MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இத்ரீஸ் நபியுடைய பேரரும் லாமக் உடைய மகனுமாவார்கள். இவர்களின் தாயாரின் பெயர் பன்யூஸ். இவர்களின் இயற்பெயர் அப்துல் கஃப்பார் عبد الغفار என்பதாகும்.
அவர்கள் மிக அழகு பெற்று திகழ்ந்தார்கள். உடல் பருத்து, நெஞ்சு அகன்றிருந்தது. வீரத்தை காட்டும் மீசையும், தாழ்மையை பிரதிபலிக்கும் தாடியும் அவர்களின் முக அழகை பன்மடங்கு அதிகப்படுத்தியது. சிறந்த ஆணழகராக விளங்கினார்கள்.
"என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங் கள். அவனைத்தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை" என்று தவ்ஹீத் என்னும் ஓர்மைப்பாட்டினை கூறினார்கள். இதை செவியுற்ற அன்றைய அரசனாக இருந்த தர்மசீலும் அவனை அடுத்து வந்த கொடுமை மிகுந்த அரசர்களும் அவர்களை கடுமையான நோவினைக்குள்ளாக்கினார்கள்.
அவர்கள் உம்ரா, அஜ்வத், வாலிஆ என்ற பெண்களை மணந்திருந்தார்கள். இவர்களின் மக்கள் ஹாம், ஸாம், யாஃபித் என்பவர்களாவார்கள். இதில் யாஃபிதின் கூட்டத்திலிருந்துதான் யஃஜூஜ், மஃஜூஜ் வழிக்கூட்டம் தொடங்கும் என்று நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
நூஹ் நபியின் கூட்டத்தார் அவர்களை மிகவும் வேதனைபடுத்தியபோது,
"என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் நீ விட்டு வைக்காதே!" என்று இருகரமேந்தி இறைவனிடம் இறைஞ்சினார்கள். இவ்விறைஞ்சுதலுக்கு இறைவன் பதிலளித்தான். நீங்கள் கப்பலை தயார் செய்யுங்கள் என்று கூறினான். அன்னவர்களும் அவ்வாறே செய்தார்கள். இறுதியாக அல்லாஹ்வின் கட்டளைப்படி உயிரினங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண், பெண் ஆகிய) ஜோடி ஜோடியாக அதில் ஏற்றி கொண்டார்கள். அதன் பின்னர் தூஃபான் என்ற பெருவெள்ளம் வந்தது. இதில் மக்கள் அழிந்தனர். கப்பலில் உள்ளவர்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அந்த கப்பல் முஹர்ரம் பிறை 10 இல் ஜூத் என்ற மலையில் ஒதுங்கியது.
நூஹ் நபியவர்கள் 950 வருடங்களாக வாழ்ந்து இவ்வுலகை விட்டும் பிரிந்து இறையடி சேர்ந்தார்கள். இவாகளின் புனித கபுர் ஷரீஃப் ஹரம் ஷரீஃபில் உள்ளது என்று வரலாறுகள் குறிப்பிடுகிறது. “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”