MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அலைஹிவஸல்லம் "அப்ழலுல் அன்பியா", அல்-குர்ஆன்
தில்க அர் ருசுலு ப'ழ்சல்னா ப'daஹும் அலா பா(dh)திம் மின்ஹும் மன்கல்லமல்லாஹு வரFபA ப'daஹும் தரஜாதின்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;
அல்-குர்ஆன் - பாகம் - 3 அத்தியாயம் - அல் பகரா, வசனம் - 253
--
இந்த இறைவசனத்தில் கூறப்பட்டிருப்பதாவது ....!
இந்த உலகில் உள்ள படைப்புகளுக்கு ஹிதாயத் என்ற நேர்வழி அடையும் பொருட்டு "அன்பியா இக்ராம்" என்ற நபி மார்களை ஏக இறைவன் அனுப்பி வைத்துள்ளான் . இந்த அன்பியாக்கள் எல்லோரும் ஒரே "தர்ஜா"-விழும் ஒரே "மர்தப"-விழும் இல்லை. மாறாக ஒவ்வொரு நபிமார்களும் ஒவ்வொரு சிறப்புக்களையும், மகத்துவங்களை கொண்டும் இருக்கின்றனர்.
நபிமார்களில் "கலிமுல்லாஹ்"-வாகவும், "கலீலுல்லாஹ்"-வாகவும், "ஸzஃபியுல்லாஹ்"-வாகவும், "ரூஹுல்லாஹ்"-வாகவும் மற்றும் சில நபிமார்கள் குறிப்பிட்ட "தர்ஜா"க்களை கொண்டும் வருகை புரிந்துள்ளார்கள். இந்த எல்லா "தர்ஜா"-க்களும் அல்லாஹ் சுபானவதலாவின் மூலம் கொடுக்கப்பட்டன.
முப'அஸ்ரின்கள் கூறுகின்றார்கள், இந்த இறைவசனத்தில் சொல்லப்படும் நபர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவர்கள். இறைவசனத்தின் அர்த்தத்தினை எடுத்துக்கொண்டால் நம் நபிகளாருக்கு எந்தெந்த அந்தஸ்துகளும், மகத்துவமும் அருளப்பட்டு இருக்கின்றதோ, அந்த அந்தஸ்துகளும், மகத்துவங்களும் மனித அறிவால் யூகிக்கவோ, நினைத்தோ கூட முடியாத ஒன்றாகும். இவைகளை அருளிய இறைவனும், அருளப்பட்ட முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நன்கு அறிவர்.
இதை விளங்கவேண்டும் எனில், மற்ற நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்துகளும், மகத்துவங்களும் ஒன்று அல்லது இரண்டாகும். நம் முஸ்தபா முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ மற்ற நபிமார்களுக்கு அருளப்பெற்ற எல்லா மகத்துவங்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. இன்னும் சொல்லப்போனால் மற்ற நபி மார்களைவிடவும் அதிகமான மகத்துவங்கள் அருளப்பட்டு இருந்தன.
நம் நபிகளாரின் மகத்துவங்களை பற்றி புகழ்வதோ மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். மற்ற நபிமார்களோ ஒவ்வொரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்கு மட்டும் நபியாக அனுப்பட்டு இருந்தார்கள். ஆனால் நம் கண்மணி நாயத்தின் நபித்துவமோ எல்லோருக்கும் உரியாதாகும் மற்றும் அல்லாஹ்வே அனைவருக்கும் ஏக இறைவனாவான்.
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் "சிப்பாத்" - "ரஹ்மதுளில் ஆலமீன்"
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - மற்ற நபிமார்களுக்கும் நபியாவார்கள்
மற்ற எல்லா நபிமார்களும் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத் ஆவர்.
இதை பற்றியான விரிவான விளக்கம் "வ இஜ் அKஹஜல்லாஹு மீசாக்கன் நபீயின்" என்ற வசனத்தில் காணாலாம். (இன்ஷா அல்லாஹ்)
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "காதஹ்முன் நபி" (யாவார்கள்). நம் நபிகளாருக்கு பிறகு எந்த ஒரு நபியும் வரப்போவதில்லை.
முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "சாஹெப் எ மெஹ்ராஜ்" ஆவர்கள். மற்ற எந்த நபிமார்களுக்கும் மெஹ்ராஜ் என்ற விண்ணுலக யாத்திரை சென்றதில்லை.
"தூர் அவுர் மெஹ்ராஜ் கே கிஸ்சே மே ஹோதாஹே ஹியான்
அப்னா ஜானா அவுர் ஹே உன்கா பிளானா அவுர் ஹே"
தூர் மற்றும் மெஹ்ராஜ் உடைய சம்பவத்தில் உள்ள ஹிக்மத் என்ன என்றால்?
மூஸா தாமாக சென்றதும், ஹபிபுல்லா (இறையின்)அழைப்பின் பெயரில் சென்றதும் ஆகும் (அலைஹி முஸ்ஸலாம்)
--Hakeemul Ummath Mufti Ahmad Yaar Khan Nayami Badayoni (Razhiyallahu Anhu) --
எல்லா நபிமார்களும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தின் பெயரில் செயல்படுவார்கள். நம் நபிகளாரின் இறைவனோ, முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பொருத்தத்தையே நாடுபவனாக இருக்கின்றான். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் !
"வள சொவ்Fபா யூதிக ரப்புக ப தர்'சா" [93:5]
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
மற்றும் எல்லா நபிமார்களுக்கும் ஒரு சில "முஜுசாத்" என்ற "அதிசியங்கள்" அருளப்பட்டன. ஆனால் நம் நபிகளாரோ "சராpப முஜுசாத்" (முற்றிலுமாக அதிசியம் நிறைந்தவர்கள்)ஆவர்கள்.
நம் நபிகளாருக்கு அருளப்பட்ட "குர்ஆன்" மற்ற எல்லா கிதாப் (தவ்ராத், ஜபூர், இன்ஜீல்)-களின் அடங்கிய வேதமாகும். இதை எவராலும் பொய்பிக்க முடியாத ஒன்றாம், கியமா நாளில் "ஷாபா'அத் எ கிப்ரியா"வுடைய (இறைவனிடம் சிபாரிசு செய்யும் வல்லமை) கிரீடம் நம் நபிகளாருக்கு முடிசூட்டப்படும்.
நம் நபிகளாரின் உம்மத் எல்லா உம்மத்துக்களைவிடவும் சிறந்த உம்மதாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
இமாம் அஹ்மத் ரஸா காஃன் அலைஹி ரஹ்மா அறிவிக்கின்றார்கள்....
யா ரசூல்லுல்லாஹ் ! மே சர்வர் கஹூன் கே மாலிக் கஹூன் துஜே
மே மாலிக் ஹி கஹுங்கா, எ மாலிக் கே ஹபிப்
நா முஹிப் அவுர் மெஹபூப் மே பரக் மேரா தேரா....!
யா ரசூலுல்லாஹ் !
தங்களை வல்லமை என்று சொல்லவா ?
இல்லை அதிபதி என்று சொல்லவா ?
நான் அதிபதி என்றே சொல்லுவேன்
அதிபதியின் ஹபிபே !
அதிபதிக்கும் ஹபீபிற்க்கும் என்ன வித்தியாசம் !
உன்னுடையது என்னுடையது என்று ?
-ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் -
உர்து மூலம்:
ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயோனி அலைஹி ரஹ்மா
ஷான் எ ஹபயுர் ரஹ்மான் மின் ஆயதில் குர்ஆன் என்ற நூலிலிருந்து...