MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மனமெனும் நப்ஸின் வகைகளும்

அவைகளின் தன்மைகளும்


​​​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

♣  நப்ஸின் வகைகள் :


​1)  அம்மாரா

2)  லவ்வாமா

3)  முல்ஹிமா

4)  முத்மயின்னா

5)  ராளியா

6)  மர்ளிய்யா

7)  காமிலா


அம்மாராவின் தன்மைகள்: கஞ்சத்தனம், மனக்கோட்டை, பேராசை, பெருமை, பொறாமை, விளம்பர மோகம், மதிமயக்கம்.


​♦ லவ்வாமாவின் தன்மைகள்: பச்சாதாபம், சிந்தனை சுயநலம், தற்பெருமை, எடுத்துக் காட்டுதல்.


​♦ முல்ஹிமாவின் தன்மைகள்: தர்மசிந்தை, உள்ளதைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை,

​செவா உணர்வு.

முத்மயின்னாவின் தன்மைகள்: தவக்குல், சகிப்புத்தன்மை, வணக்க வழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.

ராளியாவின் தன்மைகள்: பற்றற்றவாழ்க்கை, மனத்தூய்மை, பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல்.

♦ மர்ளியாவின் தன்மைகள்: நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அன்பை அடைய முயலுதல், அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல்.

♦ காமிலாவின் தன்மைகள்: அம்மாராவில் உள்ள தன்மைகளை விட்டு முற்றும் நீக்கம் பெற்று. லவ்வாமாவிலுள்ள சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல் என்ற விஷயங்களை விட்டும் நீங்கி பச்சாதாபம், சிந்தனை. முல்ஹிமாவில் உள்ள தர்மசிந்தை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, செவா உணர்வு. முத்மயின்னாவில் உள்ள தவக்குல் சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி. ராளியாவில் உள்ளபற்ற வாழ்க்கை, மனத்தூய்மை பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல். மர்ளியாவிலுள்ள நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல். அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாக பொருந்திக் கொள்ளுதல்.


​​இவ்வாறு நப்ஸின் முந்திய ஆறு வகைகளையும் கடந்து, நப்ஸூடன் யுத்தம் செய்து, வெற்றி கொண்டு காமிலா என்ற ஏழாவது நப்ஸின் தன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டவர்கள் தான் குதுபுக்கள் (ஹெளதுகள்) முக்தார்கள், அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள், அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள், நுகபாக்கள் எனும் அவ்லியாக்கள்.

சூபிசம் என்றால் என்ன               (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

தரீக்கா என்றால் என்ன                (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பைஅத்தின் அவசியம்


​பைஅத் ஏன் செய்ய வேண்டும் என்பதை அறிந்து தெளிவு பெற இந்த கட்டுரையை வாசியுங்கள்.