MAIL OF ISLAM

Knowledge & Wisdom



முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாவமன்னிப்பின் திறவுகோல் - அல் குர்ஆன்


"ப'தலக்கா ஆதம மிர்ரப்பிஹி கலிமாதின் பதாப அலைஹி இன்னஹு ஹுவத்தவ்வாபூர் ரஹீம்"


"பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்."


அல் குர்ஆன் - அத்தியாயம் - 2 அல் பகரா வசனம் - -37



இந்த இறைவசனத்தில் அல்லாஹுதாலா ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதை பற்றி கூறுகின்றான். இந்த சம்பவத்தில் ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்கள் தான் செய்த பாவத்திற்கு பிறகு 300 வருடங்கள் வரை தன்னுடைய தலையை வானத்தை நோக்கி உயர்த்தவில்லை.


அவர்கள் எந்த அளவிற்கு அழுதார்கள் என்றல் இந்த உலகில் உள்ள அணைத்து கண்ணீர்களையும் ஒன்று சேர்த்தாலும் அவர்கள் வடித்த கண்ணீருக்கு சமமாகாது. (தப்சீர் ருஹுள் பயான், க்ஹஜாயின், மாதாரிக்)


இந்த உலகில் 5 நபர்கள் மிகவும் அழுதார்கள்.


1. இமாம் சையதினா ஜைனுல் ஆபீதீன் பின் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு

கர்பலா துயர சம்பவத்திற்கு பிறகு அழுதது


2. சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா

தன்னுடைய தந்தையார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மறைவிற்கு பிறகு


3. சையதினா யஹ்யா அலைஹி சலாம் இறைவனுக்கு அஞ்சி அழுதது


4. சையதினா யாகூப் அலைஹி சலாம் மற்றும்


5. சையதினா ஆதம் அலைஹி சலாம் அவர்களும் தன்னுடைய பாவத்தினை நினைத்து அழுதார்கள்.



பின்பு ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்களுக்கு மனதில் சில வாக்குகள்(துஆ) பரிசுத்த இறைவனின் கருணையால் தோன்றியது. எப்போது அந்த வாக்குகளை கொண்டு இறைவனிடம மன்றாடினார்களோ இறைவனின் அருள் கடல்கள் பொங்கி எழுந்தன மன்னிப்பும் கிடைத்தது.


அந்த வாக்குகள் (துஆ) என்ன?


இது பலதரப்பட்ட அறிவிப்புக்கள் உள்ளன. ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தேஹ்லவி, மதாரிஜுன் நுபுவத் பாகம் - 2ன் தொடர்ச்சியில், ரூஹுள் பயான், தப்ரானி, ஹாகிம், அபு நயீம், பைஹகி போன்ற நூல்களில் ஹஸ்ரத் சையதினா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொண்டு அறிவிப்பு காணப்படுகின்றது.


ஹஸ்ரத் ஆதம் அலைஹி சலாம் அவர்கள் அழுதுகொண்டு இருந்தபோது ஒரு நாள் அவர்களின் மனதில் நினைத்தார்கள் "நான் பிறந்து அர்ஷினை முதன் முறையாக பார்த்தபோது அர்ஷில் எழுதப்பட்டு இருந்தது.


"லா ஹிலாஹா ஹில்லல்லாஹ் முஹம்மதுர் ரசூல்லுல்லாஹ்" அப்போது உணர்ந்தார்கள் அல்லாஹ்வின் திருநாமத்திற்கு பிறகு "முகர்ரப்" (மிகவும் சமீபமாக) "முஹம்மத்" என்ற நாமம் சேர்த்து இருப்பதினை நினைத்து, இறைவனிடம் மன்றாடினார்கள் என்னுடைய இறைவனே இந்த "முஹம்மத்" என்ற நாமத்தின் பொருட்டாலே நான் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகின்றேன். என்னை மன்னிப்பாயாக !


இந்த நேரத்தில் இறைவனின் அருட்பெருங்கடல்கள் பொங்கி எழுந்தன. மன்னிப்பும் கிடைத்தது. சுபானல்லாஹ். என்ன அருமையான ரஹ்மத் பொருந்திய அந்த திருப்பெயர். அந்த பெயருக்காக தன்னுடைய தந்தையை (ஹஸ்ரத் ஆதம்) சஜ்தா எ மாலயிக்க செய்யவைத்து பாவமன்னிப்பும் கிட்டியது.


"கண்ணின் மணியாம் நாமம் முஹம்மது

கல்பின் ஜோதியாம் நாமம் முஹம்மத்"


--ALA HAZRAT IMAM AHAMAD RAZA KHAN ALAIHI RAHMA--



இப்போது ஆதமின் சந்ததிக்கும் இது கட்டளையிட்டப்பட்டுள்ளது. தனக்கு பாவம் செய்து கொண்டவர் ரசூல்லுல்லாஹ்வின் திருச்சன்னிதானம் சென்று இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரி ரசூல்லுல்லாஹ் அவர்களின் ஷபா'அத் பெற்றால் நம்முடைய பாவங்களும் மன்னிக்கப்படும்.


"வளஹு அன்னஹும் இஜா ஜலமு அண்'புசஹும் ஜாவூக பஅஸ்தபிருல்லாஹா ப'அஸ்தபிருலஹு முர்ரசூலு லாவஜதூ அல்லாஹா தவ்வாபர் ரஹீமா."


இதன் அர்த்தம் மதீனாவிற்கு சென்று தான் மன்றாடவேண்டும் என்பது அல்ல, ரசூல்லுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை நினைத்துக்கொண்டே மன்றாடினால் போதுமானது. நம் கண்மணி நாயகம் "ஹாசிர் ஒ நாசிர்" ஆக இருக்கின்றார்கள்.



"யா ரசூல்லுல்லாஹ் மனதின் கண்ணாடியில் உங்களுடைய தசவ்வூர் இருக்கின்றது

கொஞ்சம் என்னுடைய நிகாபினை தாங்கள் அகற்றினால் நான் தங்களை கண்டுகொள்வேன்"


---அஹ்மத் யார் காஃன் நயமி ரழியல்லாஹு அன்ஹு --




யா ரசூல்லுல்லாஹ் ! சத்தியமாக தாங்களே ஜீவியம், தாங்களே ஜீவியம் !!

என்னுடைய பார்வையின் உலகில் மறைந்து வாழ்பவரே !!


--ALA HAZRAT IMAM AHAMAD RAZA KHAN ALAIHI RAHMA--



ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



உர்து மூலம்:

ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயோனி ரஹ்மதுல்லாஹி அலைஹி

ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன் என்ற நூலிலிருந்து