MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மெய்யும் பொய்யும்


அஸ்செயித் ஷெய்க் அப்துல் ரஷீத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)


​தொகுப்பு: அமீர் காதிரி 

மனித உடலுக்கு பெயர் மெய் என்று சொல்வார்கள்!

பொய்யான உடலுக்கு மெய் என்று பெயர் எப்படி வந்தது?


இந்த உடல் மெய்யான ஒன்றை சுமந்து கொண்டு இருப்பதால்

​பொய்யான இந்த உடலுக்கு பெயர் மெய் என்று வந்தது.


மெய்யாக இருக்கும் இந்த உடல் ஒரு நாளைக்கு பொய்யாகி விடும்.


இந்த உடல் பொய்யாகும் முன்னே அது சுமந்து வரும் மெய்பொருளை காண வேண்டியது நம் மீது கடமையாகும்!.


அப்படி நீங்கள் பொய்யிலே மெய்யை கண்டுவிட்டால் நீங்கள் ஏற்கனவே மெய் என்று நம்பியிருந்த நிறைய விசயங்கள் பொய்யாகி போகும்!


அதன் பிறகு நீங்கள் காணுகின்ற எல்லாவற்றிலும் மெய்நிலை என்னவென்று அறிவீர்கள்!


இதுவரை நீங்கள் உலகில் பார்த்த எல்லா வஸ்துக்கும் ஒரு அசல் இருப்பதை அறிவீர்கள்!


உங்களுக்குள் இருக்கும் அவனை அறிந்துகொண்டால் இங்கு அவனாக இருக்கும் அனைத்தையும் அறியும் வாய்ப்பை பெறுவீர்கள்!


அவனை எந்த அளவு நீங்கள் நேசித்தீர்களோ அதைவிட பலமடங்கு இந்த உலகில் உள்ள அனைத்தும் உங்களை நேசிப்பதுடன் உங்களுக்கு வசப்படும்!


சூரியனின் ஒளியை சந்திரன் பெற்று நமக்கு நிலவாக எதிர் ஒலிப்பதை போல் நாம் அவன் மீது காட்டும் நேசம் அவனாக இருக்கும் அனைத்திலும் இருந்து நமக்கும் எதிரொலிக்கும்!.


இதை நீங்கள் அநுபவித்து பிறவிப் பயனை அடைய வேண்டுகிறேன்!



நன்றி: Amir Qathiri

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பார்வை ஒன்று காட்சி இரண்டு

​​

படைப்பினங்களை பார்பவர்கள் மனிதர்கள். படைப்பினங்களில் படைத்தவனை பார்பவர்கள் புனிதர்கள். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

​​​​​