MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "கஃபாவின் கஃபா" - அல் குர்ஆன்
"கத் நரா தகல்லுபன் வஜ்ஹிக பிஸ்'சமாயி ப'லன்னு வல்லியன்னக கிப்லத்தன் தர்'தா'ஹா ப'வள்லி வஜ்ஹக ஷத்'ரல் மஸ்ஜிதில் ஹராம்'அ..
அல் குர்ஆன் - அத்தியாயம் - அல் பகரா, வசனம் - 144
(நபியே) உம்முடைய திருவதனம் கிப்லா திசை மாற்றத்தினை எதிர்ப்பார்த்து வானத்தினை நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பதை நிச்சயமாக நாம் காண்கின்றோம்; எனவே உமக்கு விருப்பமான அந்த கிப்லா (காஃபா-வின்) பக்கம் உம்மை நாம் நிச்சயமாக திருப்புவோம்.
இந்த இறைவசனத்தில், வெளிப்படையில் தொழுகையின் கிப்லா திசை மாற்றம் செய்ய கட்டளை இடப்படுகின்றது. சற்று நமது ஈமானை கொண்டு உற்று நோக்கி பார்ப்போமானால் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புகழ் ஜோதியின் பிரகாசம் பிரதிபலிப்பதினை உணரலாம். சுபானல்லாஹ்.
ஹகிகதில் இந்த இறைவசனம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை "கஃபாவின் கஃபா" என்கின்றது.
மேலும் அனைவருக்கும் முஸ்தபா காஃபா என்கின்றது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.
இந்த இறைவசனத்தின் மகத்துவமானது, மக்கா முகர்ரமாவில் மெஹ்ராஜ் உடைய இரவு அன்று தொழுகை கடமையாக்கப்பட்டது, கிப்லா காஃபாவாக இருந்து வந்தது.
நபிகளாரின் ஹிஜ்ரத்திற்கு பிறகு, காஃபா -விற்கு பதிலாக "பைத் அல் முகத்தஸ்" திசையை நோக்கி தொழவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இந்த பைத் அல் முகத்தஸ் யஹூதிகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கிப்லாவாக இருந்து வந்தது.
அப்போது யஹுதிகளும், கிறிஸ்தவர்களும் கூறினார்கள் "முஹம்மத்" (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) எங்களுடைய எல்லா விஷயங்களிலும் எதிராக நடந்துவந்தாலும், அவர் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) எங்களுடைய கிப்லாவான பைத் அல் முகத்தஸை நோக்கி தான் இறை வணக்கம் புரிகின்றார் என்று சொல்லி கொண்டே வண்ணம் இருந்தனர்.
இவர்களின் இக்கூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹி சலாம் அவர்களினால் கட்டப்பட்ட காஃபா முஅஸ்ஸமா ஆகும். நமது நபிகாளார் "இப்ராஹீமி" ஆவர்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் முயற்சி மீண்டும் காஃபா-வை நமது கிப்லாவாக (தொழும் திசையாக) மாற்றிவிடவேண்டும்.
பைத் அல் முகத்தசினை நோக்கி தொழுதவாரே 17 மாதங்கள் கழிந்து விட்டன, அவ்வாறு தொழுது கொண்டும் இருக்கும் காலத்தில் ஒரு முறை நமது நபிகளார் ஹஸ்ரத் ஜிப்ரீல் ருஹுல் அமீன் அலைஹி சலாம் அவர்களிடத்தில் கூறினார்கள். "ஜிப்ரில் அவர்களே, எனது மனம் காஃபாவினை நோக்கியே தொழ வேண்டும் என்று நாடுகின்றது என்றார்கள்.
அதற்க்கு ஜிப்ரில் அலைஹி சலாம் அவர்கள் கூறினார்கள், யா ஹபிபல்லாஹ் !
நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் அவனது அனுமதி இன்றி நான் எதுவும் கூற இயலாது. தாங்களோ அல்லாஹ்வின் நேசராக உள்ளீர்கள், தங்களின் வேண்டுதலோ இறைவனிடத்தில் ஒருபோதும் நிராகரிக்கபடமாட்டாது. ஹபிபல்லாஹ் இறைவனிடத்தில் வேண்டிக்கொள்ளவும் என்று கூறி ஜிப்ரில் அலைஹி சலாம் அவர்கள் விடை பெற்றார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இறைவனிடம் துஆ செய்தார்கள். சையதுள் ஆஃழம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் "வஹீ" வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டே தன்னுடைய முபாரக்கான திருவதனத்தினை வானத்தின் பக்கம் உயர்த்திக்கொண்டே இருந்தார்கள். "வஹீ" இப்போது வந்துவிடும் என்றவாறே மேலே பார்த்தவாறே "வஹீ" வந்து கிப்லா மாறிவிடும் என்று எதிர்பார்த்துகொண்டே இருந்தார்கள்.
ரப்புல் ஆலமின் இந்த முஹப்பத்தான இந்த நபிகளாரின் செயல் மிகவும் பிடித்துப்போனது. மற்றும் அல்லாஹ் இந்த திருவசனத்தில் கூறினான் "ஹபீபே நாம் உங்கள் திருவதனதினை வானத்தின் பக்கம் திரும்புவதினை பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் ! தாங்கள் மீண்டும் மீண்டும் தங்களுடைய முபாரக்கான முகத்தினை வானத்தின் பக்கம் கண்டீர்கள், சரியே, உங்களுடைய கிப்லாவாக (காஃபா-வை) உங்களுக்கு அளிக்கின்றோம் நீங்கள் விரும்பியபடியே ! (தப்ஸீர் ருஹுல் பயான்)
"முஸ்தபா எப்பக்கம் திரும்பினார்களோ அப்பக்கமே காலமும் திரும்பியது"
சுபானல்லாஹ் !!!
இந்த இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்.
எல்லோரும் ஷரியத்தின் சட்டத்திற்கு ஏற்றவாறு விரும்பி நடக்கின்றார்கள். ஷரியத் சட்டமோ முஸ்தபா-விற்கு பிடித்தமானதை கொண்டு நடக்கின்றது. சுபானல்லாஹ்.
மேலும் இந்த காஃபாவிற்கு கிடைத்த வெகுமதி எவ்வாறென்றால் எல்லா அவ்லியாக்களும், கௌஸ், குத்துப், அப்தால் போன்றவர்கள் காஃபவினை நோக்கி தற்தன் தலைகளை குனிந்ததனால் கிடைத்தது. இது முற்றிலுமாக முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களால் அளிக்கப்பட பரிசினால் கிடைத்தது. நம் நபிகளாரின் விருப்பத்தினால் காஃபாவை கியாம நாள் வரைக்கும் கிப்லாவாக ஆக்கப்பட்டுள்ளது.
பின்பு சஜ்தா செய்பவர் மஸ்ஜித்-யை விட மேன்மையானவர் ஆவர். ஹஸ்ரத் யாகூப் அலைஹி சலாம் அவர்கள் ஹஸ்ரத் யூசுப் அலைஹி சலாம் அவர்களுக்கு சஜ்தா செய்தார்கள் ஏனென்றால் யாகூப் அலைஹி சாலம் யூசுப் அலைஹி சலாம் அவர்களை விட மேன்மையானவர்கள். இதே போல் முஹம்மத் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காஃபவினை சஜ்தா செய்தார்கள் ஆனால் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காஃபாவை விட மேன்மையானவர்கள்.
சட்டங்கள்:
எவரேனும் கடமையான அல்லது உபரியான தொழுகையினை தொழும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அழைத்தார்கள் என்றால் அவர் தொழுகையினை விட்டு நபிகளாரின் சன்னிதானத்திற்கு செல்வது வாஜீப் ஆகும். (மிஷ்காத் பாப் அல் பாஃஜா' யில் குர்ஆன்) இந்த விஷயத்தினை பற்றி கீழ்காணும் குர்ஆன் ஆயத்தில் வரும்.
"யா அய்யுஹள்ளஜினா ஆமானு அஸ்த'ஜியுபு லில்லாஹி வ ரசூலிஹி இசா த'ஆ கும்"
இதில் கட்டளை இடப்படுவது என்ன வென்றால் தொழுபவர் தன்னுடைய தொழுகையை விட்டு நபிகளாரிடத்தில் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களுடன் பேசி, தன்னுடைய நெஞ்சை கிப்லாவின் திசையை விட்டும் திருப்பினாலும் தொழுகை முறியாது அத்துடன் அவர் தொழுகையில் தான் இருக்கின்றார்.
(புகாரியின் கிஸ்தலானியின் விளக்கவுரையில், கிதாபுல் தப்ஸீர் சூரத்துல் அன் பாஃல் பற்றிய விள்ளக்கதினில் காணலாம்)
நெஞ்சு கிப்லாவினை விட்டு திரும்பினாலும் எப்பக்கம் திரும்பியது ?
அந்த பக்கம் எது வென்றால் அது கிப்லாவின் கிப்லாவாகும்.(ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
தொழுபவர் பேசினாலும் எவரிடத்தில் பேசினார்?
தொழுகையில் எவருக்கு சலாம் உரிப்பது வாஜிபோ அவரிடத்தில். (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
அஸ்ஸலாமு அலைக்கும் யா அய்யுஹன் நபியு வ ரஹ்மாதுல்லாஹி வ பர்காதஹு
காஃபாவும் முஸ்தபா அவர்களின் பிறப்பின் போது மகாம் எ இப்ராஹீம் பக்கம் சஜ்தா செய்தது. (மதாரிஜுன் நுபுவத், பாப் அல் விலாதத், பாகம் - 2 ல் ஆதாரத்துடன் ரசூல்லுல்லாஹ் "காஃபாவின் காஃபா" என நிருபிக்கப்பட்டுள்ளது.
ஹாஜிகளே! காஃபா-வை கண்டுகொண்டீர்கள்
வாருங்கள் காஃபாவின் காஃபாவினை காண செல்ல...
-Ala Hazrat Imam Ahmad Raza Khan Alahi Rahma-
யா ரசூல்லுல்லாஹ் ! ஹுப்பே துனியாவிலிருந்து என் மனதை சுத்தம் செய்யுங்கள்
காஃபாவை தாங்கள் சுத்தம் செய்தது போல்...
- Huzoor Mufti e Azam Hind Imam Musthafa Raza Khan Noori Alahi Rahma-
உர்து மூலம்:
ஹகீம் அல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயுனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன் என்ற நூலிலிருந்து