MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இசைக்கு மயங்கும் ஆத்மாக்கள்
தொகுப்பு: மெயில் ஒப் இஸ்லாம்
உலகில் இசைக்கு மயங்காத ஆத்மாக்கள் இல்லை என்று சொல்லலாம்.
குழந்தை முதல் குமரி வரை, கிழவன் முதல் கிழவி வரை இசையை ரசிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
நல்ல இசைகள் மனிதனின் உள்ளத்தை ஏன் கவர்கிறது? ஏன் உள்ளத்திற்கு ஒருவித அமைதியை தருகிறது, இன்பத்தை தருகிறது? ஏன் ஆத்மா எங்கேயோ செல்வதை போன்ற உணர்வு ஏற்படுகிறது? என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆத்மா ஏன் பாடலுக்கு மயங்குகிறது என்ற காரணத்தை அறிவுலக மேதையும், மாபெரும் ஞானியுமான இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் கஸீதாவுத் தையா என்ற நூலில் கூறும்போது:
ஆத்மா அதற்கு இப்போதுள்ள உடல் தரப்படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன், கோளங்களின் இனிய இசையை அது கேட்ட நினைவு தூண்டப்படுவதாலேயே அதில் பரவசமடைகிறது.
தொட்டிலில் கிடக்கும் குழந்தை இனிய பாடலால் இன்பமடைந்து, அமைதி பெருகிறதெனின், அல்லாஹ்வை புகழ்ந்து சுழலும் கோளங்கள் பாடிய இனிய இசையை ஆத்ம லோகத்தில் இருந்து (ஆத்மா) தான் கேட்டு கொண்டு இருந்ததை நினைவுப்படுத்தி கொள்கிறது.
இதேபோன்றுதான் ஞானியும் தன் இதயத்தில் கோளங்களின் பேரின்ப பரவச இசையை கேட்கிறார். புரிந்து கொள்கிறார். என்று கூறுகிறார்கள்.
மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறும்போது:
இறைக்காதலர்களின் இல்லத்தில் சுவர்கள் பாடல்களினால் ஆனவை, தரையும் நடனமாடும் இசையும் நிறுத்தப்படுவதில்லை.
நான் அமைதியாக இருக்கும்போது, எல்லாமே இசையாக உள்ள ஒரு இடத்திற்கு போய் விழுந்து விடுகின்றேன்.
சூபி இசை மற்றும் சூபி நடனம் என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பவை பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாத்தில் இசை கூடுமா? கூடாதா? அவற்றில், எந்த இசை தடுக்கப்பட்டது, எந்த இசை அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய இதனை வாசியுங்கள்..