MAIL OF ISLAM

Knowledge & Wisdom




கனவு பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்:


"நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்"


அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6983)

​***********************************************************************************************************************************************​


​"நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்"


அறிவிப்பவர் : அபூகத்தாதா அல் அன்சாரி (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6984)

***********************************************************************************************************************************************​


​அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) தவிர நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன என்று வினவினர்.


நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நல்ல (உண்மையான) கனவு என்று விடையளித்தார்கள்"


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : ஸஹீஹுல் புஹாரி (பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6990)


***********************************************************************************************************************************************​​​


கனவு கண்டால் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள்:


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து) அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்க விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாக தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால் அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து) அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில் அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்"


அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6985


​***********************************************************************************************************************************************​​

​​

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும் கெட்ட (பொய்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தமது இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில் அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது"


அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் – 7 அத்தியாயம் – 91 ஹதீஸ் எண் - 6986



அக்கினி (நெருப்பு)

செல்வமுள்ள மனைவி வாய்ப்பாள், சமூகத்தில் நல்ல மேன்மையான கௌரவம் உண்டாகும்.


அக்கினியைக் கையால் எடுத்தல்

நாளுக்கு நாள் செல்வம் பெருகி அளவிலாச் செல்வந்தனாவாய். வீண் செலவுகள் ஏதும் ஏற்படமாட்டா.


அக்கினி மூட்டிச் சமைத்தல்

எதிர்பாரா விதத்தில் அதிக நன்மைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படமாட்டா.


அக்கினி ஜுவாலை

வாழ்க்கையில் பலவித கஷ்டங்களும், சங்கடங்களும் நேரிவிடும்.


அக்கினியால் தனது உடை எறிதல்

கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வரும், கவலைகள் அதிகரித்து மன அமைதி குலையும்.


அக்ரோட்டைக் காணுதல்

வியாபாரிகளாயின், வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கும். உத்தியோகஸ்தராயின், சம்பள விகிதம் பெருகும், செல்வம் உண்டாகும்.


அகாலத்தில் அதான் (பாங்கு)

அக்கிரம அநியாய குனங்களேற்படும். மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும்.


அல்லாஹ்வின் பக்தர்களைக் காணுதல்

இது தலைமைத் தன்மையின் அடையாளமாம், ஏதேனுமொரு சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ, மன்றத்திற்கோ, கூட்டத்திற்கோ தலைவராவீர்கள்.


அத்திப்பழம் சாப்பிடல்

எதிர்பாரா வகையில் நல்ல பொருள் கிடைக்கும். பிரயோசனம் அதிகம் உண்டாகும்.


அத்தி இலை

அச்சம் வியாதி முதலியவை ஏற்படுவதற்கான அடையாளம் இது.


அதிக விரல்களைக் காணுதல்

உங்கள் நோக்கம் பயன்படாமல் விலகிப்போகும். எனினும் உங்களைப் பிடித்துள்ள கவலையும் குழப்பமும் நீங்கும்.


அரசரைக் காணுதல்

உங்களிடமுள்ள செல்வம் மென்மேலும் பொழிக்கும். கௌரவம் உண்டாவதுடன், அதிகாரப் பதவி ஏதேனும் கிட்டும்.


அரசர் முகம் காணுதல்

உங்களுடைய அந்தஸ்தும், கௌரவமும் உயரும், அதிகாரம் கிடைக்கும்.


அரசரைச் சந்தித்தல்

அரசாங்கத்தால் உதவியும், பயனும் பெறுவீர்கள்.


அரசர் சிரிக்கக் கண்டால்

கௌரவமும், மரியாதையும் ஏற்படும் சந்தோஷம் பெருகும்.


அரசர் தகாத இடத்தில் இறங்குதல்

பிரஸ்தாப இடத்தில் திடீரென அபாயங்கள் நேரிடும், அங்குள்ள விவசாயம் நாசமாகும்.


அரசருடன் உணவருந்துதல்

வயது அதிகமாகும், ஆயுள் வளரும், தேக ஆரோக்கியம் பெருகும், வியாபாரத்திலும், தொழிலிலும் முன்னேற்றம் கிடைக்கும்.


அரசர் கோபமாயிருக்கக் காணுதல்

எதிர்பாரா நஷ்டங்கள் பல ஏற்படும். அச்சத்தால் மனக்கலக்கம் உண்டாகும்.


அரசருடன் தன்னைக் காணுதல்

உங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது உங்களை ஆதரிப்பவர்களிடமிருந்தோ பிரிய நேரிடும்.


அடிமையை விற்கக் காணுதல்

இது துக்கத்தின் அறிகுறியாகும். இரவும், பகலும் மனக்குழப்பம் இருக்கும்.


அரசனுடன் சண்டை

அதிகமான சுகம் குறையும்.


அழகிய கிழவி

வசிக்கும் வீடு அழகாகும், உணவு அதிகம் கிடைக்கும்.


அப்சர ஸ்திரீ

அந்தஸ்து உயரும், கல்வி வளர்ச்சியடையும், நீங்கள் கவலையுள்ளவராகவோ, வியாதியஸ்தராகவோ இருந்தால், அவை நீங்கி சந்தோஷமும், சுகமும் உண்டாகும்.


அணியும் வஸ்திரம்

துக்கமும், வறுமையும் ஏற்படுவதுடன் மனக் குழப்பமும் உண்டாகும்.


அதிமதுரபான பாத்திரம்

உங்களுக்கு உண்மையுரைக்கும் பெண்ணோ அல்லது உண்மையான வேலைக்காரனோ கிடைப்பார்கள்.


அடுப்பு

ஒரு பெண்ணால் உங்களுக்கு நல்ல பிரயோசன முன்டாகும்.


அம்பு எய்தல்

உங்கள் நோக்கம் நிறைவேறும், சந்தோஷமும் கிடைக்கும்.


அம்பினால் போர் செய்தல்

உங்கள் ஆயுள் பெருகும், எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள்.


அல்லாஹ்வின் ஒளியைக் காணுதல்

முஃமினாக இருப்பின் உங்களுக்குச் சந்தொஷமுண்டாகும். நீங்கள் முஸ்லிமாக இருந்தால் கௌரவம் பெருவீர்கள். அறிஞராக இருந்தால் தூய்மையடைவீர்கள்.


அல்லாஹ் கணக்கு கேட்பதைக் காணுதல்

நீங்கள் இல்லத்தில் வசிப்பவராயின், சந்தோஷமும், ஆனந்தமும் உண்டாகும். பிரயானத்திலிருந்தால், உங்கள் பிரயாணம் கஷ்டமின்றி முடிவடைந்து சுகமே இல்லந்திரும்புவீர்.


அட்டையைக் காணுதல்

சமூகத்தில் கேவலமானவனாகவும், இழிவானவனாகவும் கருதப்படுவீர்கள். உங்களுடைய சொல்லுக்கு மதிப்பே இராது.


அரிசி

நீங்கள் பல சங்கடங்களையும் பட்டபின் செல்வத்தையும் அடைவீர்கள்.


அம்மியைக் காணுதல்

சமுதாய மக்களிடையே தனிச் சிறப்புடைய இடம் கிடைக்கும்.


அம்மியில் தண்ணீர் ஓடுதல்

உங்களுடைய ஆயுளின் முடிவு கால அறிகுறி இது. வெகு சீக்கிரத்தில் நீங்கள் இவ்வுலகிலிருந்தே மறைந்து விடுவீர்கள்.


அறிமுகமில்லா வீடு

வியாதிகள் பல ஏற்பட்டு வருந்துவீர்கள். அல்லாஹ்விடம் பாவத்தினின்றும் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.


அத்திமரம்

உங்கள் செல்வம் பெருகும், பெருந்தனவந்தராவீர்கள், நீங்கள் வர்த்தகராயிருந்தால் உங்கள் வியாபாரம் பெருகிக்கொண்டே போகும்.


அகன்ற கதவைக் காணுதல்

உங்களுக்கு அதிகமான உணவு கிடைப்பதற்கான அறிகுறியாகும் இது.


அடைக்கப்பட்ட கதவைக் காணுதல்

வறுமையும், கஷ்டமும் ஏற்படுவதற்கான அறிகுறி.


அழுகையைக் காணுதல்

எதிர்ப்பார்க்கும் சுகத்துக்குப் பதில் துக்கமே உண்டாகும். எனினும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் நன்மைகளே கிட்டும். உங்களுக்கும் நேரவிருக்கும் தீச்செயல்களிலிருந்து தப்பிவிடுவீர்கள். அல்லாஹ்வை வழிப்படுங்கள். உங்களுக்கு அவன் துணையிருப்பான்.


அதிகம் பேசுவதைக் காணுதல்

எதிர்பாராத வகையில் உங்களுக்கு அபாயங்கள் நேரிடும்.


அதிக நட்சத்திரங்களை காணுதல்

அரசாங்கத்தில் ஊதியமோ அல்லது உதவியோ பெறுவீர்கள். கௌரவமும், மரியாதையும் கிட்டும், உங்கள் செல்வமும் பெருகும்.


அழகிய கட்டிலைக் காணுதல்

உங்களுக்கு ஒரு பெண் கிடைப்பாள். ஆனால், அவள் நயவஞ்சகியாகவோ அல்லது நல்ல அழகும், செல்வமும் உள்ளவளாகவோ இருப்பாள். திடீரென அவ்வப்போது உங்களுக்கு திடுக்கம் ஏற்படும்.


அஞ்சனம் (சுர்மா)

உங்கள் அறிவு விசாலமடையும், பார்வையும் கூர்மையாகும், செல்வம் கிடைக்கும், திருமணமாகியவராகயிருந்தால் உங்களுக்கு ஆண் சந்ததி தோன்றும்.


அஞ்சனக் கூடு

அழகிய மனைவி ஒருத்தி உங்களுக்கு கிடைப்பாள்.


அஞ்சனமிடக் காணுதல்

மார்க்கப் பணியில் ஆர்வம் தோன்றி அதில் ஈடுபடுவீர். சமூகத்திலும், மக்களிடையேயும் உங்களுக்கு சிறப்பும், கௌரவமும் ஏற்படும்.


அஞ்சனக்குச்சி

உங்களுக்கொரு மகன் பிறப்பான், உங்கள் சந்தோஷம் பெருகும்.


அம்மிக் குழவி

நாவன்மை உண்டாகி, பேச்சில் வல்லவராவீர்கள். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் திருத்தமடைந்து குணம் ஏற்படும்.


அறிமுகமில்லாப் பெண்ணின் மடியிலிருத்தல்

உங்களது நோக்கம் நிறைவேறும், செல்வம் பெருகி வளமான நல்வாழ்வு கிட்டும்.


அறிமுகமில்லாப் பெண்ணுடன் புணர்தல்

நீங்கள் கண்ட இக்கனவின் பயனாக சந்தோஷம் பெற்றிருந்தால் உங்களுக்கு நற்பயன் கிட்டும்.


அறிமுகமுள்ள பெண்ணுடன் புணர்தல்

இத்தகைய கனவைக் கண்டவர்கள் பிரயோசனமடைவார்கள்.


அத்தர் வியாபாரியைக் காணுதல்

உங்களுக்கு அரசாங்கத்தில் ஓர் உத்தியோகமோ, அல்லது சன்மானமோ அல்லது உதவியோ கிடைக்கும். இவையேதும் கிடைக்காவிட்டால் உங்கள் பெயர் பிரபலமடைந்து புகழ் பெறுவீர்.


அத்தர் தடவ கண்டால்

மார்க்க சம்பந்தமான அம்சங்களால் உங்களுக்கு ஆனந்தம் ஏற்படும். வாழ்வில் சுபிட்சம் அடைவீர்.


அகீக் (கல்)

உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் சமுதாயத்தில் உயர்வடையும். உள்ளத்திலும் தாராளத் தன்மையும் ஏற்படும்.


அசா (தண்டம்)

ஓர் கூட்டத்திற்கோ, மன்றத்திற்கோ, சமூகத்திற்கோ தலைவனாவீர்கள்.


அடிமையைக் காணுதல்

எவருடைய ஆதிக்கமோ, கட்டுப்பாடோ இல்லாமல் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவீர்கள்.


அடுப்புக் கரி

நீங்கள் சர்வ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத வகையில் அச்சமும், பகையும் உங்களுக்கேற்படும். கடுமையான வியாதி உண்டாகும். கஷ்டங்களும், ஆபத்துகளும் வரும்.


அகண்ட இல்லம்

உலகத்தில் செல்வப்பெருக்க மேற்படும்.


அயலாரின் குமாரன்

வியாதியும், அநாவசியமான சச்சரவும் உங்களுக்கு ஏற்படும்.


அழகிய குமரி

சந்தோஷமும், செல்வமும் எதிர்பாராமல் உங்களை வந்தடையும்.


அந்நிய ஆடவன் தன் படுக்கையில்

ஆயுட்காலம் நீளமாகும் என்பதன் அறிகுறி இது.


அந்நியன் படுக்கையில் தன்னைக் காணுதல்

விரோதி உண்டாவான், அதனால் பலவித சங்கடங்களுக்காளாவீர்.


அதிகமான ரொட்டிகள்

ஆயுள் பெருகும் புதிய நல்ல நண்பர்களின் கூட்டுறவு ஏற்படும்.


அசூயைப் பொருள்

ஏதோவொரு அசுத்தமான பொருள் உங்களுக்குக் கிடைப்பதற்கான அறிகுறியாகும் இது.


அதிகாலைக் காற்று

வெகு சீக்கிரத்திலேயே விவாகம் நடைபெறும், சந்தோஷமும் பெருகும்.


அதிகம் சிரித்தல்

எந்த வகையிலேனும் துக்கமும் வருத்தமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


அகன்ற மார்ப்பைக் காணுதல்

வீரச் செயல்களில் பெரும் புகழும், கீர்த்தியும் அடைவீர்கள்.


அல்லாஹ்வின் பிரகாசம்

முஃமினானவனுக்கு சந்தோஷம் உண்டாகும். முஸ்லிமுக்கு நன்மை ஏற்படும், ஆளிம்களுக்கு தூய்மை உண்டாகும். அதிகாரிகளுக்கு நேர்மையும், நட்பினமும் உண்டாகும். துறவிகளுக்கு ஒர்மையும். மனசீர்திருத்தமும் ஏற்படும். அடிமையாயிருந்தால் அவனுக்கு விடுதலையும், கைதியாயிருந்தால் விமோசனமும் வியாதியஸ்தனாயிருந்தால் தெய்வ சுகமும் ஏற்படும். காபிராயிருந்தால் அவன் முஸ்லிமாவான்.


அல்லாஹ் ஏதேனும் ஓரிடத்தில் இறங்கக் கண்டால்

எந்த இடத்தில் அல்லாஹ் இறங்கினான் என்பதைக் கண்ட இல்லத்தில் சிறப்பும், வெற்றியும், சேமமும் உண்டாகும்.


அல்லாஹ்வை ஏதேனும் ஓர் உருவத்தில் கண்டால்

கனவைக் கண்டவன் தன் துர்செய்கையிலிருந்து மன்னிப்பு கோர வேண்டும். இப்படிச் செய்தால் அவன் சுவர்க்கவாதியாகச் சமைவான்.


அன்பியாக்கள், நபிமார்களைக் கண்டால்

தலைமைத்தனத்தைப் பெறுவான், அல்லது பெரிய தனவந்தனாவான்.


அத்திப் பழத்தை உண்ணக் கண்டால்

நல்ல பொருள் கிடைக்கும். நிரந்தரமான செல்வமும் உண்டாகும்.


அக்கினியை தின்னக் கண்டால்

தகாத முதலைக் தின்பான். மேலும் அதிகமான மன வேதனையை அடைவான்.


அக்கினி தீண்டக் கண்டால்

பிரஸ்தாப இடத்தில் மரணம் அதிகம் ஏற்படும்.


அக்கினியை வணங்கக் கண்டால்

உலகப்பற்றும், மார்க்கப்பற்றும் பாழடையும், தகாத முதலை விரும்புவான்.


அக்கினி வானத்திலிருந்து இறங்குவதைக் கண்டால்

கஷ்ட காலம் ஏற்படும்.


அல்லாஹ்வை குறைபாடு உருவமாய்க் கண்டால்

இக்கணவைக் கண்டவன் உடனடியாகவும், துரித்தமாகவும் அல்லாஹுதஆலா விடம் பாவமன்னிப்பை கோர வேண்டும்.


அதான் (பாங்கு) சொல்வதாய் கண்டால்

இப்படிக் கண்டவன் கொடியவனாயிருந்தால் அவனுடைய கரம துண்டிக்கப்படும். நல்ல மனிதரயிருந்தால் இவருக்கு ஹஜ்ஜு கிடைக்கும்.


அக்கினி ஒரு வீட்டிலோ அல்லது நகரிலோ தீப்பிடித்து எரிவதைக் கண்டால்

பிரஸ்தாப இல்லத்திலும், நகரத்திலும் அக்கிரமும் அநியாயமும் ஏற்படும்.


அக்கினி பூஜையில் தன்னைக் கண்டால்

இவனுடைய இகபரம் சீர்படும். ஹராமான பொருளை விரும்புவான்.


அக்கினி வானத்தின் பக்கம் செல்வதைக் கண்டால்

இதைக் கண்டவன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்றவனாகவும் அடாத மொழி கூருபவனாகவுமிருப்பான்.


அக்கினியில் மாமிசத்தையிட்டு உன்னுவதாக கண்டால்

இவன் மக்களுடன் புறம பேசாமல் தப்பித்திருக்க வேண்டும் இவன் உணவு நிறையும், இவனுக்கு துன்பமும், துயரமும் அதிகமுன்டாகும்.


அக்கினியால் வஸ்திரமோ, தன் உறுப்போ கரிந்து போவதைக் கண்டால்

இப்படிக் கண்டவனுக்கு துன்பம் ஏற்படும்.


அக்கினியால் சுடக் கண்டால்

யாரேனும் ஒருவன் கடுமையாய் ஏசுவான்.


அக்னி புகையின்றி ஆகாயத்திலிருந்து இறங்கக் கண்டால்

கண்டவனுக்குத் துன்பமானதெல்லாம் இலகுவாகும்.


அக்கினியைக் சுவைக்கக் கண்டால்

அநாதைகளின் பொருளை தின்னுவான்.


அக்னி வர்ஷ்க்க கண்டால்

இது யார் மீது விழுகின்றதோ அவர் கஷ்டத்துக்கும் வேதனைக்கும் ஆளாவார்.


அரசர் சன்மானமளிக்கக் கண்டால்

அருளும், செல்வமும், கௌரவமும் பெருகும்.


அரசர் (மரணமடைந்தவர்) உயிருடன் இருக்கக் கண்டால்

அவருடைய சட்டதிட்டங்களும் நடைமுறையும் பிரஸ்தாப தேசத்தில் திரும்பிவரும்.




ஆகாயத்தைக் காணுதல்

உங்கள் அந்தஸ்தும், மதிப்பும் உயரும், உங்களுக்கு ஆண்மகவு பிறக்கும்.


ஆகாயத்தில் நடத்தல்

சமுதாயத்தில் இழி நிலையும், கேவலமும் ஏற்படும். பாவத்தில் சிக்குண்டு உழல்வீர். அல்லாஹ்வின் மீது ஞாபகமாயிருந்து தொழுதால் கஷ்டங்கள் தணியும்.


ஆகாயத்தில் பறந்து அடைதல்

இருலோக வாழ்க்கைகளிலும் பெருமையடைவீர்கள். சந்தோஷமும், பொருளும் கிடைக்கும்.


ஆகாயத்தில் பறந்து செல்லுதல்

வெளியூர் செல்ல வேண்டிய பிரயாண வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத வகையில் வெற்றி உங்களைத் தேடி வந்தடையும்.


ஆகாயத்தில் காற்று வீசக் காணுதல்

அச்சமும், துக்கமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது. எனினும், பல்வேறு வகையான காற்றுக்குப் பல்வேறு பலன்கள் உண்டு. ஆகாயத்தில் புழுதி கலந்த காற்றயிருந்தால், அத்துடன் அந்தப் புயல் காற்றின் காரணமாக விருட்சம் விழுவதைக் கண்டால் அபாயங்களுண்டாகும். மனக் கலக்கம் ஏற்படும். தரைமட்டத்திலேயே பூமியில் இக்காற்று வீசுவதாய்க் கண்டால் வெளியூர் பிரயாணம் செய்யும் வாய்ப்பும் ஏற்படும். நல்ல பிரயோசனமும் ஏற்படும். செல்வா நிலையும் தோன்றும், இதே காற்று வானத்தின் பக்கம் வீசுவதாய்க் கண்டால், அண்மையில் மரணம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


ஆடு மேய்த்தல்

நீங்கள் வெகு சீக்கிரத்தில் குடும்பத் தலைவனாகி விடுவீர்கள்.


ஆட்டு இறைச்சியை உண்ணுதல்

உங்களிடமிருந்து எப்போதோ காணாமற்போய்விட்ட பொருள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத உணவு கிடைக்கப்பெறுவீர்கள்.


ஆட்டு குட்டி

சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


ஆந்தையைக் காணுதல்

சமுதாயத்திலும், இனமக்களிடையேயும் அந்தஸ்து உயரும், கௌரவமும் ஏற்படும்.


ஆப்பிள் பழத்தைக் காணுதல்

சந்தோஷமும், நன்மைகள் நிரந்த சுக வாழ்க்கையும் உண்டாகும். அறிவுள்ள மகன் பிறப்பான்.


ஆலிமைக் காணுதல்

நீங்கள் நடத்தையிலும், பேச்சிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். கௌரவமான வாழ்க்கை கிட்டும்.




இருளைக் காணுதல்

உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்படும், உலக வேளைகளில் கவனம் இராது.


இடது கரத்தைக் காணுதல்

உங்கள் மனைவி அல்லது சகோதரியின் சந்திப்பு அகஸ் மாத்தாக ஏற்படும்.


இல்லத்தில் நுழைதல்

உங்கள் விரோதியை நீங்கள் வெல்வீர்கள். பகைமை அச்சம் அறவே ஒழிந்துவிடும்.


இல்லம் தீக்கிரையாதல்

அரசாங்கத் துறையிலிருந்தோ அரசாங்க அதிகாரிகளிடமிருந்தோ எதிர்பாரா வகையில் உங்களுக்கு பொருள் கிட்டும்.


இரு கரங்களிலும் மருதோன்றி

(நீங்கள் ஆணாயிருந்தால்) உங்களுடைய ஜீவியத்துக்காக மிகவும் சங்கடமடைவீர்கள். (பெண்ணாயிருந்தால்) உங்களுக்குச் சந்தோஷ மேற்படும்.




ஈயைக் காணுதல்

கீழ்தரத்தின் அறிகுறி இது நீங்கள் சமுதாயத்தில் மட்டரகமாகக் கருதப்படுவீர்கள்.


ஈரல்

நல்ல நிலையில், பெரும் அந்தஸ்தும், புத்திசாலியுமான பெண் உங்களுக்கு கிடைப்பாள்.


ஈட்டி

பிரயாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அல்லது எதிர்பாரா செல்வம் கிடைக்கும். மக்கள் உங்களுக்கு வழிபட்டு, உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்.




உப்பு காணுதல்

நன்மைகளும் நல்ல பிரயோசனங்களும் உண்டாகும். நீங்கள் வியாதியுற்றவராய் இருந்தால் வியாதிகள் நீங்கி சுகம் பெறுவீர்கள்.


உடைந்த நகம்

மார்க்க கல்வி கற்றுக் கொள்வதில் தடையும் இடையூறுகளும் ஏற்படும்.


உடை (புதிதும் பரிசுத்தமானதும்)

உங்களுக்கு கௌரவமும், மென்மையும், பிரயோசனமும் அதிகம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


உடை (சிவப்பு)

சண்டையும் சச்சரவுகளும் ஏற்படும். நீங்கள் பெண்ணாயிருந்தால் ஏதேனும் பயன் கிட்டும்.


உடை (பச்சை)

உங்களுக்கு சீக்கிரத்திலேயே மார்க்க பக்தி ஏற்படுமென்பதற்கான அறிகுறி இது.


உடை (வெள்ளை)

உங்கள் கௌரவமும், கண்ணியமும் பெருகும்.


உணவு விரிப்பைக் காணுதல்

நிறைந்த செல்வம் உமக்கு உண்டாவதற்கான அறிகுறி இது.




எலியைக் காணுதல்

அழகும், நற்குணமும், நல்லொழுக்கங்களும் நிறைந்த வாழ்க்கைத் துணைவி கிடைப்பாள்.


எலுமிச்சம் பழத்தைக் காணுதல்

உமது கஷ்டங்களனைத்தும் நிவர்த்தியாகிவிடும். உல்லாச வாழ்க்கை நடத்தும் வசதிகளெல்லாம் ஏற்படும்.


எழுதுகோல்

மார்க்க ஞானமோ அல்லது பக்தியோ ஏற்படும். இது இல்லாவிட்டால் ஆண் சந்ததி பிறக்கும்.


எள்ளைக் காணுதல்

நீர் வேலை செய்யும் நல்ல எசமாநிடமிருந்து நற்பயன்களைப் பெறுவீர்கள்.




ஏசுதல்

வறுமை உண்டாவதற்கான அறிகுறி.


ஏரியில் ஸ்நானம் செய்தல்

உலக சங்கடங்களிளிருந்து விலகி, பரிசுத்தமாவீர்கள். சந்ததியாருடைய அச்சம் இல்லாமல் இருப்பீர்கள்.


ஏர் உழுதல்

நீர் பிரம்மச்சாரியாயிருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மனமானவராக இருந்தால் சந்ததி ஏற்படும். அல்லது குடும்ப நலன்களை அடைவீர்.




ஐஸ் (பனிக்கட்டி) காணுதல்

கட்டியாகக் கான்பீர்கலாயின் துக்கம் ஏற்படும். நீர் அதனைப் பருகுவதாகக் கண்டால் சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


ஐஸ் உண்பதாக காணுதல்

உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஏற்படும். மனக்குறைகள் அகலும், மனக் கவலைகள் நீங்கும்.




ஒட்டகத்தைக் காணுதல்

எதிர்பாராத வகையில் அளவிலாத பொருள் கிடைக்கும்.


ஒழு செய்யக் காணுதல்

நம்பிக்கைக்குரியவனாய் சமைவதட்கான அறிகுறி இது.




ஓடும் தண்ணீர்

நீர் தற்போது நினைத்துக்கொண்டுள்ள காரியம் நல்ல விதமாக முடிவு பெறும். எதிர் பார்க்கும் பொருள் வந்து சேரும்.




கஃபதுல்லாஹ்

சமுதாயத்தில் பெருமையும், கௌரவமும் ஏற்படும். அந்தஸ்து உயரும் அல்லது சொத்தில் பாகம் கிடைக்கும் அல்லது நல்ல அறிஞனாவீர்கள்.


கஃபாவைச் சுற்றி வருதல்

பாவச் செயல்களினின்றும் விலகுவீர்கள் அல்லது ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு வழிப்பட்டு நடப்பீர்கள் அல்லது குடும்பத்தார் பால் கவனம் செலுத்துவீர்கள்.


கடுமையான காற்று

உமக்கு அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


கண்ணாடி

கலாஞானம் பெறுவீர்கள். சந்தோஷ வாழ்க்கை நடத்துவீர்கள்.


கண்மை (நேத்திர அஞ்சனம்)

சந்ததிகளால் சந்தோஷம் ஏற்படும். மனம் குதூகலமடையும்.


கஸ்தூரி

நல்ல பெயர் கிட்டும். புகளுக்குரியவராவீர், சிறப்பும் பெறுவீர். பெரிய அறிஞராய் விளங்குவீர்.


கபன் அணியக் காணுதல்

உமது ஆயுள் வளர்ச்சியடையும், சந்தோஷமும் உண்டாகும். அரசாங்க நன்மை கிட்டும்.


கப்ருஸ்தான்

நீர் எப்போதோ மறந்து போய்விட்ட ஒரு முக்கிய நல்ல விஷயம் மீண்டும் உமது ஞாபகத்திற்கு வரும்.


கற்கண்டு

நல்ல முதலும் மூலதானமும் கிட்டும். நல்ல வார்த்தையைக் கேட்பீர். அல்லது உமக்கு ஒரு நட்புத்திரன் பிறப்பான். அல்லது அழகிய பெண் ஒருத்தி கிடைப்பாள்.



கா


காடு

உம்மைப் பீடித்துள்ள கவலை நிவர்த்தியாகும், உம் எதிரிதோல்வியுறுவான்.


காற்றைக் காணுதல்

உம்மைப் பீடித்துள்ள துக்கமும், கவலையும் நீங்கி விடுபடுவீர்.



கி


கியாமத் (உலக முடிவு)

அரசன் அல்லது அதிகாரியின் நீதச் செயல் பிரபலமாகும்.


கிணறு

உமக்கு அரசன் அல்லது மந்திரி அல்லது அறிஞரின் நட்பு கிட்டும். நல்ல ஊழியன் கிடைப்பான். அல்லது அழகிய பெண் கிடைப்பாள்.


கிளி

உமக்கு வாழ்க்கையில் சந்தோஷமும், வெற்றியும் சமாதானமும் உண்டாகும்.



கு


குடலைப் பார்த்தல்

உமது இல்லத்தில் தளவாடங்கள் அதிகமாகும். சந்தோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி இது.


குங்குமப் பூவை காணுதல்

நீர் செய்துள்ள அல்லது செய்துவரும் நட்கிரியைகள் பிரபலமடையும், பெரியோர்களின் சகவாசம் ஏற்படும்.


குத்பா ஓதுவதை காணுதல்

மார்க்கத்தின் மீது பக்தியும் பற்றும் ஏற்படும்.


குர்ஆன் ஓதுதல்

எதிர் பாரவகையில் சொத்து ஏதேனும் கிடைக்கும். அல்லது பாதுகாப்புப் பொருள் வந்தடையும் அல்லது நேர்மையான பொருள் கிட்டும், தெய்வபக்தி உண்டாகும்.


குர்பானி செய்தல்

அச்சம், கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். பென்னாயிருப்பின் ஆன சந்ததி உண்டாகும்.


குளித்தல்

அச்சம், கவலை முதளிவற்றிளிருந்து விடுதலை கிடைக்கும்.


குள்ளனைக் காணுதல்

மதிப்பை இழப்பீர், சோம்பேறியாய்ச் சுற்றியலைய நேரிடும்.



கூ


கூஜாவைக் காணுதல்

அழகும் அடக்கமுள்ள மனைவி கிடைப்பாள்.



கை


கைவிரல்களைக் காணுதல்

உமக்கு ஒரு கூட்டாலியோ அல்லது சகோதரனோ அல்லது நம்பிக்கைகுரிய ஒரு நபரோ அல்லது மனைவியோ துணையாகக் கிடைப்பார்.



கொ


கொசுவைக் காணுதல்

நீர் நலிந்து மெலிந்தவராகயிருப்பின் இலேசான வியாதிக்குள்ளாவீர்.


கொலை புரிதல்

நீர் சுகமடைவீர், அத்துடன் உம் வாழ்க்கையில் அமைதி ஏற்படும், வியாதிகள் நீங்கும் கடன்காரராயின் கடன் தொல்லை நீங்கும் அல்லது ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் கிட்டும்.



கோ


கோட்டை

மார்க்க பக்தியும் பற்றும பெருகும், பேணுதல் உண்டாகும்.


கோதுமையைக் காணுதல்

சிரமங்களினூடே பொருள் கிடைப்பதற்கான அறிகுறி இது.


கோழி முட்டையைக் காணுதல்

அழகிய நல்ல பெண் ஒருத்தி உமக்குக் கிடைப்பாள். அல்லது நண்பரால் சந்தோஷமுன்டாகும்.




ஸஹாபாக்களை (திரு நபியின் தோழர்களை) காணுதல்

உமக்கு செல்வம் உண்டாகும், சந்தோஷம் பெருகி குதூகல வாழ்க்கை நடத்துவீர்.




சந்திரன் மாடியில் அல்லது இல்லத்தில்

நல்ல குணம் உள்ள தனயன் தோன்றுவான், பெண்ணாயிருப்பின், தகுதியற்ற கணவன் கிடைப்பான்.


சந்தனம்

நல்ல பெயர் உண்டாகும். பெருந்தன்மை ஏற்படும் பக்தனாய் கருதப்படுவீர்.


சமுத்திரத்தில் நீந்துதல்

கல்வி வளர்ச்சியில் பேரார்வம் ஏற்படும். அதிலேயே நேரம் கழியும்.


சர்ப்பம் (பாம்பு)

நீர் காணும் சர்ப்பம் கறுப்பாக இருந்தால் செல்வம் கொழிக்கும். அவ்வாறில்லையாயின் துக்கமேற்படும்.


சன்மானம் கிடைத்தல்

அழகும் பண்பும் நிறைந்த மனைவி கிடைப்பாள். அல்லது நற்குணமுள்ள மகன் பிறப்பான்.



சா


சாயம்

உமது நிலை உயரும், சமூகத் தலைவனாவீர்.



சி


சிங்கத்தைக் காணுதல்

உம் பகைவரை வெல்வீர்.


சிட்டுக்குருவி

நீர் பிறருக்கு அடிமை வேலை செய்யும் பணியாலராவீர். அல்லது உம் பணியாளரிடமிருந்து நன்மை பெறுவீர்.


சிம்மாசனத்தைக் காணுதல்

ஓர் அதிகாரியாகச் சமைவீர். உமது மனதுக்கு உல்லாசம் கிடைக்கும்.


சிம்மாசனத்தில் அமர்தல்

அரசு பதவி கிடைக்கும் அல்லது அதிகாரம் வகிக்கும் பொறுப்புள்ள பதவி எது வேணும் கிட்டும். மனதுக்குச் சந்தோஷ மேற்படும்.


சிரிப்பு

இது தகாத இடத்தில் ஏற்பட்டால் கவலை ஏற்படும் என்பதற்கான அடையாளகாகும்.


சிறிய குமாரனைக் காணுதல்

நீர் ஈன்றெடுத்த குழந்தையினால் சந்தோஷம் ஏற்படும்.


சிறு நீர் கழித்தல்

உம் குமாரன் ஓர் அதிகாரியாவான். நீர் பலவீனமுற்ற கேட்டுப் போய் விடுவீர்.



சு


சுத்தத்துடன் தொழுதல்

உம் தேவைகளில் மன ஓர்மை ஏற்படும், நிம்மதியும் உண்டாகும்.


சுரையா (நட்சத்திரம்)

அந்தஸ்து உயரும், சுகமும் சந்தோஷமும் உண்டாகும். மென்தேளிவு பிறக்கும்.


சுரைக்காய் செடி

உமக்கு அதிகமான பிரயோசனமும் அதிகமான நன்மைகளும் உண்டாகும்.


சுவர்க்கத்தைக் காணுதல்

உம் மனைவி பரிசுத்தமானவனாகவும், ஊழியன் நற்குணமுள்ளவனாகவும் இருப்பார்கள். அளவற்ற சந்தோஷம் உண்டாகும்.



சூ


சூரியன்

செல்வமும், சந்தோஷச் செய்திகளும் எதிர்பாரா வகையில் வந்து சேரும்.


சூரிய கிரகணம்

பெரும்பாலும் இல்லத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது உமக்குச் செல்வம் சேரும் அல்லது ஏதேனுமொரு நற்செய்தி கிடைக்கும். உம்மைப் பீடித்துள்ள வியாதி சொஸ்தமடையும்.



செ


செவியைக் காணுதல்

நீர் நல்ல மார்க்க பக்தியும் உத்தம குணமுள்ள பெண்ணை மணப்பீர் அல்லது நற்செய்திகள் ஏதேனும் கேள்வியுற்றுச் சந்தோஷமடைவீர்.



சே

சேவலைக் காணுதல்

அந்நிய மனிதராலோ அல்லது உம் பணியாள் மூலமோ நன்மை அடைவீர்.



தங்கம்

உம் கவலைகள் பெருகும்.


தண்ணீர் கூஜா

பணிவுள்ள பணியாள் ஒருவன் உமக்குக் கிடைப்பான்.


தயிரைக் காணுதல்

நன்மையான உணவு கிடைக்கும், உம்மைப் பீடித்துக்கொண்டுள்ள அச்சம் வரும்.


தர்மம் செய்தல்

வியாதியிலிருந்து விடுதலைப் பெறுவீர்.


தலையனையைக் காணுதல்

அந்தஸ்து உயரும், பெருந்தன்மை ஏற்படும்.


தலைப்பாகை கட்டுதல்

அதிகாரம் பெறுவீர், அல்லது அந்தஸ்து உயரும், மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.



தா


தாடியை காணுதல்

உமது கௌரவமும் , மென்மையும் பெருகும்.


தாடியை வெட்டக் கண்டால்

உம் செல்வம் குறையும், வழிகேடுகள் பல உண்டாகும்.


தாடி வெண்மையாய்க் காணுதல்

அந்தஸ்தும், கௌரவமும் உண்டாகும், உம் தேவைகள் பூர்த்தியாகும், கோரிக்கைகள் நிறைவேறும்.


தாய் தந்தையைக் காணுதல்

உம்மைப் பீடித்துள்ள கவலையும், துன்பமும் விலகிப் போகும், மரணமடைந்து விட்டவருக்காக ஏதேனும் நன்மையை செய்யுங்கள்.


தாய் வயிற்றிலிருந்து ஜனனம்

நீர் பாவியாகவோ அல்லது குழப்பக்காரராகவோ, குழப்பமடைந்த மனத்தினராகவோ இருப்பதால் அதை விட்டும் தப்பிக் கொள்வீர்.



தி


திராட்சை

வியாதிக்காலாயிருந்தால் வியாதியிலிருந்து விடுதலை பெறுவீர், உமது மனம் ஆனந்தமடையும்.


திறவு கோல் (சாவி)

அரசாங்கத்தின் மூலம் உமக்குச் செல்வமும், செல்வாக்கும், கௌரவமும் கிட்டும்.



து


துணி மூடை

பக்தியும் பணிவும் மிக்க மனைவி கிடைப்பாள்.


தும்மலைக் காணுதல்

உம் கோரிக்கை வெகு துரிதமாய் நிறைவேறும்.



தூ


தூக்கு மேடை

கௌரவமிக்க அந்தஸ்தைடைவீர்.



தே


தேநீர் பருகல்

பூரண சுகம் பெறுவீர், உங்கள் மனோரதங்களும், எண்ணங்களும் நிறைவேறும்.


தேவைக் காணுதல்

நீர் காணும் தேவு அழகான தாயிருப்பின் நல்ல அந்தஸ்தும் ஞானமும் உண்டாகும். அது அவலட்சனமாயிருந்தால் துக்கம் உண்டாகும்.


தேனீ

உம்மைப் பீடித்துள்ள சங்கடங்கள் விலகும். தற்காலிகமான சந்தோஷம் உண்டாகும். எவரேனும் ஓர் ஆடவரிடமிருந்து பிரயோசனம் கிடைக்கும்.



தொ


தொழுகை நடப்பது

தொழுகையில் தக்பீர் சொல்லக் கண்டால் உம்மை மரணம் நெருங்குவதாக அர்த்தம்.



தோ


தோள்

நண்பன் ஒருவன் உமக்கு உடன்தையாயிருப்பான்.




நகத்தைக் காணுதல்

இது அழகாகவும், பெரிதாகவும் கண்டால் சுகமும், சந்தோஷமும் உண்டாகும். சிறிதாகவும், விகாரமாகவும் கண்டால், நிம்மதியின்றித் திரிய நேரிடும்.


நட்சத்திரத்தைக் காணுதல்

உம்தொழில் அல்லது உத்தியோகத்தில் உமக்கு மேம்பட்ட அதிகாரிகள் அன்புடனிருப்பார்கள்.


நபிமார்களைக் காணுதல்

நீர் இரகசியத்தைப் பாதுகாப்பவராயிருப்பீர், குற்றம் புரிவதினின்றும் தப்பி விலகியிருப்பீர்.


நபி தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் காணுதல்

உமது அதிகார பாதி கிட்டும்.


நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணுதல்

காரியம் சித்தியாகும், நல்ல பயன்களைப் பெறுவீர்.


நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை காணுதல்

உமது வாழ்நாள் முழுவதும் உமது வாழ்நாள் முழுவதும் சுகமாகவும், சந்தோஷமாகவும் கழியும்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை காணுதல்

கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும், இவ்வுலக மறு உலக வெற்றிகள் ஏற்படும்.


நரகில் செல்லுதல்

பாவங்கள் உம்மைத் தீண்ட அணுகும், அவைகளிலிருந்தும் நீர் விலகிட முயற்சிக்க வேண்டும்.


நர்கிஸ்

மனைவி கர்ப்பமாவாள், ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால் ஒரு நல்ல மகன் பிறப்பான்.


நவரத்தினத்தைக் காணல்

வீரத்தன்மையிலும் மார்க்கப் பற்றிலும் நல்ல பெயர் ஏற்பட்டுப் புகழடைவீர்.


நறுமணம்

கஸ்தூரி போன்ற நறுமணமாயிருப்பின், மார்க்க ஞானம் பெறுவதற்கான அடையாளமாகும்.



நா


நாணயங்களைக் காணுதல்

அறிவில்லாதவர் எவருக்கேனும் நீர் உபதேசம் செய்ய நேரிடும்.


நாயைக் காணுதல்

சாதாரணப் பகைவனிடம் நீர் இடப்படுவீர்.


நாவைக் காணுதல்

அதிகமாகப் பேசும் பலக்கமுடையவராவீர்.



நி


நிழலைக் காணுதல்

உமக்குச் செல்வம் கிட்டும், அல்லது பெரியவர்கள் மூலமாய் பல நன்மைகள் ஏற்படும்.



நீ


நீண்ட நகம்

உம்முடைய பகைவனை வேல்லுவீர், மனோ எண்ணம் நிறைவேறும், அல்லது சில இரகசியங்கள் வெளியாகும்.


நீந்துதலைக் காணுதல்

சிந்தனையால் செல்வம் கிட்டுதலுக்கான அடையாளம்.



நெ


நெய்யைக் காணுதல்

சிறப்பும், இலாபமும் உமக்கு ஒருங்கே கிடைப்பதற்கான அறிகுறி இது.



நோ


நோன்பு நோற்றல்

அபாயத்திலிருந்து தப்பிவிடுவீர், கொடிய செயலில் ஈடுபடாமல் விலகுவீர்கள், உமது விவசாயமும் நாசமடையாமல் தப்பிவிடும்.




பசுவைக் காணுதல்

தரத்துக்கு தக்க முறையில் சௌகரியமும், வசதியும் ஏற்படும்.


பஞ்சு

நிரந்தர வருவாய்க்கான வழி ஏற்படும் என்பதற்கான அறிகுறி இது.


பருந்தைப் பார்த்தால்

பாவச்செயல்களையும், அக்கிரமச் செயல்களையும் அதிகமாய்ச் செய்வீர்.


பல்லக்கு பெட்டகத்தைக் காணுதல்

இதுகாறும் உம்மிடம் பொதிந்துள்ள இரகசியம் ஏதாவது வெளியாவதற்கான அறிகுறி இது.


பவளக் கல்

உதவியும், வெற்றியும் கிடைக்கும், உமது ஆயுள் நீளமாகும்.


பள்ளிவாயலில் தொழுதல்

வியாதிக்குள்ளாக நேரிடும் ஏதேனும் ஒரு பிரயாணத்திலிடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.


பன்றியைக் காணுதல்

சங்கடத்துக்குள் சிக்குவீர் என்பதற்கான அறிகுறி இது.



பா


பாதத்தைக் காணுதல்

உமது முன்னேற்றத்துக்கும் உமக்கு அழகு ஏற்படுவதற்கு மான அறிகுறி இது. சந்தோஷ பெருகி ஆனந்த மேற்படும்.


பாம்பைக் காணுதல்

உம் பகைவனால் உமக்கு பாதகம் ஏற்படும்.


பால் கறக்கக் காணுதல்

நல்ல தொழில் செய்வீர்கள், அல்லது ஏதேனும் ஒரு பெண்ணின் செல்வத்தைப் பெறுவீர், உமது தேகத்தில் புதிய பலம் ஏற்படும்.



பி


பிரயாணக் கூட்டம்

நீர் இக் கூட்டம் செல்வதாகக்காண்பீராயின், உமக்கு ஆபத்து நேரிடும், பிரயாணக் கூடம் வருவதாக கண்டால் உம்முடைய நோக்கம் நிறைவேறும்.


பிரேதம் (ஜனாஸா) காணுதல்

சுகமும், சந்தோஷமும் உண்டாகும். நீண்ட வயது ஏற்படும். எதிர்பாராத செல்வம் கிடைக்கும்.


பிறை (சந்திரன்) காணுதல்

உமக்கு பெருந்தன்மையும், தலைமையும் ஏற்படும்.



பீ


பீரங்கியைக் காணுதல்

எதிரி மீது உமக்கு வெற்றி கிடைக்கும்.



பு


புகையைக் காணுதல்

எதிர்பாரா வகையில் உம்முடன் பிறர சண்டை செய்ய நேரிடும்.


புதைக்குழி (கப்ர்) தோண்டுதல்

புதிதாக ஓர் இல்லத்தை நீர் கட்டுவீர். செல்வம் எதிர்பாரவிதத்தில் உம்மைவந்தடையும்.


புயல் வீசுதல்

குடும்ப விவகாரத்தில் கவலைக்குள்ளாவீர்கள்.


புலியைக் காணுதல்

உமது இல்லத்தில் உள்ள எவரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ சுகவீனம் ஏற்படும்

தமிழ் பகுதி - கனவின் விளக்கம்