MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நரகவாதிகளுக்கு முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுப்பல்ல - அல் குர்ஆன்
இன்ன அர்ஸல்நா'க பில் ஹக்கி பாஷீறோ'வ் வ நசிறோ'வ் லா துஸ்அளுக அன் அஷாபில் ஜஹிமி.
அல் குர்ஆன் - அத்தியாயம் - அல் பகரா, ருகூ - 14, வசனம் - 119
(நபியே!) உம்மை உண்மையான (மார்க்கத்)தினை கொண்டு, (நல்லவர்களுக்கு) நன்மாராயம் தருபவராகவும் மற்றும் (தீயவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். மேலும் நரகவாசிகளை பற்றி நீர் கேள்வி கேட்கப்படமாட்டீர்.
இந்த இறைவசனத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சிறப்புகளும் அவர்களின் அந்தஸ்தினை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த இறைவசனம் இறக்கப்பட்ட காரணமானது...
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காபிர்களின் நிலைமைகளை கண்டு மிகவும் மனம் வேதனை அடைந்தார்கள். ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ரஹ்மத்தாக இருந்ததால் எல்லா மக்களும் முஸ்லிம்களாக மாறி சொர்கத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள்.
அல்லாஹ் சுபானஹுதாலா நம் நபிகளாரை துன்புறுத்துகின்ற எதிரிகளான எவரொருவரும் சொர்கத்தின் வாடையை கூட நுகர முடியாது செய்து இருந்தான். அல்லாஹ் அந்த காபிர்களின் இதயத்தில் ஈமானை நாடினால் அவர்கள் இதயம் சரி செய்ப்பட்டு ஈமான் கிட்டும்.
இந்த காரணத்தினால் அல்லாஹ் சுபானஹுதாலா நம் நபிகளாருக்கு கூறுகின்றான். எனது ஹபிபே இஸ்லாத்தினை எத்திவைப்பது மட்டும் தான் தங்கள் மீது கடமையாகும். தாங்கள் இதை நிறைவும் செய்துவருகிறீர்கள்.
உங்களிடம் கியாம நாளின் போது (சில) மக்கள் ஏன் ஈமான் கொள்ளவில்லை ? என்ற கேள்வி நபியே உங்களிடத்தில் கேட்கப்படமாட்டது. (அந்த) சிலர் "ஈமான்" கொள்ளாமைக்கு தாங்கள் பொறுப்பாக மாட்டிர்கள்.
சுபானல்லாஹ்.
ஏக இறைவன் தன்னுடைய ஹபிபின் உள்ளம் நோகாமல் இருக்கவும், காபிர்களை பற்றிய கவலைகளுக்கு ஆறுதல் அளிக்கவும் செய்கின்றான். இந்த இறைவசனத்தில் கவனித்தால் "இன்னா
அர்ஸல்'நா'க (நாம் உங்களை அனுப்பி வைத்தோம்). இதிலிருந்து நாம் அறிவது என்ன வென்றால்...
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வருகை இறைவன் அளித்த மிகப்பெரிய பரிசாகும். எப்பேர்பட்ட பரிசு என்றால்
"நாம் அடிமைகளுக்கு" அரசன் (அல்லாஹ்) கொடுத்த பரிசாகும்"
ஏக அரசன் (அல்லாஹ்) ஒரு அரசரை (முஸ்தபா-வை) பரிசளிக்கின்றான். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.
எல்லா நிஃமத்துக்களை விடவும் இந்த "முஸ்தபா" மிகப்பெரிய நியமத் ஆவர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் .
எந்த ஒரு பொருள் அனுப்பப்பட்டாலும், எல்லோருக்கும் தெரியும் அப்பொருள் ஏற்க்கனவே உண்டு என்று. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இந்த புவிக்கு அவதரித்த முன்பிலிருந்தே தன்னுடைய ரப்பிடம் "ஹாஸிர்" (Presence) ஆக இருந்தார்கள்.
எவ்வாறு "ஹாஸிர்" (Presence) ஆக இருந்தார்கள்?
இதை பற்றி தப்சீர் ருஹுல் பயான்-இல் "லகத் ஜா'அகும் ரசூலன்" என்ற ஆயத்தின் அடிப்படையில் ஒரு அறிவிப்பு காணப்படுகின்றது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு முறை ஹஸ்ரத் ஜிப்ரீல் ருஹுல் அமீன் அலைஹி சலாம் அவர்களிடம் அவர்களின் வயதினை பற்றி விசாரித்தார்கள். அதற்க்கு ஜிப்ரீல் ருஹுல் அமீன் அலைஹி சலாம் அவர்கள் கூறினார்கள் இது என்னால் கூற இயலாது அல்லாஹ்வின் ஹபிபே !
நான் ஒன்றை மட்டும் அறிந்து வைத்து இருக்கின்றேன் அல்லாஹ்வின் ஹபிபே.. ஒரு நட்சத்திரம் உள்ளது அது 70,000 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிரகாசிக்கும் ! அந்த நட்சதிரதினை நான் 72,000 முறை பார்த்து இருக்கின்றேன். நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் தான் அந்த நட்சத்திரம் என்று தன்னுடைய புனித தலைப்பாகையினை சற்று விளக்கி காண்பித்தார்கள் ஜிப்ரீல் ருஹுல் அமீன் அலைஹி சலாம் அவர்கள் அந்த நட்சத்திரத்தினை அடையாளம் கண்டார்கள். சுபானல்லாஹ்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் "ஜாத்" தன்னுடைய அசலில் (இறைவனிடம்) எந்த அளவிற்கு "ஹாஸிர்" ஆக இருந்தார்கள் என்று நம்முடைய சிறு அறிவினை கொண்டு கூற இயலாது. பூக்கள் தன்னுடைய செடியில் ஒரு நாள் மட்டுமே இருந்து வாடிவிடுகின்றன, பூக்களின் நறுமணத்தினை நான் பெற்றுகொள்கிறோம் என்றால் ஏன் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இறைவனுடைய "சாத்"-ல் இருந்து பிரிந்து இருப்பார்கள்?
ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தேஹ்லவி அலைஹி ரஹ்மா தன்னுடைய குத்பாவான மதாரிஜுன் நுபுவத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இறைவனின் "ஜாத்'-இல் இருந்து வேறுபட்டு இருக்கவில்லை.
மிஷ்காத் "பாப் அல் பஸல் அல் ஜிக்ர்" கூறப்பட்டுள்ளது.அவ்லியாக்கள் என்ற இறை நேசர்கள் அல்லாஹ்வின் "குவ்வதினை" (attributes) கொண்டு பிரவேசிக்கின்றார்கள்.
மேலும் கூறப்படுகின்றது நபியே "தாங்கள் வெறுமையாக வரவில்லை, ஆனால் 3 விடயங்களை கொண்டு வருகின்றார்கள், "உண்மையை கொண்டும்", முஃமின்களுக்கு நன்மாராயம் கொண்டும், இறை மறுப்பாளர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தும் அவதரித்து உள்ளீர்கள். மற்றவர்களிடம் நாம் கேட்பது போல் நபியே உங்களிடம் நாம் கேள்விகளை கேட்க மாட்டோம், இவர் ஏன் ஈமான் கொண்டு வரவில்லை? அவர் ஏன் ஈமான் கொண்டு வரவில்லை? அவர் ஏன் நன்மைகளை செய்யவில்லை? இவர் ஏன் நன்மைகளை செய்யவில்லை? என்றா கேள்விக்கணக்கு நபிகலாரிடத்தில் இறைவன் கேட்க்க மாட்டான்.
ஹதீஸ் ஷரிப்-இல் கூறப்பட்டுள்ளது... நம் ஒவ்வொருவருக்கும் கேள்வி கேட்கப்படும் உங்கள் சந்ததிகள் ஏன் நேர்வழியில் இல்லை ?உங்கள் மனைவியர் ஏன் நேர் வழியில் இல்லை? உங்களுக்கு நெருக்கமானவர் ஏன் நேர் வழி பெறவில்லை? உங்கள் பணியாட்கள் ஏன் நேர் வழி பெறவில்லை ? என்று கணக்கு கேட்கப்படும். அல்லாஹு அக்பர்.
நம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் இம்மையிலும், மறுமையிலும் இது போன்ற கேள்விகள் ஏதும் கிடையாது ! மற்ற நபி மார்களின் உம்மத்துக்கள் இறைவனிடம் கூறுவார்கள் "எங்களிடத்தில் எந்த ஒரு இறை தூதுவரும் வரவில்லை என்று? ஆனால் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும், அவர்களின் உம்மத்தும் இறைவனிடம் சாட்சியம் அளிப்பார்கள். "இறைவனே இவர்களிடத்தில் உன்னுடைய தூதுவர்கள் வருகை புரிந்தார்கள்" என்று கூறுவார்.
மற்றும் எந்த ஒரு இறைமறுப்பாளன்-ம் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எதிர்த்து வாய்திறக்க முடியாது ! மேலும் அவர்களிடத்தில் கேட்க்கபடவும் மாட்டது.
இமாம் அஹ்மத் ரழா காஃன் அலைஹி ரஹ்மா அவர்கள் புகழ்கிறார்கள்....
பாவங்களினால் சங்கிலி இடப்பட்டவர்களை எம் பெருமானார் விழிக்கும் போதே
அந்த சங்கிலிகள் உடைபட்டுவிடுமே !
மஹஷ்ர்-ல் வெளிப்பட்டுவிடும் எம் பெருமானின் வலிமையே !
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் !
உர்து மூலம்: ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பாதாயோனி அலைஹி ரஹ்மா
ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர்ஆன்