MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
மாதர்களின் மகிமை
இல்லற வாழ்வில் இறைத்தூதர் நம் நபிக்கு நாயன் வழங்கிய நன்மதிப்புகளில் ஒன்று! திருமணம் பற்றியதாகும். ஒரு பெண் தம்மை தாஹா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு மனைவியாக்க முன்வந்தால் திரு நபியவர்களும் அப்பெண்ணை மணந்து கொள்ள விரும்பினால் மஹர் இல்லாமலும் சாட்சிகள் இல்லாமலும் மணந்து கொள்ளலாம்.
நபியே! இது உங்களுக்கு உரித்துடைச் சட்டமாகும். உம்மத்துகளில் விசுவாசிகள் எவருக்கும் இவ்வுரிமை கிடையாது. (33: 50)
நம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு நான்கு மனைவியரிலும் பார்க்க அதிகம் திருமணம் செய்யும் உரிமை கொண்டிருந்தும் சமகாலத்தில் ஒன்பது மனைவியரைக் கொண்டிருந்தார்கள். இது அல்லாஹ் அன்னவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்பாகும். ஏனையோர் இவ்வாறு திருமணம் செய்தல் ஹராம் எனும் விலக்காகும். தானாக முன்வந்து தம்மை மனைவியாக்குமாறு தம்மை அண்ணலாருக்கு அர்ப்பணித்த உம்மஹாதுல் முஃமினீன்களுள் அன்னையர்களான மைமூனா, கவ்லா, உம்மு ஷரிக், ஸைனப் (ரலியல்லாஹு அன்ஹுன்ன) அடங்குவர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மனைவியர்களின் தனிப்பெரும் சிறப்பினைக் கொண்டிருந்தனர். அல்- குர்ஆன் அன்னவர்களை சிறப்பிக்கையில் அனைவருக்கும் அன்னவர்கள் அன்னையர்கள் எனச் சிறப்பிக்கின்றது. எப்பென்னும் தான் பெற்றெடுத்த பிள்ளைக்கே தாயாவதாயிருக்க அனைத்து உம்மத்தினருக்கும் அவர்கள் அன்னையர்களாக மதிக்கப்படுவது எத்துனை சிறப்புரியது எனலாம். மாநபியின் மறைவின் பின் அவ்வன்னையரை யாரும் மறுமணம் புரிதல் கூடாது என அல்லாஹ் அவர்களைப் புனிதப்படுத்திருப்பது ஒன்றே அன்னவர்கள் உயர்வுக்கு எடுத்துக்காட்டாகும்.
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள்! அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்து அதிலிருந்து அவரின் துணைவியரைப் படைத்து. பின் அவ்விருவரிலிருந்தே ஏராளமான ஆண், பெண்னைப் படைத்தான். அவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இன்னும் இரத்த பந்தத்துடன் அன்பாக நடவுங்கள். நிச்சயம் அவன் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
நபிமாரைப் பின்பற்றிய அனைவரும் புடைசூழ நாளை மஹ்ஷரில் கானப்படுகையில் என் சமூகம் அனைவரில் அதிகமாய்க் காணப்படுவான் வேண்டி நீங்கள் திருமணம் செய்து அதிக குழந்தைகள் பெற்றெடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியுள்ளனர். நாளை மறுமையில் இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கைப் பெருக்கைக்காட்டி அன்னவர் பெருமையை ஒங்கக்காரணியாய் இருப்பவள் பெண்ணே என்றால் மிகையாகாது.
நான் அதிகம் யாரை நேசிக்க வேண்டும் என ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வினவ, உன் தாய் என மூன்று முறை கூறினார்கள். நான்காம் முறை உன் தந்தை என்றார்கள், என்றால் அத்தாய் எவ்வாறு கௌரவிக்கப்பட்டிருக்கிறாள் என நான் சொல்ல வேண்டுமா?
ஒரு சமூக மேம்பாட்டின் தொண்டர்களை உருவாக்கும் பெருமையை ஒரு தாய்தான் முதல் ஆசானாய் இருந்து நடாத்துகிறாள் என்றால், அத்தாயை என்னவென்றுரைப்பது? புனித இஸ்லாமிய வரலாற்றில் கூட பொன் எழுத்தால் பொறிக்கப்பட்ட ஸுமையா நாயகியின் வீரத்தியாகம் புனித தீனுக்காய் முதல் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வரலாறு பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதி சாசன உரையில் கூட பெண்கள் விவாகரத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறும் அன்னவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள வரம்புக்குள் வாழ்வளித்துக் காக்குமாறும் எச்சரித்திருப்பது நம் கவனத்திற்குரிய விடயமாகும்.
சாபத்திற்கும், சாவுக்கும், கோபத்திற்கும் உள்ளான ஆயிரத்து நானுறை மு தாண்டியகலாப் பெண்ணினம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களால் வாழ்வளிக்கப்பட்டு வாழ்த்தப்பட்ட வரலாறு என்றும் நிலையானதே! ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வரையறைச்சட்டம் போல் பெண்களுக்கும் எல்லைக் கோடிட்ட இஸ்லாம், அவரவர் இயல்பு நிலைப்படைப்புக்கும் பக்குவத்திற்கும் கற்புக்கும் உத்தரவாதமளிக்கும் விதிமுறைகளை விதித்து வழிநடாத்துகின்றது.
ஆக, ஈமானியப் பெண் சமூகத்தின் கண். இஸ்லாமிய ஒளியின் துணையோடு உலகைக் கவனித்து எழுச்சிமிக்க உன்னத சமூகத்தை ஞானமெனும் மெய்யமுதூட்டி உரமிக்கவோர் இளந்தலைமுரையினை தான் பெற்ற தீனுக்கும் அதன் உயர்வுக்கும் தன் ஆறும செல்வங்களை அர்ப்பணிக்கும் பெறுமதிமிக்க அன்புத்தாய் இனத்தை விட இச்சமூகம் எதைத்தான் தன் பேறாய்ப் பெற முடியும்!
ஷரீஆவெனும் நல்லொழுக்க மேம்பாட்டு வழி முறையினை அல்லாஹ் தன் நபி மூலம் மக்களுக்கு விதித்த வேலை தன் நபிக்கு அவனே பல விதிகளை மேலதிகமாகும், சிலவற்றை மேலதிக விளக்காகவும் மற்றும் சிலதை அனுமதித்துமுள்ளான். இது அவனால் அவர்களின் இயல்புக்கும், உடல் நிலைக்கும், மனப்பக்குவத்திற்கும், தார்மீகத்தன்மைக்கும், சமநிலைப் பேணலுக்கும் வழங்கப்பட்டதொன்று என்பதனால் அதன் வெளி நிலைகளை மாத்திரம் நாம் கானமுடியுமேயன்றி அந்தரங்க நோக்கத்தை அணுகும் திறமையும் உரிமையும் எமக்கில்லை. ஷரீஆவின் நிழலில் ஒரு மனைவியை ஒழுங்காகப் பேணுவதில் மானிடன் எதிர்கொள்ளும் தவறுகள் அனந்தம். இந்நிலையில் மானிட வழிக்காட்டி மன்னர் நன்நபி தம் இறுதி நேரத்தில் கூட ஒன்பது நம் பிராட்டிமாரை திருப்திமிக்க அன்னையர்களாய் விட்டுச் சென்றார்கள் என்றால் அண்ணலாரின் தலை சிறந்த முன்மஅத்திரி தயக்கம் காட்டும் எம்மவருக்கு எடுகோள் அல்லவா!
அல்லாஹ்வின் அனுமதி வழியில் பெண்ணைப் பொறுப்பேற்கும் இருவர் அவர்கள் சலனமற்ற சந்தோஷ நல்லற வாழ்வை முற்றிலும் பொறுப்பேற்றுக் கொள்ளல் வேண்டியிருக்க, அவர்களைத் தம் ஜீவனோபாயத்திரட்டலுக்குப் பயன்படுத்தல் எங்ஙனம் ஏற்புடையதாகும். அதன் பின் விளைவுகள் பற்றிய கவலை யாருக்குண்டு! சிந்திக்க வேண்டாமா? நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்வில் ஒரு சிறுதுளி கூட எம் சிந்தனைக்குரியதே!
மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :www.womanofislam.com