MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் பிரசங்க மேடை (மிம்பரும்)
ஹஸ்ரத் சையதினா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக்காலம். ஜும்மா பிரசங்கம் மஸ்ஜிதுன் நபவி ஷரிபில் கலிஃபா அவர்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரசங்க மேடை மீது நின்று கொண்டு பேருரை நிகழ்த்தி கொண்டு இருக்கின்றார்கள்.
எல்லா ஸஹாபா பெருமக்களும் அமைதியாக அமர்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னமுறையில் பேருரையை செவிதாழ்த்தி கேட்டுக்கொண்டு இருக்கும் போது, பிஞ்சுபாதங்களை கொண்டு மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் ஒரு குழந்தை பள்ளியினுள் வந்து கொண்டு இருந்தது.
பள்ளியினுள் அமர்ந்து இருந்த அனைவரும் அந்த குழந்தை வருவதை கண்டு தானாகவே முன்வந்து வழிவிட அந்த அழகு பிள்ளை தன்னுடைய பாட்டனாரின் மிம்பரின் மீது ஏறி அமர்ந்தது. கஃலிபா ஹஸ்ரத் சையதினா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை நோக்கி அக்குழந்தை பேசியது.
ஒ கலிஃபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே இது என்னுடைய பாட்டனார் முஹம்மதுர் ரசூல்லுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிம்பர். நீங்கள் உங்கள் பாட்டனாரின் மிம்பரில் போய் நில்லுங்கள் என்று மழழைக் குரலுடன் குழந்தைத் தனத்துடன் கூர்மையான பார்வையை கொண்டு கூறியது.
இதைகண்டு எந்த பதட்டமும் அடையாமல் எல்லா மக்களும் பள்ளியில் பார்த்துகொண்டு இருந்தனர். இதில் இக்குழந்தையின் தந்தையும் அதில் ஒன்று. கஃலிபா ஹஸ்ரத் சையதினா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களோ மிம்பர் படியில் இருந்து கீழ இறங்கினார்கள்.
யா சையதி ! என்று கண்ணீர் வடித்தவாறு அன்பு குழந்தையே. என்னை மன்னிக்க வேண்டும் எனக்கென்று எந்த ஒரு மிம்பரும் இல்லை மகனே. எல்லாம் உங்களுடைய பாட்டனார் தான் எங்களுக்கு தந்தது. எனக்கென்று சொந்த உரிமை இதில் கொண்டாட அனுமதி இல்லை. யா சையதி என்று கட்டிக்கொண்டு அக்குழந்தையின் நெற்றில் முத்தமிட்டு, அக்குழந்தையை அணைத்து தன்னுடைய கையில் சுமந்து கொண்டு மிம்பர் படியில் ஏறி நின்று குத்பaa பேருரை எங்கு நிறுத்தினார்களோ அங்கே இருந்து மீண்டும் ஆரம்பித்தார்கள்.
Soure: Kuthubaath e Muharram, Author: Mufti Muthiyul Musthafa Qadiri, (Haasan, India)
அக்குழந்தையை பற்றி அல்லாமா இக்பால் அவர்கள் கூறும்போது. மஸ்ஜிதுல் ஹராம் ஷரிபின் குடும்பத்தாரின் வரலாறு மிக எளிமையானது ஆனால் பாரம்பரியமானது அது சிவப்பு நிறமானது. அது ஹஸ்ரத் இஸ்மாயில் அலைஹி ஸலாம் அவர்களில் ஆரம்பித்து இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களால் முடிக்கபெற்றது.
அக்குழந்தையின் தந்தை அல்லாஹ்வின் புலியானவர். அக்குழந்தையின் தாய் சொர்கத்து பேரரிசி, அக்குழந்தையும் அக்குழந்தையின் சகோதரரும் சொர்கத்து வாலிபர்களின் தலைவர்கள். அக்குழந்தையின் பாட்டனாரோ எல்லாபடைப்பினங்களின் அருட்கொடை.
யா அபா அப்தில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்.
யா ஹுசைன் அஸ்ஸலாமு அலைக்கும்,
யா சையதுச்ஷுஹதா அஸ்ஸலாமுஅலைக்கும்.