MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நண்பரின் கேள்வியும் ஜாமியின் பதிலும்
பாரசீக மொழியில் அழியா புகழ் பெற்ற காவியங்களை எழுதியவர் மௌலானா ஜாமி. அவரிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது. எப்போதும் வீட்டை விட்டு வெளியே போகும்போது வீட்டு கதவுகளை திறந்து வைத்துவிடுவார். மீண்டும் வீட்டுக்குள் சென்றதும் வீட்டு கதவுகளை சாத்தி விடுவார்.
ஒரு நாள் நண்பர் ஒருவர் கேட்டார். "ஏன் இப்படி செய்கிறீர்கள்? எல்லோரும் உள்ளே இருக்கும்போது கதவை திறந்து வைப்பர், வெளியே போகும்போது கதவை சாத்திவிட்டு செல்வர். நீங்கள் மாறி செய்கிறீர்களே" என்பதாக.
அதற்கு ஜாமி கூறினார். நான் வீட்டுக்குள் இருக்குபோது அதற்குள்ளிருக்கும் மிக விலை உயர்ந்த பொருள் நான்தான். அதனால் கதவை மூடிக்கொல்கிறேன். வெளியே செல்லுபோது வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களை பற்றி நான் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவை ஒன்றும் என்னை போல் விலை உயர்ந்த பொருளன்று. அதனால்தான் திறந்து போட்டு விட்டு செல்கிறேன்.