MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகளாரை ﷺ அவமதித்தால் - குப்ர் (இறைமறுப்பு), அல் குர்ஆன்


யா அய்யுஹள்ளஜினா ஆமனு லா தகூலு ராயினா வ கூளு உன்சூருணா வ அஸ்மவு வலில் காபிரீன அசாபன் அலீம்

அல் குர்ஆன் - பாகம் - 1 அத்தியாயம் அல் பகரா ருகு - 13 வசனம் - 104


(ஈமான் கொண்டவர்களே )(நபியிடம்) ராயினா (என்று) கூறாதீர்கள் (எங்களை கவனியுங்கள்) என்ற பொருள் கொண்ட "உன்சூருணா" என்று கூறுங்கள்; இன்னும் அவர் (கூற்றிக்கு) நீங்கள் செவிசாயுங்கள். மேலும் நிராகரிப்போருக்கு மிக துன்புறுத்தும் வேதனை உண்டு.


வெளிப்படையில் இந்த இறைவசனம் முஸ்லிம்களுக்கு ஒரு விஷயத்தினை பற்றி தடை செய்யப்படுகின்றது, அதே சமயம் எப்படி அந்த செயலை செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தபடுகின்றது.


ஆனால் ஹகிகதில் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புகழ் மின்னுவதினை பார்க்கலாம். சுபானல்லாஹ்.


ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேசுகின்ற போது பொருள் விளங்காத பட்சத்தில் "ராயின யா ரசூல்லுல்லாஹ் யா ஹபிபல்லாஹ்" என்று கூறுவது சஹாபா பெருமக்களின் பழக்கமாக இருந்து வந்தது. இதன் அர்த்தம் "எங்களுக்காக மறுபடியும் கூறுங்கள், தாங்கள் கூறியது விளங்கவில்லை" என்பதாகும்.


யூதர்களின் மொழியில் "ராயின" என்பது ஒரு கெட்டவார்த்தையாகும். யூதர்களும் ரசூல் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருச்சன்னிதானதிர்க்கு வருகை புரிந்து பேசும் போது நபிகளாரை நோக்கி "ராயின" என்று கெட்ட எண்ணத்துடன் கூறிவந்தனர்.


இதன் காரணமாக யூதர்கள் நபிகளாரை அவமதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.


இதற்காக இந்த இறைவசனம் அருளப்பட்டது, மற்றும் முஸ்லிம்களுக்கு "ராயின" என்று கூறுவதற்கு தடைசெய்யப்பட்டது, அதற்க்கு பதிலாக நல்லதை எண்ணி கேட்பாரின் "உன்சூருணா" கூறவேண்டும் என்று கட்டளையிடப்படுகின்றது.


சுபானல்லாஹ் ! நம் நபிகளாருக்கு கஷ்டத்தினை கொடுக்கும் வார்த்தையும் பொதுவாக இருக்க கூடாது என்று இறைவன் நாடுகின்றான். நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு சிறிய வார்த்தையானாலும் அல்லாஹ்வின் ஹபிபிர்க்கு நோவினை உண்டு செய்வதாக இருந்தால் அதுவும் கெட்ட எண்ணத்துடன் இருந்தால் அது "குப்ர்" (இறைமறுப்பு) ஆகும்.


மார்க்க சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள், எவரேனும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித காலடிகளை அவமதித்தால் அவர் காபிர் ஆகிவிடுகின்றார்.


ஷராஹ் அக்பர் என்ற நூலில் இமாம் அபு யூசுப் அலைஹி ரஹ்மா அவர்கள் ஒரு சம்பவத்தினை குறிப்பிட்டுள்ளார்கள். ஹாரூன் ரஷித் அவர்களின் உணவு விரிப்பில் "சுரக்காய்" சமைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒருவர் கூறினார் "சுரக்காய்" முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றார். இன்னொருவர் கூறினார் ஆனால் எனக்கு "சுரக்காய்" பிடிக்காது என்றார். இதில் அபு யூசுப் அலைஹி ரஹ்மா அவர்கள் அவ்வாறு சொன்னவனை கொல்லும் எண்ணத்தில் தன்னுடைய கூறிய வாளினை வெளியே எடுத்தார்கள்.


மற்றும் கூறினார்கள், "நீர் காபிர் ஆகிவிட்டீர், ரசூல்லுல்லாஹ் சம்மந்தப்பட்ட ஒரு விஷயத்தில் அவர்களுக்கு பிடித்தமான ஒன்றில் நீர் உன்னுடைய கூற்றில் நபிகளாருடன் போரிடுகின்றாயா என்று கேட்டதும். அந்த நபர் மன்னிப்பு கோரிய பின்பு தன்னுடைய வாளினை உறையுள் வைத்தார்கள். மேலும் அந்த நபர் இமாம் அபு மூசா அலைஹி ரஹ்மா அவர்களின் கரங்களை பற்றி பிடித்து முரிதானார். மிஸ்ர் உடைய மக்களும் மற்ற எல்லோரும் தன்னுடைய செல்வங்களை பொருட்படுத்தாமல் இமாம் அவர்களின் கையை பிடித்தனர். அல்லாஹ் அப்பேற்பட்ட ஒரு பெரிய பாக்கியதினை இமாம் அபு யூசுப் அலைஹி ரஹ்மா அவர்களுக்கு அளித்தான்.


இதன் மூலம் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நபிகளாரை ஏளனம் பேசினால் இஸ்லாத்தினை விட்டு வெளியேற்றபடுவர்.


இமாம் அஹ்மத் ரழா காஃன் அலைஹி ரஹ்மா எச்சரிக்கை செய்கிறார்கள்.


மிட் கே மிட் ஜாயேங்கே அய்தா தேரே

ந மிடா ஹி நா மிடே கா கபி சர்ச்சா தேரா !


அழிந்து விட்டார்கள், அழிந்து கொண்டு இருக்கின்றார்கள், அழிந்துவிடுவார்கள் உம்மை எளனம் பேசியவர்கள்; அழியவில்லை, அழியாது சதா என் பெருமானின் புகழ் !


ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்



உர்து மூலம்: உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயோனி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயதில் குர்ஆன் என்ற நூலிலிருந்து..