MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நாடுகளை சுற்றிய நபித்தோழர்


நபித்தோழர் ஒருவர் திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுத நினைத்தார்கள். அவர்கள் அனைத்துக் கலைகளிலும் வல்லவராயிருந்தார்கள்.


எனினும் அவருக்கு ரகீம், தபராக, மதாஉ ஆகிய மூன்று சொற்களுக்கு பொருள் என்னவென்று தெரியவில்லை. அவற்றின் பொருளை அறிவதற்காக அவர்கள் பலநாடுகளுக்கும் சுற்றித்திரிந்தார்கள். எனினும் அவர்களால் அதற்காக பொருளை அறிந்துக்கொள்ள இயலவில்லை.


பின்னர் மனம் சோர்வடைந்த நிலையில் அவர்கள் ஒரு தெருவின் வழியே சென்றுக்கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டில் ஒரு பெண் தன் அடிமையிடம், "அய்னல் மதாஉ" (உணவு சமைக்கும் பாத்திரம்?) என்று கேட்டாள். அதற்கு அவ்வடிமை "ஜாஅர் ரகீமு வ அகதல் மதாஆ வ தபாரகள் ஜிபால" (நாய் வந்து உணவு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மலை மேல் ஓடிவிட்டது) என்று கூறினாள். அது கேட்டு சோர்வடைந்திருந்த நபித்தோழரின் உள்ளம் புத்துணர்ச்சி பெற்றது. மூன்று சொற்களுக்கும் அவர்கள் பொருள் விளங்கி கொண்டார்கள்.


அதன் பின்னரே அவர்கள் திருக்குர்ஆனுக்கு தப்ஸீர் எழுதத் துவங்கினார்கள். திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதுவதில் முழுக்க முழுக்க இறைவனுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.


ஆனால் இன்று அரைகுறையாக மார்க்கத்தை கற்ற எல்லோருமே திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும்.