MAIL OF ISLAM

Knowledge & Wisdom



முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - முதன்மை மற்றும் இறுதியின் கிரீடம்


"அவனே முதன்மையானவனும் இறுதியானவனும், அவனே வெளிப்படையானவனும் (மேலானவும்) அவனே அந்தரங்கமானவனும் (ஆவான்) மேலும் அவன் ஒவ்வொன்றையும் (பொருளையும்) நன்கரிந்தவனாவன்."


அல் குர்ஆன் ஷரிப் - அத்தியாயம்: 57 , வசனம் - 3


ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தஹ்லவி அலைஹி ரஹ்மதுல்லில் ரித்வான் அவர்கள் மதாரிஜுன் நுபுவத் என்ற நூலின் குத்பாவில் குறிப்பிடுகிறார்கள். இந்த இறைவசனம் அல்லாஹ்வினுடைய புகழையும் அத்துடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் புகழ் கீதத்தையும் பாடுகின்றதாக அமைந்துள்ளது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் முதன்மையானவராகவும், இறுதியானவராகவும் இருக்கின்றார்கள். எல்லோருக்கும் வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் எல்லாவற்றையும் அறியக்கூடியவராகவும் இருக்கின்றார்கள்.


இந்த துனியாவிலும், ஆகிரதிலும் ஒவ்வோரிடத்திலும் நபிகளார் முதன்மைபெற்று முன்னோடியாக திகழ்கின்றார்கள். முதன்முதலாக நபிகளாரின் நூர் படைக்கப்பட்டது. "அவ்வலு மா கலக்கல்லாஹு நூரி "


உடல் ரீதியாக நம் நபிகளாரின் தந்தை ஹஸ்ரத் ஆதம் அலைஹி வ ஸலாம் அவர்கள். "ஹகிகதில்" ஹஸ்ரத் ஆதம் அலைஹி வ ஸலாம் அவர்களின் தந்தையாக நம் கண்மணி நாயகம் நபிகளார் ஆவார்கள்.


வெளிப்படையில் செடிகளிலிருந்து பூக்கள் இருந்தாலும். "ஹகிகதில்" பூக்களுக்காக தான் அந்த செடிகள் போன்றதாகும்.


வெளிப்படையில் என்னை போன்றவரே, "ஹகிகதில்" என்னுடைய அசலே !

உங்கள் புன்சிரிப்பின் நினைவில் என்டேன்றும் இந்த "பஷரே" (அடிமையே) !!


இந்த உலகின் பூந்தோட்டத்தில் நம் நபிகளார் அவர்கள் "பூ" ஆவர்கள், ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.


முதன்முதலாக நம் நபிகளாருக்கே "நுபுவத்" அருளப்பட்டது. நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்


"குன்து நபயாவ் ஆதமு பைன அத்தைனி"


"ஆதம் (அலைஹி ஸலாம்) அவர்கள் மண்ணுக்கும் தண்ணீருக்கும் மத்தியில் இருந்த போதே நான் நபியாக இருந்தேன்."


ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் மண்ணுக்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருந்துகொண்டிருக்கும் போது, "மீசாக்" உடைய நாளில் "அளஸ்து பி ரப்பிகும்" என்பதன் பதிலில் எல்லாவற்றுக்கும் முதலாக "பலா" கூறியவர்கள் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஆவார்கள்.


கியாமதுடைய நாளின் போது நம் நபிகளாரின் "கபர்" என்ற அடக்கஸ்தலம் திறக்கப்படும், கியாமதுடைய நாளின் போது நம் நபிகளாருக்கு தான் "சஜ்தா" செய்ய உத்தரவு கிடைக்கும், முதல் நபராக நம் நபிகளாரே "ஷபா'அத்" என்ற சிபாரிசு செய்வார்கள்.


"ஷபா'அத்" உடைய கதவு நம் நபிகளாரின் திருக்கரங்களில் தான் திறக்கப்படும், நம்முடைய நபிகளார் தான் சொர்கத்தின் கதவையும் திறந்து வைப்பார்கள், நம்முடைய நபிகளார் தான் சொர்க்கத்தில் முதல் நபராக உள்ளே நுழைவார்கள் பின்னர் எல்லா நபிமார்களும் உள்ளே நுழைவார்கள்.


பிறகு முதன்மையாக நபிகளாரின் உம்மத் சொர்க்கத்தில் நுழையும் பிறகு மற்ற உம்மதார்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க படுவார்கள்.


இவ்வாறு ஒவ்வொன்றிலும் முதன்மைதனத்தின் முத்திரை நபிகளாரின் கிரீடத்தில் உள்ளது. முதன்மை நாள் அதாவது "ஜும்மா" உடைய நாள் நம் நபிகளாருக்கு தான் அருளப்பெற்றது. இவ்வாறு முதன்மையின் வேகத்திற்கும் நபிகளாரே முன்னிறுத்த படுகின்றார்கள். அதுமட்டும் இன்றி இருதியானதிலும் கூட நபிகளாரே முன்னிறுத்த படுகின்றார்கள்.


"காதமுன் நபியீன்" இறுதி நபி என்ற பட்டமும் நம் நபிகளாருக்கே அருளப்பட்டது. எல்லாவற்றிலும் இறுதியாக நம் நபிகளாருக்கே இறுதி புத்தகம் (குரான் ஷரிப்) அருளப்பட்டது. இறுதிகட்ட "தீன்" முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் "தீன்" ஆனது.


கடைசி நாள் அதாவது கியாமத் நாள் வரையிலும் நம் நபிகளாரின் "தீன்" நிலைநிறுத்தபடும்


"யாருக்கு தெரியும் எத்தனை நட்சத்திரங்கள் வந்து சென்றன ?

என்டேன்றும் மின்னும் எங்கள் நட்சத்திரம் என் நாயகமே !!! (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)


உர்து மூலம்: ஹகீமுல் உம்மத் அஹமத் யார் காஃன் நயமீ பாதாயூனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)

புத்தகம்: Shaan e Habibur Rahman min Aayathil Quran