MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
யா ரசூலுல்லாஹ்..
தங்கள் மீது உள்ள நேசத்தினால் எங்கள்
இருதயத்தில் பட்ட காதல் தீப்பொறியானது
எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றியது.
யா ரசூல்லுல்லாஹ் !
தங்களை எஜமான் என்று சொல்லவா?
இல்லை அதிபதி என்று சொல்லவா?
நான் அதிபதி என்றே சொல்லுவேன்,
அதிபதியின் ஹபீபே!
அதிபதிக்கும் ஹபீபும் என்ன வித்தியாசம் இருக்கின்றது.
உன்னுடையது என்னுடையது என்று?
அல்லாஹ்வின் நேசர் !
முழுமையான ஜோதி ஆவர்கள் !
வெளிப்படையில் மனிதராவர்கள் !
ஆனால் சாதாரண மனிதர் அல்ல.
குர்ஆன் நேசரை ஈமான் என்று கூறுகின்றது !
ஈமானோ நேசர் என் உயிர் என்கின்றது.
யா நபியே !
தூதுத்துவத்தின் ஒளி விளக்கே! பாரில் எங்கும் பிரகாசிக்குதே !
நபித்துவத்தின் பிரகாசமே, சுடர்விட்டு ஒளிர்கிறதே !
தடாகத்தின் அமிர்தத்தை பருக கொடுப்பவரே ! தங்கள் திருவதனத்தை காட்டுவீரே !
மனதில் நறுமணத்தை அளிப்பவரே ! எங்கள் கண்களை குளிர செய்வீரே !
எங்கள் உள்ளத்தை மின்னிட செய்பவரே ! ஈமானை அளித்து எங்களை பாதுகாப்பீரே !
எங்கள் கண்களையும் மின்னிட செய்பவரே ! அது பிரகாசிக்கும் வண்ணமே !
சுகமானது உம்மை பின்பற்றுதலே ! சுயநினைவில்லை உங்கள் அன்பினில் இருக்கையிலே !
விழித்துக்கொண்டவர்கள் உம்மை நேசிப்பவர்களே ! உம்மை நேசிப்பவர்கள் விழித்துக்கொண்டார்களே !
ஒவ்வொரு மலர்களிலும் உம்முடைய நறுமணமே ! ஒவ்வொரு ஒளியிலும் உமது பிரகாசமே !
மலர்களின் நறுமணத்திலும் தாங்களே ! ஒவ்வொரு ஒளியிலும் தாங்களே !
உம் அருள் வாசலிலிருந்தே நாம் உண்ணுகின்றோம் ! உம் அருள் வாசலிலிருந்தே நாம் பருகுகின்றோம் !
உண்பதெல்லாம் உமது உணவே ! அருந்துவதேல்லாம் உமது நீர் துளிகளே !
என் நேர்ச்சையை பூர்த்தியாக்குபவரே ! நான் உம்மை நாடிவந்த போதிலே !
உம் பவள செவிகளிருந்து என் கதையை கேட்பீரே !
சொன்னாலும், சொல்லாவிட்டாலும், செய்தாலும், செய்யாவிட்டாலும்
நான் சொல்லவந்த விடயத்தை, நேசரே நீங்கள் அறிவீரே !
அவர்களுடன் உறவில்லை, வஹாபிகள் உங்கள் எதிரிகள் அல்லவா?
நான் உங்கள் திருக்கரத்தினை பற்றிப்பிடித்தாலே போதுமே!
என்னுடைய கண்ணில் மலருங்கள் என் நபியே ! என் மனதில் வருகை தாருங்கள் என் நபியே !
என் மனம் திருப்தி அடையவேண்டுமே ! என் மனம் பிரகாசித்து கொண்டே இருக்கட்டுமே !
உங்கள் ஒளியாலே ! என் மனம் பிரகாசிக்குதே !
என் மறுமையும் பிரகாசிக்கனுமே ! இது என் வேண்டுகோளே!
துடிதுடித்து அழுதேனே ! நான் இங்கு பிறக்கையிலே !
எதையும் அடையவில்லை வேதனை அடைந்த பிறகுமே !
என் இறைவனே ! நான் நேசரின் சமூகம் செல்லவேண்டுமே !
உம்முடைய சந்நிதானத்தில் நான் வரும் போது சிரம் பணிகின்றேன் !
இது சஜ்தா என்று சொல்லாதீர்கள் 'வஹாபிகளே'?
என் சிரத்தை அன்பின் அரசருக்கு காணிக்கை ஆக்குவேனே !
Source:
SAMAN E BAKSHISH (NAAT E DEEWAN)
Musannif:
Musthafa Raza Khan Noori Alahi Rahma
இறைவனே!
என்னுடைய எல்லா நிலைகளிலும் உன்னுடைய அருட்கொடைகளால் அருள்வாயாக !
நான் சீரழியும் தருணத்தில், என்னை காப்பாற்றும் உன் நேசருடன் இருந்திட செய்வாயாக !
மரணத்தின் கஷ்டங்கள் என்னை அண்மிக்கும் வேளையிலே, உன் நேசரை காணும் மகிழ்ச்சியில் இருந்திட செய்வாயாக !
மண்ணறையில் இருள் சூழ்திடும் போது உன் நேசரின் திருவதனத்தினைக் கொண்டு பிரகாசமாக்குவாயாக !
இறுதிநாளின் குழப்பத்தில் எங்களை காக்கும்
உன் நேசருடன் எங்களை இருந்திட செய்வாயாக !
எங்களுடைய நாவு தாகத்தில் வறண்டு துடிக்கையிலே 'கவ்ஸர்' தடாகத்தினை பருக கொடுக்கும் அன்பின் அரசருடன் எங்களை இருந்திட செய்வாயாக !
இறுதிநாளின் உஷ்ணத்தினால் எங்கள் உடல்கள் எரியும் போது
நிழலற்ற தலைவரின் கொடியின் கீழ் எங்களை இருந்திட செய்வாயாக !
இறுதிநாளின் உஷ்ணத்தினால் எங்கள் உடல்கள் எரியும் போது குளிர்ந்த காற்றுடன் நேசரின் அருகில் இருந்திட செய்வாயாக !
எங்கள் நன்மை தீமைகளின் பட்டோலைகள் திறக்கப்படும் போது உன் அடிமைகளின் பிழைகளை மறைத்து கொடுப்பவருடன் இருந்திட செய்வாயாக !
எங்கள் பாவங்களினால் கண்கள் கண்ணீர் சிந்தும் வேளையிலே
புன்னகைக்கும் நேசரைடைய இதழ்களின் 'துஆ'-வை கொண்டு அருள்வாயாக !
Source: Hadai Ke Bakshish
Ahmad Raza Khan Alahi Rahma
தமிழ் - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - இமாம் அஹ்மத் ரஸாகான் கவிதைகள்