MAIL OF ISLAM

Knowledge & Wisdom



இன்ஷா அல்லாஹ்வின் மகிமை


ஒரு நாள் ஸெய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களிடம் அவர்களின் மனைவி "இன்று கவசம் விற்று வரும் பணத்தை என்னிடம் தாருங்கள்" என்று கூறினர்.


"சரி தருகிறேன்" என்றார்கள் ஸெய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)


ஆனால் அன்று கடைத்தெருவுக்கு கவசத்தை எடுத்து சென்றபோது அவற்றை வாங்க யாருமே வரவில்லை.


கணவர் கவசத்தோடு திரும்பி வருவதை கண்ட மனைவிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை.


"இன்றில்லாவிட்டால் என்ன. நாளை விற்று விடுகிறது" என்று மனைவிக்கு ஆறுதல் கூறினர் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்)


அடுத்த நாளும் விற்கவில்லை. அதற்கடுத்த நாட்களும் அதே நிலைதான்.


இதை கண்ட ஸெய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும் வியப்பும் ஏற்பட்டது.


அவர்கள் அல்லாஹ்வை நோக்கி, "யா அல்லாஹ்! இதுவென்ன பெரிய சோதனையாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்" என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.


அதற்கு அல்லாஹ், "நீங்கள் உங்கள் திறைமையை பெரிதாக எண்ணி எனது ஆற்றலை மறந்து "இன்ஷா அல்லாஹ்" என்று கூறாது உங்கள் மனைவியிடம் பதில் சொன்னீர்களே. எனவேதான் அது விற்கவில்லை" என்று பதில் கூறினான்.


ஸெய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள். அல்லாஹ்வும் மன்னித்து பின்னர் அவர்களின் தொழிலில் அபிவிருத்தி செய்தான்.