MAIL OF ISLAM

Knowledge & Wisdom



                                                                  மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்


​​​"பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்" 

(புகாரி, முஸ்லிம்).


"நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அடிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே" என்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (அபூதாவூது)


பெண்கள் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். ஆண்தான் பெண்ணை நிர்வகிக்கும் கடமையைப் பெற்றிருப்பவன். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதும் அவனே. குடும்பத்திற்குச் செலவிட வேண்டியது ஆணுக்குத்தான் கட்டாயம். ஒரு கணவன் தன் மனைவிக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள். பலவீனமான அவர்கள் விஷயத்தைக் குறித்து நபிகள் நாயகம் ﷺ  அவர்கள் அதிகம் எச்சரித்துள்ளார்கள்.


"நபிகள் நாயகம் ﷺ  அவர்கள் தங்கள் காலணிகளையும் தங்கள் ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். தங்கள் ஆடையை, தாமே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். வீட்டு வேலைகளும் செய்வார்கள்" (ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா -அஹ்மது).


இப்படிப்பட்ட அழகிய முன்மாதிரி ஒவ்வொரு முஸ்லிம் கணவரும் பின்பற்றுவதற்குத் தக்கதாய் இருக்கிறது.

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :  www.womanofislam.com