MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
எங்கும் நிறைந்த ஒரு பொருள்
ஒரே பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரே பொருளில் அங்கமாக இருக்கும் மனிதன் அந்த உண்மையை அறியாமல் ஒரு பொருளை பல பொருளாக எண்ணி மதி மயங்கி உலகில் வாழுகிறான். இந்த உண்மையை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மண்ணும் மனிதனும்
எழுதியவர்: ஷாஹுல் ஹமீத் (காதிரி)
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று குர்ஆனும் பைபிளும் கூறுகின்றன. ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். ( அல் குர்ஆன். 15. 26 )
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே. என்று கவிஞன் பாடுகிறான் என்றால் பெண் ஏதோ ஒரு பூவிலிருந்து பிறந்து வந்தால் என்று பொருள் இல்லை.
பெண் பூவைப் போன்றவள் பூவின் தன்மைகள் கொண்டவள் என்று பொருள்.
பூ இங்கே குறியீடு அப்படியே மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதில் மண் குறியீடு.
அதாவது மனிதன் மண்ணைப் போன்றவன் மண்ணின் தன்மைகள் கொண்டவன் என்று பொருள்.
ஐம்பூதங்களில் இறுதியாக தோன்றியது மண். ஆகாயத்தில் முதலில் காற்று தோன்றியது. பின்னர் அதிலிருந்து நெருப்பத் தோன்றியது. அதனால் நெருப்பில் காற்றின் சாரமும் இருந்தது. நெருப்பிலிருந்து நீர் தோன்றியது. அதனால் காற்று. நெருப்பின் சாரம் நீரில் இருந்தது. நீரிலிருந்து மண் தோன்றியது. அதனால் ஆகாயம், காற்று, நெருப்பு, நீரின் சாரம் மண்ணில் இருந்தது. மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான். எனவே அவன் ஐந்து பூதங்களின் சாரமாய் இருக்கிறான்.
மனிதனைக் களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம். (அல் குர்ஆன் 23: 12) என்கிறான் இறைவன்.
காற்றுப் பரிணமித்து மண்ணாயிற்று, மண் பரிணமித்து மனிதன் ஆனது, எனவே மண் பரிணாமத்தில் வந்தது போலவே மனிதனும் பரிணாமத்தில் வந்தவன் என்று பொருள்.
பரிணாமத்தில் மண் ஐம்பூதங்களின் உச்சி. மனிதன் உயிர்களின் உச்சி.
நெருப்பிலேயே இயற்கைச் சக்திகள் தோன்றி விட்டன. இந்த சக்திகளை இந்தியத் தொன்மம் தேவர். அசுரர். என்று கூறுகிறது. இஸ்லாமியத் தொன்மம் மலக், ஜின் என்று கூறுகிறது.
இறைவன் நெருப்பின் ஒளியிலிருந்து மலக்குகளையும், வெப்பத்திலிருந்து ஜின்களையும் படைத்தான். என்று இறைதூதர் (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
உயிர்கள் நீரில் பிறந்தன என்பதை மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் ஒருமித்துக் கூறுகின்றன. நீரில் பிறந்த உயிர்கள் பரிணமித்து நிலத்தில் ஊர்வன, திரிவனவாகவும், வானத்தில் பறப்பனவாகவும் மாரின. இந்தப் பரிணாம மரத்தின் உச்சிக் கனியாய் மனிதன் தோன்றினான்.
எனவே அவனிடம் சகல உயிர்களின் சாரமும் இருக்கிறது. அதனால்தான் அவன் மற்ற உயிரினங்களை அடக்கி ஆளும் ஆற்றல் பெற்றான். மனிதர்களே வானங்களில் உள்ளவற்றயும் பூமியில். உள்ளவற்றையும் இறைவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் (31:20) என்று குர்ஆன் கூறுகிறது . நன்றியுள்ள. அடியாரையே இறைவன் நேசிக்கின்றான்.
நூருன் அலா நூர்
திருக்குர்ஆனும் ஒரு நூர். திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் நூரானவர்கள். நூரை நூரால்தான் சுமக்க முடியும். ஹகீகத்தை அறிய இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.