MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்
அஸ்செய்யித் ஷெய்க் கலீல் அவ்ன் மௌலானா (ஹாபிதுல்லாஹ்)
ஒருவர் நன்கு முயன்று கெட்டித்தனமாகப் படித்தால் வைத்தியரொருவராகலாம். அல்லது பொறியாளர் ஆகலாம். ஆனால், ஞானமில்லாத எந்தவொரு படிப்பும், அறிவும் பிரயோசனமற்றது.
ஞானம் என்பது அல்லாஹ்வை அறிவது. ஞானத்தின் மூலம் கலிமாவாகும். கலிமா என்பது நம்மிலும் நம்மிலிருந்து பரந்து விரிந்து நிலம், நீர், தாவரம், மரம், மட்டை, வானம், பூமி, அண்ட சராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. பரிபூரணமாக வியாபித்துள்ளது. எங்கும் பிரிவில்லாதது. பிரிக்க முடியாதது.
எனவே, கலிமாவின் உட்கருத்தை உணர்ந்தவர் தாம் காணும் மிருகங்கள், பட்சிகள் அதனின் (கலிமாவின்) ஒரு பகுதிதான் என்பதனை உணர்ந்துகொள்வர். ஒரு மரத்தில் பல கிளைகள் இருந்தாலும் அவையனைத்தும் அம்மரத்தின் பகுதிகளே என்பதனையும் உணர்வர்.
இவையனைத்தும் ஒன்றிலிருந்து உதயமானவை. அது, இது எனும் வேறுபாடு இல்லை, நீ நான் எனும் பிரிவேதுமில்லை என்பதனையும் உணர்வர். இந்தக் கூற்றுகளையெல்லாம் நன்கு சிந்தித்தாலே போதுமானது.
அஸ்செய்யித் ஷெய்க் கலீல் அவ்ன் மௌலானா (ஹாபிதுல்லாஹ்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கலிமா தைய்யிபாவுக்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறியுள்ளான். என்பதை நீர் பார்க்கவில்லையா? மணமிக்க ஒரு மரத்தைப் போன்று அதனுடைய ஆணி வேர் (பூமியில்) பதிந்ததாகவும், அதனுடைய கிளை வானளாவியதாகவும் இருக்கிறது. (அல் குர்ஆன் 14:24)
தம்முடைய ரப்பின் உத்தரவு கொண்டு எல்லா நேரங்களிலும் அதனுடைய கனியை அது கொடுத்துக் கொண்டிருக்கும். அல்லாஹ் (இந்த) உவமைகளை மனிதர்களுக்காக, அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விளக்குகிறான். (14: 25)
முஃமின்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் (கலிமா தய்யிபா என்னும்) உறுதியான சொல்லை கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். (14: 27)
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஆன்மீக பெரியார்களின் விலை மதிப்பில்லா சூபிச தத்துவங்கள், கருத்துகள் மற்றும் பொன்மொழிகள். கண்டிப்பாக வாசித்து பயன்பெறுங்கள்.
வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.