MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இறைநேசத்தின் பின் அனைத்தும் வெறுப்பே!
இறைநேசம் உள்ளத்தில் குடிக்கொண்ட பின்னர் மற்றெல்லாம் வெறுப்பாகவே காட்சியளிக்கும்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பத்ருப்போர் முடியும்வரை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதன்பின் தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
ஒரு நாள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாரும் பத்ருப்போரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் மகனார் தந்தையிடம், "தந்தையே! பத்ருப்போரில் நான் காபிர்கள் அணியில் சேர்ந்து போர்செய்த நேரம் பலதடவை தங்களை கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. என் வாழ் அருகே நீங்கள் பலதடவை வந்துவிட்டீர்கள். ஆயினும் நான் தந்தையாயிற்றே என்று எண்ணி தங்களை விட்டுவிட்டேன்" என்றார்.
இதனை கேட்ட ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அதே சந்தர்ப்பம் அப்போது எனக்கு கிடைத்திருக்குமானால் உன்னைக்கொல்லாமல் விட்டிருக்கமாட்டேன்" என்றார்கள். இறை நேசம் பிள்ளை பாசத்தையும் மிஞ்சிவிட்டதல்லவா?