MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள் - பகுதி - 1 அல் –ஆதாப் - நடைமுறை ஒழுக்கங்கள்

இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.



உணவு உட்கொள்ளும் முறை


கவனிக்கவேண்டியவைகளும், சுன்னத்தான முறைகளும் ஹலாலான உணவையே உண்ணத் தேர்ந்தெடுத்தல்.


1. தலையை மூடிக்கொள்ளல்


2. வாயையும் இரு கைகளையும் களுவிக்கொள்ளல்


3. விரிப்பில் (சுப்ராவில்) வில் உணவைவைத்தல்


4. எமக்கு முன் உணவு வைக்கப்பட்டவுடன் ஓதவேண்டியவை:


அல்லாஹும்ம பாரிக் லனா fபீமா ரzஸக்தனா வகீனா அதாபன் நாரி.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்

ஆதாரம்: இப்னு ஸனீ.

(யா அல்லாஹ் நீ எமக்களித்த இந்த உணவில் அபிவிருத்தி செய்வாயாக நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக)


5. மூன்று இருப்புக்களில் ஏதாவது ஒரு இருப்பில் உட்காருதல்.

*  இடது காலின்மீது இருந்துகொண்டு வலது காலை நட்டிவைத்தல்.

*  நடு அத்தஹிய்யாத் இருப்பு இருத்தல்.

*  குந்தி இருத்தல்.


6. உணவருந்த முன் மிஸ்வாக் செய்தல்.


7. வலது கையால் உணவருந்துதல்.


8. பிஸ்மில் சொல்லி ஆரம்பித்தல்.


9. பிஸ்மில் சொல்ல மறந்து இடையில் ஞாபகம் வந்தால்.


பிஸ்மில்லாஹி அவ்வலஹு வாகிரஹு


இதன் ஆரம்பத்திலும், இறுதியிலும் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறிக்கொள்கிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி


10. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இடைக்கிடை அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுதல். அதாவது:


அல்ஹம்துலில்லாஹி வ ஷுக்ருலில்லாஹி அல்லாஹும்ம லகல்ஹம்து வலக ஷுக்ரு.


இறைவா உனக்கே புகழும் உனக்கே நன்றியும்

அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: முஸ்லிம்


11. உணவு உட்கொள்ளும் வேலை உணவு கீழே விழுந்து விட்டால் அதனை ஷைத்தானுக்கு விட்டு விடாமல் எடுத்து உண்ண வேண்டும். ஏனெனில் சில வேளைவிழுந்த உணவு பரக்கத்துடைய உணவாக இருக்கலாம் அல்லவா?


12. உணவு உட்கொள்ளும்போது எமக்கண்மையி உள்ள உணவை முதலில் நடுவிலுள்ளவைகளைப் பின்னரும் உண்ணவேண்டும்.


13. கூட்டாகச் சாப்பிடும்போது மற்றவர்களையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.


14. தீவிரமாகச் சாப்பிடாமல் மற்றவர்களின் உரிமைகளையும் பேணிச் சாப்பிடுதல்.


15. மற்றவர்களுக்கு அருவருப்பு ஏற்படாதவாறு சாப்பிடுதல் வேண்டும்.


16. இடையில் உணவை முடித்து எழும்பினால் இருக்கக் கூடிய அனைவரிடமும் அனுமதி கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபியவர்கள் உணவு உட்கொள்ள அமர்ந்தால் கடைசிவரை இருப்பார்கள்.


17. இடையில் ஒருவரைச் சேர்ப்பதாயினும் கூட மற்றவர்களிடம் அனுமதி கேட்கவேண்டும்.


18. உணவு உட்கோண்ட பின்னர் பாத்திரத்தை நன்றாக வழித்துச் சாப்பிடுதல் வேண்டும்.


19. இறுதியாக விரல்களை நன்றாக உறுஞ்சுதல் (சூப்புதல்)


20. தங்கம் வெள்ளி போன்ற பாத்திரங்களில் உணவு உட்கொள்வது கூடாது ஹராமாகும்.


21. சாப்பிட்டு முடிந்ததும் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளுதல்


அல்ஹம்துலில்லாஹி இல்லத்தி அத்அமணா வசகானா வஜஅலனா மினல் முஸ்லிமீன்.


அறிவிப்பவர்: அபூ சயீதுள் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: திர்மிதி



தண்ணீர் குடிக்கும் முறைகள்


1. தலையை மறைத்தல்.


2. உட்கார்ந்து குடித்தல்.


3. வலது கையில் எடுத்தல்.


4. பிஸ்மி சொல்லுதல்.


5. தண்ணீர் குடிக்கும் முன் தண்ணீரை அவதானித்தல்.


6. ஒரேயடியாகக் குடிக்காமல் சிறிது சிறிதாகவும், கிடராகவும் குடித்தல்.


7. தண்ணீரில் மூச்சுவிடுவதோ, ஊதுவதோ கூடாது.


8. உடைந்த பாத்திரத்தில் நீர் அருந்துவது கூடாது.


9. தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் நீர் அருந்துவது கூடாது.


10. அருந்தி முடிந்ததும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக ‘அல்ஹம்துலில்லாஹ்’என்று கூறுதல்.

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :  www.womanofislam.com