MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும்
துள்ளி விளையாடும் காலம் அது இமாம் ஹுசைனார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு, வரலாற்றில் தங்க மையினால் எழுதப்பட்டுருக்கும் உமர் ரழியல்லாஹு அவர்களின் ஆட்சிகாலமும் அது. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், இமாம் ஹுசைனார் அவர்களும் முத்தமிட்டுகொண்டும், கட்டிபிடித்துகொண்டும், சிறு சிறு சண்டைகள் அழகாக போட்டுக்கொண்டும் மதினத்து வீதிகளில் சுற்றி சின்னஞ்சிருசுகளாய் இருந்த காலமும் அது.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களோ தன்னுடைய தந்தை அமீருல் முஃமினீன் என்று பிரம்மிப்பூட்டும் பார்வையில் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி கூற. இதை கேட்ட இமாம் ஹுசைனார் அவர்களோ அது ஒருபுறம் இருக்கட்டும் ஒ இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிந்துகொள்(ளுங்கள்) நீர் என்னுடைய அடிமை ஆவீர்.
நீர்மட்டும் அல்ல உங்கள் தந்தையார் அமீருல் முஃமினீன் அவர்களும் எங்கள் பாட்டனார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமை ஆவர்கள். நீ(ங்களும்) என்னுடைய பாட்டனாருக்கு அடிமைதான் என்று சற்று கம்பீரமான குரலில் கூற. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களோ சிவந்து போக. அந்த பாலகர் தன்னுடைய தந்தை அமீருல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று முறையிட்டார்கள்.
என் அருமை தந்தையே என்னுடைய நண்பன் இமாம் ஹுசைன் பின் அலி (ரழியல்லாஹு அன்ஹு) (அவர்கள்) ஒரு விஷயத்தை கூறினார்கள். நடந்தது என்ன என்று சற்று விளக்கமாக அமீருல் முஃமினீன் அவர்கள் கேட்கும் போது விஷயத்தினை கூறினார்கள். இதை கேட்டு வியப்புற்ற அமீருல் முஃமினீன் அவர்களோ தன்னுடைய மகனாரை அழைத்துக்கொண்டு இமாம் ஹுசைன் அவர்களின் வீட்டிக்கு சென்றார்கள். அப்போது இதை பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்டது, இப்னு அலி அவர்களே நீங்கள் கூறியது உண்மையா என்று கேட்டார்கள். ஆமாம் அமீருல் முஃமினீன் அவர்களே நீங்கள் என்னுடைய பாட்டனாரின் அடிமைதானே, உம்முடைய மகனார் இவரும் என்னுடைய அடிமைதானே என்று கூறும்போது.
இப்னு உமர் ரழியல்லாஹு அவர்களோ தன்னுடைய தந்தையார் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்த்த வண்ணமாய் பார்த்து கொண்டு இருக்கும் போது. அமீருல் முஃமினீன் அவர்கள் இப்னு அலி அவர்களே நீங்கள் கூறியதினை எழுதித்தர முடியுமா என்று வினவ ஆம் என்றதும். எழுதி கொடுத்தார்கள். மீண்டும் அமீருல் முஃமினீன் அவர்கள் இதில் தாங்கள் கையெழுத்து இட முடியுமோ என்று கேட்க இமாம் ஹுசைனார் அவர்கள் கையெழுத்தும் இட்டார்கள். இதை கண்டு வியப்புற்ற இப்னு உமர் அவர்கள் இமாம் ஹுசைனாரின் பிஞ்சு கண்ணங்களில் அன்பு முத்தம் இட்டார்கள். அமீருல் முஃமினீன் அவர்கள் தன்னுடைய மகனை நோக்கி என்னுடைய அருமை மகனே நான் சொல்ல போவதை கவனமாக கேள் எனக்கு என்னுடைய எந்த ஒரு அமலைகொண்டும் என்னுடைய இறைவன் பொருந்துவானோ என்பது எல்லாம் எனக்கு தெரியாது.
ஆனால் இமாம் ஹுசைனார் அவர்கள் கையெழுத்து இட்ட இந்த காகிதம் தான் எனக்கு மன அமைதியை தருகிறது. இன்ஷா அல்லாஹ் நாளை கியாம நாளில் என்னுடைய இறைவன் ஒ உமரே என்னுடைய ஹபிப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்ன உதவி புரிந்தீர் என்று கேட்கும் போது நான் அவர்களுக்கு அடிமையாக இருந்தேன் என்று பதில் உரைப்பேன். இதற்கு என்ன ஆதாரம் என்று என்னுடைய இறைவன் ஒருவேளை கேட்டால் இமாம் ஹுசைனார் அவர்கள் கையொப்பமிட்ட இந்த காகிதம் தான் ஆதாரம் என்று இறைவனுடைய நீதிமன்றத்தில் சமர்பிப்பைன்.
அருமை மகனே அதனால் நீ இந்த காகிதத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்திரு என்னுடைய ஜனாசா தொழுகை முடிந்த பிறகு என்னுடைய நெஞ்சின் மீது வைத்து என்னை கபரினுள் இறக்கிவிடு என்று கண்ணீர் ததும்ப கூறினார்கள்.
SOURCE OF THE BOOK:
KUTHBATH E MUHARRAM, AUTHOR: ALLAMA MUFTI MUTHIYUL MUSTHAFA QADIRI (HAASAN, INDIA)