MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இறை பாதை
மெயில் ஒப் இஸ்லாம்
இறைவனை அடையும் இறைப்பாதை என்பது பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டு, பஞ்சனையில் சாய்ந்து கொண்டு, பூஞ்சோலையில் நடந்து சென்று அடையும் பாதையல்ல.
துன்பம், துயரம், சோதனை என்ற கல்லு, முள்ளு, மேடு நிறைந்த கரடு முரடான பாதை இது.
இந்த பாதையில் நாம் பயணம் செய்யும் போது எமது இந்த புனித பயணத்தை தடுக்க ஈமானை திருடும் திருடர்கள், கொள்ளை கோஷ்டிகள், மனித மற்றும் ஜின் சாத்தான்கள் வருவார்கள்.
அதுமட்டுமல்ல எமது நப்ஸ், உலகம் போன்றவைகளும் எம்மை போக விடாமல் தடுக்கும். இவைகள் அனைத்தையும் முறியடித்து செல்வது லேசான காரியம் அல்ல.
இந்த பக்தி பாதையை பற்றி எமது ஞான ஆசிரியர் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் போது:
சிக்கலும், சிரமமும் நிறைந்ததொரு பாதை, இதில் இடையூறு கொண்ட பல கணவாய்கள் இருக்கின்றன. வெகு தூரத்திற்கு நீண்டு கிடக்கும் இந்த பாதையில் ஆபத்துகளுக்கும் தடைகளுக்கும் பஞ்சமே கிடையாது.
எங்கு பார்த்தாலும் ஆபத்துக்கள் காட்சி அளிக்கின்றன. எப்படி திரும்பினாலும் துன்பங்கள் தோற்றமளிக்கின்றன. போதாததற்கு பகைவர்களும், வழிப்பறி கொள்ளைகாரர்களும் பாதை நெடுகிலும் நிறைந்திருக்கிறார்கள். இங்கு நண்பர்களும் துணைவர்களும் மிகக் குறைவு.
இந்த பாதையை பார்த்து விட்டு யாரும் முகம் சுளிக்க வேண்டியது இல்லை. இது புனிதமான பாதை, இது சுவர்க்கத்தின் பாதை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: வெறுப்புக்குரியவை சுவர்க்கத்தை சூழ்ந்து இருக்கின்றன. ஆசைகள் நரகத்தை சூழ்ந்து இருக்கின்றன.
மேலும் எமது ஞான ஆசிரியர் கூறும் போது, இந்தப் பாதையை (பக்திப் பாதையை) விரும்புகிறவர்கள் இன்றைக்கு மிக குறைவாகவே இருக்கிறார்கள். இதில் நடக்கிறவர்கள் இன்னும் குறைவு. இதில் நடந்து குறிக்கோளை அடைந்து வெற்றி பெறுகிறவர்கள் மிக மிகக் குறைவு.
எனினும் இந்த கடைசி தரத்தவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இறைவன் தன்னுடைய அன்பையும் தன்னைப் பற்றிய அறிவையும் கொடுக்கிறான். தன் உதவியையும் பாதுகாப்பையும் வழங்குகிறான். தன் சொர்க்கத்தையும் ஒப்புதலையும் அளிக்கிறான்.
இதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
மிகப்பெரிய ஜிஹாத் என்பது உள்ளத்துடன் போரிடுவது என்று.
இதற்குத்தான் ஆத்மீக போர் வீரரான காமிலான ஷெய்குடன் பயணம் செய்ய வேண்டும். அந்த போர் வீரர், திருடர்கள், ஷெய்த்தான்களை எப்படி உள்ளத்தால் வெட்டி வீழ்த்தி இறைவனின் சந்நிதானதிற்கு செல்ல முடியும் என்ற பயிற்சியை எமக்கு அளித்து, அவர்களும் எமக்கு ஆத்மீக ரீதியில் உதவி செய்து இறை சந்நிதானதிற்கு சென்றடைய உதவி புரிவார்கள்.
அதல்லாமல் நாம் உருப்படி இல்லாதவர்களுடன் பிரயாணம் செய்தால், எம்மை அவர்கள் ஷெய்த்தான்களின் கையில் ஒப்படைத்து விட்டு சென்று விடுவார்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்
கலிமாவில் பொதிந்துள்ள தத்துவத்தின் (வஹ்ததுல் வுஜூத்தின்) சிறு விளக்கத்தை பெற்றுகொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.