وَتُبَـلِّـغُـنَا بِهاَ اَقْصَ الْغاَ ياَتِ، مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ
فِى الْحَياَتِ وَبَعْدَ الْمَماَتِ اِنَّكَ عَلىَ كُلِّ شَيئٍ قَـدِ يْرٌ.
தமிழில்:
அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதினின் சலாத்தன் துன்ஜினா பிஹா மின் ஜமீஹில் அஹ்வாலி வல் ஆஃபாத்தி வதக்ளிலனா பிஹா ஜமீஹல் ஹாஜாத்தி, வதுதஹ்ருணா பிஹா மின் ஜமீலில் செய்ஹாத்தி, வதர்பஹுணா பிஹா இந்திக அஹ்லா வதரஜாத்தி, வ தபல்குனா பிஹா அக்சல் காயாத்தி, மின் ஜமீஹில் கைராத்தி, ஃபில் ஹயாத்தி வபஹ்தல் மமாத்தி.
ஓதுவதால் கிடைக்கும் பலன்கள்:
► எண்ணங்கள் நிறைவேற: