MAIL OF ISLAM

Knowledge & Wisdom



குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள் - பகுதி - 5  அல் –ஆதாப் - நடைமுறை ஒழுக்கங்கள்

இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.



ஸலாம் சொல்லுதல்


1. ஸலாம் சொல்லுவது முக்கியமான ஒரு சுன்னத்தாகும்.


2. ஒருவரை சந்திக்கும் போதும் அவரை விட்டு விடை பெரும் போதும் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள்.


3. ஸலாம் சொல்லுவது சுன்னத்தாக ஒன்றுதான், எனினும். அதற்கு பதில் சொல்லுவது பர்ளு என்பதை மறந்துவிடாதீர்கள்.


4. பெரியவர்கள், சிறியவர்களுக்கும், நிற்பவர்கள் , இருப்பவர்களுக்கும் வாகனத்தில் உள்ளவர்கள், கீழுள்ளவர்களுக்கும் சிறிய கூட்டம், பெரிய கூட்டத்திற்கும்  ஸலாம் சொல்வது சுன்னத்தாகும்.




பள்ளிவாசளுடைய ஒழுங்கு முறைகளும், கவனிக்கவேண்டிய சுன்னத்தானவைகளும்


1. பள்ளிவாசலில் நுழையும்போது வலது காலை உள்வைத்து பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்:


அல்லாஹும்மக்பிர்லி வfப்தஹ் லி அப்வாப ரஹ்மதிக்க


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஹஸன் அவர்களது தாய் மூலமும் அவர்களது பாட்டன் மூலமும்.

ஆதாரம்: இப்னு ஸனீ



2. பள்ளியினுள் நுழைந்தபின் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள் யாரும் இல்லாவிட்டாலும் மலக்குமாராவது இருப்பார்கள். அதற்காக


அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹி ஸாலிஹீன் என்று கூறுங்கள்.



3. இஃதிகாபுடைய நிய்யத்தை

நவைத்துல் இஃதிகாப fபீ ஆதல் மஸ்ஜிதி மா தும்து பீஹி என்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.



4. பள்ளியின் காணிக்கையாக இரண்டு ரக்அத்து தொழுது கொள்ளுங்கள்.


5. பள்ளியினுள் துன்யா சம்பந்தமான எந்த ஒரு விடயத்தையும் பேசவேண்டாம்.


6. அதனுள் யாராவது தொலைந்த பொருட்களைத் தேடினால்

லா ரதல்லாஹு அலைக்க (அல்லாஹ் உனக்கு அதை மீட்டித் தராமல் இருப்பானாக) என்று ஓதுங்கள். அதனுள் விற்பவர்களையோ வாங்குபவர்களையோ கண்டால் லா அர்பஹல்லாஹு திஜாரதக என்பதை ஓதிக்கொல்லுங்கள். (அதாவது அல்லாஹ் உன்னுடைய வியாபாரத்தில் இலாபத்தைத் தராமல் இருப்பானாக)


7. வெளியில்வரும்போது இடதுகாலைவைத்து கீழ்வரும் துஆவை ஓதிக்கொள்ளுங்கள்.


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலூக மின் fபல்லிக


அறிவிப்பவர்: அபூ ஹமீத், அபூ உஸைத்

ஆதாரம்: முஸ்லிம்




பிரயாணம் - கவனிக்கவேண்டிய சுன்னத்தான முறைகள்


1. பிரயாணம் செய்ய உறுதி செய்துவிட்டால் இரண்டு ரக அத்துத் தொழுது கொள்ளுங்கள். முதலாவது ரக அத்தில் குல் யா அய்யு அல் காபிரூன்  இரண்டாவது ரக அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத்  ஓதுவது சுன்னத்தாகும்.


2. தொழுது முடிந்த பின் ஆயத்துல் குர்ஷி யையும் லி ஈலாபி குரைஷி யையும் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில் பிரயாணத் தின் எல்லா வகையான தீங்குகளில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும்.


3. நீங்கள் பிரயாணத்தை தொடங்கும் போது இதை ஓதிக் கொள்ளுங்கள்.


அல்லாஹும்ம பிக அசூலு வபிக அஹூலு வபிக அஸிரு


4. வீட்டில் இருந்து வெளியேறும் போது


பிஸ்மில்லாஹி  தவகல்த்து அலல்லாஹி லஹவ்ல வலா கூவத இல்லாஹ் பில்லாஹி


ஆதாரம்: திர்மிதி


5. வாகனத்தில் செல்லும் போது


ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஆதா வமா குன்ன லஉ முக்ரினீன வயின்ன இலா ரப்பினா லமுன்கலிபூன்


அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு)

ஆதாரம்: அபூ தாவுத்

மேலும் பல இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான கட்டுரைகளை வாசிக்க :  www.womanofislam.com